Worksheetsதொடர் வாக்கியம் (ஆண்டு 4) கடினம்
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு 3 வாக்கியங்கள் கொண்ட தொடர் வாக்கியங்களை அடையாளம் காண்க.
அபிராமி – படித்தாள் – தேர்வில் – வெற்றி
அபிராமி நன்றாகப் படித்து பள்ளி தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்றாள்.
அபிராமி படித்ததால் பள்ளி தேர்வில் வெற்றி பெற்றாள்.
அபிராமி நன்றாகப் படித்தாள். பின்பு தேர்வில் வெற்றி பெற்றாள்.
கீழ்க்காண்பவற்றுள் எது தொடர் வாக்கியம்?
மேகலா முதல் பரிசு வென்றாள்.
அருண் நீச்சல் அடித்தான்.
சிநேகா பள்ளிக்கு வந்தாள் ; பாடங்களைப் படித்தாள்.
சுமதியின் வெற்றியை அனைவரும் பாராட்டினர்.
படத்தைத் தொடர்புப்படுத்தும் சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மோகன் காலையில் எழுந்தான்; பல் துலக்கினான்.
மோகன் காலையில் எழுந்தான்.
மோகன் காலையில் எழுந்தான், குளித்தான்.
மோகன் காலையில் எழுந்தான் ; பல் துலக்கினான்; குளித்தான்.
கீழ்க்காணும் வாக்கியங்களில் எது தொடர் வாக்கியம் அல்ல?
மரங்களை வெட்டுதல் கூடாது. மரங்களால் நிறைய நன்மைகள் உள்ளன.
அப்பா கடைக்குச் சென்று நாளிதழ் வாங்கினார்.
சீலன் வசதி குறைவானவன்; இருப்பினும், மிகவும் புத்திசாலி.
வாணி கோவிலுக்குச் சென்றாள்; இறைவனை வழிப்பட்டாள்.
கீழ்க்காணும் தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றியமைத்திடுக.
1.வித்யாவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டது 2.அவள் மருத்துவரை நாடினாள்.
வித்யா வயிற்றுவலியோடு மருத்துவரை நாடினாள்.
வித்யா வயிற்றுவலிக்கும் மருத்துவரை நாடினாள்.
வித்யாவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டது; ஆகையால், அவள் மருத்துவரை நாடினாள்.
கீழ்க்காணும் வாக்கியங்களில் தொடர் வாக்கியம் அல்லாததைத் தெரிவு செய்க.
சீலா பக்திப் பாடல் பாடினாள்.
அருண் பூச்செடிகளையும் பழ மரங்களையும் நட்டான்.
சுதாகர் ஓய்வின்றி உழைத்து நோய்வாய்ப்பட்டுள்ளான்.
ஓர் எழுவாய் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பயனிலைகளைக் கொண்டு முடிவது _________________ஆகும்.
செயப்பாட்டுவினை வாக்கியம்
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது தொடர் வாக்கியம் அல்ல.
அக்காள் நன்றாகப் படித்தாள்; ஆனாலும், தேர்ச்சியடையவில்லை.
சாந்தி ஆடற்கலையை முறையாகப் பயின்று அரங்கேற்றம் செய்து பாராட்டுப் பெற்றாள்.
பள்ளி மாணவர்கள் திடலில் பந்து விளையாடுகிறார்கள்.
கீழ்க்காணும் வாக்கியங்களுக்கு ஏற்ற தொடர் வாக்கியம் எது?
விவசாயிகள் வயலை உழுதனர்.
விவசாயிகள் நாற்றுகளை நட்டனர்.
விவசாயிகள் நாற்றுகளுக்கு உரமிட்டனர்.
விவசாயிகள் வயலை உழுது நாற்றுகளுக்கு உரமிட்டனர்.
விவசாயிகள் வயலை உழுதனர்; நாற்றுகளை நட்டனர்; நாற்றுகளுக்கு உரமிட்டனர்.
வயலை உழுது நாற்றுகளை நட்டு உரமிட்டவர் விவசாயி.
கீழ்க்காணும் தனி வாக்கியங்களுக்குப் பொருத்தமான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றது.
திருக்குறள் உலகப் பொதுமறையாகும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றதால் உலகப் பொது மறையாகும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்ற உலகப் பொதுமறையாகும்.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதால் எக்காலத்திற்கும் ஏற்ற பொதுமறையானது.
