wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியம்

Total questions: 9

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அமைப்பு அடிப்படையிலான வாக்கியங்களை அடையாளம் கண்டு விளக்குக.

தொடர் வாக்கியம்

a)

அக்காள் காய்கறி வாங்கி சமைத்தாள்

b)

பள்ளி நிர்வாகத்தினர் சந்திப்புக் கூட்டம் நடத்தினர்

c)

தம்பியின் பசியை ஆற்றுவதற்காக அம்மா இட்டிலிக்கு அரைத்த மாவில் தோசை சுவையான சுட்டார்.

3.

தொடர் வாக்கியத்திற்கும் கலவை வாக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குக.

a)

தொடர் வாக்கியம்

ஓர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்களையும்

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்

b)

தொடர் வாக்கியம்

ஓர் எழுவாய் கொண்டிருக்கும்

c)

செயப்படு பொருள் இராது

d)

தொடர் வாக்கியம்

ஓர் எழுவாய் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்

4.

வாக்கிய வகையினைக் கண்டுபிடிக்கவும்

தலைமையாசிரியர் பரிசளிப்பு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

a)

அயற்கூற்று வாக்கியம்

b)

செய்வினை வாக்கியம்

c)

பிறவினை வாக்கியம்

d)

உடன்பாட்டு வாக்கியம்

5.

கீழ்வரும் நோக்க அடிப்படையிலான வாக்கியங்களுள் எது சரியான வகை எனக் குறிப்பிடுக

a)

முகுந்தன் பள்ளிக்கு வரவில்லை

(தன்வினை வாக்கியம்)

b)

மாலதி தம்பியை உண்பித்தாள்.

(செயப்பாட்டு வாக்கியம்)

c)

நளவெண்பா புலவர் புகழேந்தியால் இயற்றப்பட்டது.

(செயப்பாட்டு வாக்கியம்)

d)

அம்மா தம்பிக்குத் தோசை ஊட்டினார்

(பிறவினை வாக்கியம்)

6.

கலவை வாக்கியம் என்றால் என்ன?

a)

பல்வேறு வாக்கியங்கள் கலந்து உருவாக்கம்

பெற்றிருக்கும்

b)

முதன்மை வாக்கியம் இருக்கும்

c)

சார்பு வாக்கியங்கள் இருக்கும்

d)

ஓர் எழுவாய், பல பயனிலைகளைக் கொண்டிருக்கும்

7.

வாக்கியம் என்றால் என்ன?

a)

சொற்கள் தொடர்ச்சியாக அமைந்து முழுக் கருத்தினைத் தெரிவிக்கும்

b)

தெளிவான கருத்தைத் தெரிவித்தல் வாக்கியத்தின் முக்கிய நோக்கம் ஆகும்

c)

ஒரு முழுமையான வாக்கியத்தில் எழுவாய், செயப்படு பொருள், பயனிலை ஆகிய     உறுப்புகள் இடம் பெறா.

d)

ஒரு முழுக் கருத்தைத் தெரிவிக்கும் சொற்கூட்டம்

8.

 சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

காட்சிக்கு வைத்திருந்த கைத்தறி சேலைகள்பார்வையாளர்களைக் கவர்ந்தன.

a)

எழுவாய்

பார்வையாளர்களை

b)

எழுவாய்

கைத்தறி சேலைகள்

c)

செயப்படுபொருள்

காட்சி

d)

பயனிலை

கவர்ந்தன

9.

சரியான விடையைக் கண்டு பிடிக்கவும்.

திருக்குறள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

a)

எழுவாய்

திருக்குறள்

b)

பயனிலை

திகழ்கிறது

c)

செயப்படுபொருள்

திருக்குறள்

d)

செயப்படுபொருள்

வழிகாட்டி

10.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குச் சரியான அயற்கூற்று வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும்.

"அனைவரும் நாளை கண்டிப்பாகத் தமிழ்மொழிப் புத்தகத்தை எடுத்து வர வேண்டும் " என்று ஆசிரியர் கூறினார்.

a)

அனைவரும் நாளை கண்டிப்பாகத் தமிழ்மொழிப் புத்தகத்தை எடுத்து வர வேண்டும் என்று ஆசிரியர் கூறினார்.

b)

மறுநாள் கண்டிப்பாகத் தமிழ்மொழிப் புத்தகத்தை எடுத்து வருமாறு ஆசிரியர் கூறினார்.

c)

அனைவரும் மறுநாள் கண்டிப்பாகத் தமிழ்மொழிப் புத்தகத்தை எடுத்து வர வேண்டும் என்று ஆசிரியர் கூறினார்.