wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 43

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


அள்ளி விடுதல்



a)

அவமானம் ஏற்படுத்துதல்

b)

உறுதி பூணுதல்

c)

ஏமாற்றித் தப்புதல்

d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

2.

கொடுக்கப்பட்டுள்ள உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

b)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

c)

தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

d)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

3.

படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடை அணிகலன்

b)

எலும்பும் தோலும்

c)

அங்கும் இங்கும்

d)

மேடு பள்ளம்

4.

தக தக எனும் இரட்டைக்கிளவியைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
5.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

d)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

6.

வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?

a)

உலகநாத பண்டிதர்

b)

பாரதியார்

c)

குமர குருபர சுவாமிகள்

d)

அதிவீர ராம பாண்டியன்

7.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


தான் சிறு வயதில் கண்ட சாலை விபத்து தன் மனத்தில் அழியாமல் பதிந்திருப்பதாக யாழினி கூறினாள்.

a)

காட்டுத் தீ போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

மலரும் மணமும் போல

d)

கண்ணினைக் காக்கும் இமை போல

8.

கொடுக்கப்படும் படம் உணர்த்தும் பழமொழியைத் தெரிவு செய்க.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

சிக்கனம் சீரளிக்கும்

9.

கீழ்க்காணும் ஆத்திசூடியில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது?


ஔவியம் பேசேல்

a)

முயற்சி

b)

உழைப்பு

c)

கோபம்

d)

பொறாமை

10.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான விளக்கத்தைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அருமை பெருமை - மகிழ்ச்சியுடன்

b)

மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி

c)

நன்மை தீமை - நல்லது கெட்டது

d)

ஆடல் பாடல் - பாட்டும் நடனமும்

11.

வல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

நண்டு

b)

ஞாயிறு

c)

கடவுள்

d)

வண்டு

12.

கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஜன்னல்

b)

புஷ்பம்

c)

ஐந்து

d)

ஸர்ப்பம்

13.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


குமரன் பேச்சுப்போட்டியில் முதல் பரிசை

A B C


வென்றான்.

D

a)

A

b)

B

c)

C

d)

D

14.

கீழ்க்காணும் வாக்கியங்களில் மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தலைமையாசிரியர் வெற்றிப் பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.

b)

விமலன் அகிலனோடு கடைக்குச் சென்றான்.

c)

அம்மா தங்கைக்குப் புதிய பொம்மை வாங்கித் தந்தார்.

d)

பிராணிகளின்பால் அன்பு கொள்ள வேண்டும்.

15.

படத்திற்கேற்ற சரியான பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

உழச்சி

b)

உழவள்

c)

உழவி

d)

உழத்தி

16.

கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


நீதி தவறா பாண்டிய மன்னன் பல்லாண்டு வாழ்க.

a)

செய்தி வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

17.

குமுதன் (அ) காலணியை எடுத்தான். அப்பா (ஆ) காலணியை வைத்தார்.


விடுப்பட்ட இடத்திற்கு ஏற்ற சரியான இலக்கண மரபு எது?

a)

தன் , தான்

b)

தம் , தன்

c)

தன் , தம்

d)

தம் , தாம்

18.

சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஔவையார் நீதி நூல்களை இயற்றினார்.

b)

அம்மாவும் அப்பாவும் பேரங்காடிக்குச் சென்றனர்.

c)

பாவணன் கதைப்புத்தகத்தை வாசித்தான்.

d)

இளஞ்சேந்தன் தங்கையோடு சந்தைக்குச் சென்றான்.

19.

கீழ்க்காண்பனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

ஓர் ஆடு

b)

ஒரு கூண்டு

c)

அஃது கௌளி

d)

அஃது ஔடதம்

20.

சரியான நிறுத்தக்குறியை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிவா கடைக்குச் சென்று பழங்கள் கய்கறிகள் மீன்கள் வாங்கினான்.

b)

தைப்பூசம் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

c)

’டிங்கி’ காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?

d)

ஐயோ, என் கால் வலிக்கிறதே.

21.

சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடி யாது?


சந்தியா தன் பெற்றோரின் துணையோடு நடமாட்டுக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டத்தில் தன்னால் இயன்றதைப் பிறருக்குச் செய்தாள்.

a)

ஒப்புர வொழுகு

b)

உடையது விளம்பேல்

c)

இயல்வது கரவேல்

22.

படத்திற்குப் பொருந்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

உடலினை உறுதிசெய்

c)

ஊண்மிக விரும்பு

23.

கவிதைக்குப் பொருந்தும் கொன்றை வேந்தன் எது?

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

24.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

25.

பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

c)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.

26.

கீழ்க்காணும் செய்யுளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

a)

எல்லார்க்கும் பெய்யும் மழை

b)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

c)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

27.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவர்.

a)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

c)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

28.

இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

29.

மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


நாக்கு நீளுதல்

a)

உறுதி பூணுதல்

b)

அவமானப்படுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

30.

மகள் : அப்பா, நாம் குளிக்கும் இடத்தை நெருங்கி விட்டோமா?


அப்பா : ....... என்ற ஓசை கேட்கின்றதா? ஆம் நெருங்கி விட்டோம்.

a)

சர சர

b)

சல சல

c)

கிலு கிலு

31.

படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடியைக் கண்டறிக.

a)

உடலினை உறுதி செய்.

b)

அச்சம் தவிர்

c)

இளைத்தல் இகழ்ச்சி

32.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

தக தக

b)

சல சல

c)

கல கல

33.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்மை தீமை - நல்லது கெட்டது

b)

தாயும் சேயும் - தாயும் குழந்தையும்

c)

அல்லும் பகலும் - எப்பொழுதும்

34.

படம் உணர்த்தும் பழமொழி யாது?

a)

சிக்கனம் சீரை அளிக்கும்

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

வெள்ளம் வருமுன் அணைபோடு

35.

படத்திற்கு ஏற்புடைய வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

36.

படத்திற்குப் பொருந்தும் உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

எலியும் பூனையும் போல

c)

நகமும் சதையும் போல

37.

மேற்கண்ட படத்தைக் குறிக்கும் இரட்டைக்கிளவியோடு தொடர்புடைய பிற படங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
38.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

போகத விடந்தனிலே போக வேண்டாம்

b)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

c)

ஓதாமலொரு நாளும் இருக்க வேண்டாம்

39.

மேற்கண்ட படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடியைக் கண்டறிக.

a)

அச்சம் தவிர்

b)

ஒளடதம் குறை

c)

இளைத்தல் இகழ்ச்சி

40.

படத்தில் வரும் கவிதை உணர்த்தும் திருக்குறள் யாது?

a)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருக்கக் காய் கவர்ந்தற்று

41.

படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

ஆடல் பாடல்

c)

ஆடை அணிகலன்

42.

படத்திற்குப் பொருந்தும் இரட்டைக்கிளவி?

a)

நற நற

b)

கல கல

c)

மள மள

43.

படம் உணர்த்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

நகமும் சதையும் போல

c)

எலியும் பூனையும் போல