Worksheetsதிருக்குறள் ஆண்டு 4
Total questions: 38
Worksheet time: 2hrs 32mins
"காலத்தைத் தவறவிட்டால் மீண்டும் பெறலாம். " இக்கூற்று சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
"சிறு வயதிலிருந்தே _______ எனும் வரத்தைப் போற்றிச் செயலாற்றி வாழ்வில் மேன்மை அட வேண்டும்.
காலம்
அம்மா
தங்கம்
உண்மை
"திரு. மாறன் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்." சூழலுக்கு ஏற்ற இணைமொழியைக் கண்டுபிடுக
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
"நாம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வாழும் சமுதாயமாகத் திகழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்." சூழலுக்கு ஏற்ற இணைமொழி என்ன?
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற குறளின் வழி திருவள்ளுவர் எதனை உணர்த்துகிறார்?
உண்மையான நட்பு
காலத்தின் மகிமை
கல்வியின் அவசியம்
நண்பர்களின் மகிமை
மூன்றாம் உருபுகள் யாவை? (3 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.)
கு
ஆல், ஆன்
ஒடு, ஓடு
ஐ
உடன்
"கடை குமரனால் கட்டப்பட்டது.". இவ்வாக்கியத்தில் உள்ள வேற்றுமை உருபு யாது?
1-ஆம் வேற்றுமை உருபு
2-ஆம் வேற்றுமை உருபு
3-ஆம் வேற்றுமை உருபு
4-ஆம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு யாது?
ஆல்
ஓடு
ஐ
கு
" அண்டை அயலார்" என்ற இணைமொழியின் பொருள் என்ன?
அக்கம் பக்கத்தார்
எப்பொழுதும்
சுற்றும் முற்றும்
ஆண்ட அயல்
"அன்றும் இன்றும்" என்ற இணைமொழியின் பொருள் என்ன?
எல்லாம் இடத்திலும்
இரவிலும் பகலிலும்
எந்தக் காலத்திலும்
மூலை முடக்கு
திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்
வையத்துள் வாழ்வாங்கு___________________________
வானுறையும் தெய்வத்துள்
தெய்வத்துள் வைக்கப்படும்
வாழ்பவன் வானுறையும்
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வாழ்வாங்கு- _______________________________
வானுலகத்தில்
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வானுறையும்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வையத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
தெய்வத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழவேண்டிய
வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்
உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.
திருக்குறளை இயற்றிய தமிழ்ச்சான்றோர் யார்?
கம்பர்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
______________________________
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
தோன்றலின் தோன்றாமை நன்று
ஆதிபகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
____________________________
தோன்றலின் தோன்றாமை நன்று
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
இனிய உளவாக இன்னாத கூறல்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க
'தோன்றின் புகழொடு தோன்றுக' - என்பதன் பொருள் என்ன?
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங் கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும்.
பிறக்கும் போதே புகழுடையவர்களாய் பிறக்க வேண்டும்
புகழ்பெற்றவர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ வேண்டும்
தோன்றலின் தோன்றாமை நன்று என்பதன் பொருள் யாது?
தொடர்ந்து சாதனை படைக்க வேண்டும்
பிறக்காமல் இருப்பது சிறப்பு
அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நன்று
அத்துறையில் புகழை அடைய வேண்டும்
இகழ்வாரை நோவது எவன்
______________________________________________________
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
தொட்டனைத் தூறும் _________________ மாந்தார்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
இகழ்வாரை
ஆதி பகவன்
மணற்கேணி
திருவினையாக்கும்
இக்குறளின் சரியான பொருள் என்ன ?
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் _________ ?
அறம்
அறிவு
மழை
தொட்டனைத் தூறும் _________ மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணி
மணல் மேணி
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
_____________________________________________________.
தோன்றலின் தோன்றாமை நன்று.
கற்றனைத் தூறும் அறிவு
தெய்வத்துள் வைக்கப் படும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
.............................................................. என்ற குறளை நிரைவு செய்க.
புந்கண்நீர் பூசல் தரும்
புன்கண்நீர் பூசல் தரும்
புண்கண்ணீர் பூசல் தரும்
புண்கண்நீர் பூவல் தரும்
அன்பிற்கும் உண்டோ ...............................................
புன்கண்நீர் பூசல் தரும்
அடைக்குந்தாழ் ஆர்வலர்
அடைக்கும்தாழ் ஆர்வலர்
ஆடைக்குந்தாழ் ஆர்வலர்
அடைக்குந்தாழ் ஆர்வாலர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்பது ........................... திருக்குறளாகும்.
73-ஆம்
150-ஆம்
71-ஆம்
70-ஆம்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் எனும் திருக்குறளின் பொருள் யாது?
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாள் உண்டோ? பல அன்புடையவரின் கண்ணீரே அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் கண்ணீரே அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற குறளின் பொருளுக்கேற்ப நாம் நமது அன்பைக் ............................ வழி வெளிப்படுத்தலாம்.
தாழ்
கண்
கண்ணீர்
நீர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற திருக்குறள் எந்த பாலைச் சேர்ந்ததாகும் ?
அறத்துப்பால்
பொருட்பால்
இன்பத்துப்பால்
திருப்பால்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற திருக்குறள் எந்த அதிகாரத்தைச் சேர்ந்ததாகும் ?
பண்புடைமை
அன்புடைமை
பொருளுடைமை
அன்பின்மை
