wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி ஆண்டு 3

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சூரியன் ஒளிபட்டுக் கடல் நீர் _________ வென காட்சியளித்தது.

a)

தக தக

b)

மள மள

c)

நற நற

2.

தன் தூக்கத்தைக் கெடுத்த தம்பியைப் பார்த்து அண்ணன் கோபத்தில் ________வென பற்களைக் கடித்தார்.

a)

நற நற

b)

தக தக

c)

மள மள

3.

________வென கதிரவன் ஒளிபட்ட கடல் நீரைப் பார்த்து இரசித்தேன்.

a)

மள மள

b)

தக தக

c)

நற நற

4.

தோழியின் வீட்டிற்குச் செல்வதற்கு முன் நளினி வீட்டு வேலைகள் அனைத்தையும் ____________ வென செய்து முடித்தாள்.

a)

மள மள

b)

தக தக

c)

நற நற

5.

___________ வென எரியும் தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.

a)

தக தக

b)

மள மள

c)

நற நற

6.

முக்கியமான கோப்பு ஒன்றனைத் தொலைத்துவிட்ட பணியாளரைப் பார்த்து சினம் கொண்ட மேலதிகாரி ______ வென பற்களைக் கடித்தார்.

a)

மள மள

b)

தக தக

c)

நற நற

7.

ஆசிரியர் கொடுத்த பாடங்களை மாணவர்கள் _______ வெனச் செய்தனர்.

a)

மள மள

b)

தக தக

c)

நற நற

8.

அதிகாலையில் எழுந்து ___________ வென எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்னரே அம்மா அலுவலகம் செல்வார்.

a)

நற நற

b)

தக தக

c)

மள மள

9.

மணப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் __________ வென ஜொலித்தன.

a)

மள மள

b)

நற நற

c)

தக தக

10.

______ வென வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்தால் மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதி கிடைக்கும் என அம்மா கூறினார்.

a)

மள மள

b)

தக தக

c)

நற நற

11.

அம்மாவுடன் கடைக்கு வர அடம்பிடிக்கும் தங்கையின்மீது கோபம் கொண்டு அக்காள் பற்களை ________ வென கடித்தார்.

a)

மள மள

b)

நற நற

c)

தக தக