Font size
Worksheets7 SS NMMS QUIZ -2
Total questions: 150
Worksheet time: 1hrs 28mins
1. கீழ்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
1. இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு இத்தாக்களை வழங்கினார்.
2. ’இத்தா’ என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உயர்பதவிக்காக
கொடுக்கப்பட்ட நிலமாகும்.
3. நிலத்தைப் பெற்றவர்கள் ‘இத்தாதார்’ அல்லது ‘முக்தி’ என்று அழைக்கப்பட்டனர்.
4. ’இத்தாதார்’ தனக்கு வழங்கப்பட்ட நிலங்களில் இருந்து வரி வசூல் செய்து கொள்வர்.
1). 1,2 –சரி
2). 3,4 - சரி
3). 1,2,3 – சரி
4). 1,3,4 - சரி
2. தவறான இணையை கண்டறியவும்.
1.குத்புதீன் ஐபக் - குவ்வத் - உல்-இஸ்லாம் மஸ்ஜித்.
2.இல்துமிஷ் - குதுப்மினருக்கு அடிக்கல் நாட்டியவர்.
3.ஒளவுரங்கசீப் - ஆலம்கீர்
4-முகமது கோரி மற்றும் பிரிதிவிராஜ் சவுகான் - தரைன் போர்
3. ---------- என்பவரின் மகள் ரஸ்யா சுல்தானா.
1.இல்துமிஷ்
2.முகமது கோரி
3.முகமது கஜினி
4.குத்புதீன் ஐபக்
4. துக்ளக் ஆட்சியில் வேலைவாய்ப்பு அமைப்பை ஏற்படுத்தியவர் _ _ _ _
1. முகமது பின் துக்ளக்
2. பிரோஷா துக்ளக்
3. கியாசுதீன் துக்ளக்
4. நசீர் உத்-தீன் முகமது துக்ளக்
5.’லக்பாட்ஷா’ எனப்படுபவர்--------------
1. குத்புதீன் ஐபக்
2. இல்துமிஷ்
3. பால்பன்
4. சுல்தானா ரஸ்யா
6. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது? நிறுவப்பட்ட ஆண்டு---------
1. பாபர் - 1526
2.கோரி முகமது - 1206
3.குத்புதீன் ஐபக் - 1207
4.ஏதுமில்லை
7. ‘பண்டகன்’ எனப்படுபவர் ---------------
1. ஆளுநர்
2. படை வீரர்கள்
3. வணிகர்கள்
4. அடிமைகள்
8. ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீக சொல் ----------
1. மாம்லுக்
2. பண்டகன்
3. சகல்காணி
4. ஏதுமில்லை
9. வட இந்தியாவில் மாம்லுக் வம்சத்தை தோற்றுவித்தவர்----------
1. குத்புதீன் ஐபக்
2. பால்பன்
3. இல்துமிஷ்
4. முகமது கோரி
10. ’மாம்லுக்’ எனும் அரேபிய வார்த்தையின் பொருள்----------------
1. வீரர்கள்
2. அடிமைகள்
3. படைத்தளபதி
4. ஏதுமில்லை
11. ‘பண்டகன்’ அடிமைகளை பேணிப் பாதுகாத்து வந்தவர்---------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
12. தலைநகரை லாக்கூரிலிருந்து டெல்லிக்கு மாற்றிய சுல்தான்------------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
13. குவ்வத் – உல் - இஸ்லாம் மசூதியை டெல்லியில் கட்டியவர்--------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
14. குதுப்மினருக்கு அடிக்கல் நாட்டியவர் --------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
15. குதுப்மினார் யாரால் கட்டி முடிக்கப்பட்டது?
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
16. போலோ விளையாட்டின் போது கீழே தவறி விழுந்து இறந்த சுல்தான் -------------------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
17. மங்கோலியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள ‘நாற்பதின்மர்’ எனும் துருக்கி பிரபுக்கள்
குழுவை உருவாக்கியவர்----------------
1. இல்துமிஷ்
2. குத்புதீன் ஐபக்
3. முகமது கோரி
4. பால்பன்
18. இல்துமிஷிடம் அடைக்கலம் கேட்டு வந்தவர் ---------------------
1. ருக்குதின் பிரோஷா
2. குவாரி ஜம்சா ஜலாலுதீன்
3. நாற்பதின்மர் குழு
4.ஏதுமில்லை
19. மங்கோலியர்களில் மிகத் திறமை வாய்ந்த அரசன் -------------------
1. முகமது கோரி
2. செங்கிஸ்கான்
3. குவாரி ஜம்சா ஜலாலுதீன்
4. யாவரும் இல்லை
20. ‘சகல்காணி; என்பது ----------------.
1. மசூதி
2. கோட்டை
3. நாற்பதின்மர்
4. ஏதுமில்லை
21. இல்துமிஷ் – ன் மகள் ரஸியா சுல்தானா ஆட்சிப் பொறுப்பேற்க காரணம் ----------------
1. இல்துமிஷ் - ன் மகன் ருக்குத்தீன் பிரோஷா திறமை அற்றவராக இருந்ததால்.
2. இல்துமிஷ் – ன் மகன் ருக்குத்தீன் பிரோஷா இறந்துவிட்டதால்.
3. இல்துமிஷ் – ன் மகன் ருக்குத்தீன் பிரோஷா தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்ததால்.
4. இவற்றில் ஏதுமில்லை
22. சுல்தானியர்களில் ஆட்சி புரிந்த ஒரே ஒரு பெண் சுல்தான்----------------
1. ஜான்சி ராணி
2. ரஸியா சுல்தானா
3. மீராபாய்
4. யாவரும் இல்லை
23. இல்துமிஷ் உருவாக்கிய நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர்-------------
1. ரஸியாசுல்தானா
2. குத்புதீன் ஐபக்
3. கியாசுதீன் பால்பன்
4. யாவரும் இல்லை
24. சுல்தானிய அரசர்களில் முதன் முதலில் ஒற்றர் துறையை ஏற்படுத்தியவர் -------------------
1. குத்புதீன் ஐபக்
2. கியாசுதீன் பால்பன்
3. இல்துமிஷ்
4. ரஸியா சுல்தானா
25. கியாசுதீன் பால்பனுக்கு எதிராக கழகம் செய்த வங்காள ஆளுநர் ---------------
1. துக்ரில் கான்
2. ஜலாலுதீன் யாகுத்
3. செங்கிஸ்கான்
4. யாவரும் இல்லை
26. வடமேற்கு இந்தியாவை சேர்ந்த ராஜபுத்திர முஸ்லிம் இனத்தவருக்கு----------------என்று பெயர்.
1. மாம்லுக்
2. மியோக்கள்
3. சந்தேலர்கள்
4. துக்ளக்குகள்
27. மங்கோலியர்கள் சட்லஜ் நதியை தாண்டி படையெடுத்து வர மாட்டார்கள் என்ற உறுதி
மொழியை பால்பன் யாரிடமிருந்து பெற்றார்?
1. ஜலாலுதீன் யாகுத்
2. செங்கிஸ்கான்
3. குலகு கான்
4. துக்ரில் கான்
28. பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் -----------------
1. அபுல் பாசல்
2. அல்பருணி
3. அமீர் குசுரு
4. இபன்பதுதா
29.தவறான இணையைத் தேர்ந்தெடு.
1.மாம்லுக் வம்சத்தை தோற்றுவித்தவர் - குத்புதீன் ஐபக்
2.இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் - முகமது கோரி
3.கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
4.துக்ளக் வம்சத்தை தோற்றுவித்தவர் - கியாசுதீன் துக்ளக்
1). 1,2 தவறு
2). 2,3 தவறு
3). 3,4, தவறு
4). ஏதுமில்லை
30.பொருத்துக.
1. தேவகிரி - பாண்டியர்கள் (A)
2. துவார சமுத்திரம் - ஹொய்சாளர்கள் (B)
3. வாரங்கல் - யாதவர்கள் (C)
4. மதுரை - காகதியர்கள் (D)
1).(1-B) (2-C) (3-D) (4-A)
2).(1-C) (2-B) (3-D) (4-A)
3).(1-C) (2-D) (3-B) (4-A)
4).(1-B) (2-A) (3-D) (4-C)
31.சரியான கூற்றை ஆராய்க.
கூற்று -1 காராவின் ஆளுநர் அலாவுதீன் கில்ஜி.
கூற்று -2 ஜலாலுதீன் கில்ஜியின் சகோதரியின் மகன் அலாவுதீன் கில்ஜி.
கூற்று -3 அலாவுதீன் கில்ஜியின் முக்கியமான படையெடுப்பு தேவகிரி படையெடுப்பு ஆகும்.
கூற்று -4 ஜலாலுதீன் கில்ஜி தனக்குப் பிறகு அலாவுதீன் கில்ஜியை அரியணையில் ஏற்றினார்.
1). 1,2 –சரி
2). 1.2,3 - சரி
3). 1,3 – சரி
4). 1,3,4 - சரி
32. இந்திய நாட்டில் உள்ள மிகப்பெரிய கோட்டை------------
1. ஆக்ரா கோட்டை
2.சித்தூர் கோட்டை
3.குவாலியர் கோட்டை
4.டெல்லி செங்கோட்டை
33. எந்த நதிக்கரையில் சித்தூர் அமைந்துள்ளது?
1. நர்மதை - தபதி
2. கங்கை - யமுனா
3. பெராக் - காம்பிரி
4. காவிரி - தாமிரபரணி
34.ராஜபுத்திரர் வழக்கப்படி போரில் தோற்கும் நிலையில் நடத்தப்படும் சடங்கு-------------
1. ஜவ்ஹர்
2.தலாக்
`3. ஏதுமில்லை
4. பெராக்
35. கூற்று-1
தோற்கும் நிலையில் ராஜபுத்திர வம்ச வழக்கப்படி கோட்டையில் உள்ள ஆடவர்கள் எல்லாம் கோட்டையை விட்டு வெளியேறி போர்க்களத்தில் இறப்பர்.
கூற்று-2
பெண்கள் அனைவரும் கோட்டையில் தீ மூட்டி அதில் புகுந்து தன்னை மாய்த்துக் கொள்வர். இதில் மகாராணியும் அடங்குவர் இந்நிகழ்வு ஜவ்ஹர் எனப்படுகிறது.
1). 1,2 –சரி
2). 1 - சரி
3). 2 – சரி
4). 1 – சரி 2 தவறு
36. ஜூனாகான் பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டார் ------------
1. துக்ளக்
2. முகமது பின் துக்ளக்
3. பிரோஷா துக்ளக்
4. ஏதுமில்லை
37.கூற்றை ஆராய்க.
கூற்று - கியாசுதீன் துக்ளக் துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டினார்.
காரணம் - தன் மகன் ஜூனா கான் வாரங்கல் படையெடுப்பில் வெற்றி கொண்டு பெரும் செல்வத்தை கொள்ளையடித்துக் கொண்டு வந்ததால்.
1.கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை.
2.கூற்றுக்கான காரணம் சரியே.
3.கூற்று காரணம் இரண்டும் தொடர் பற்றவை.
4.கூற்று சரி காரணம் தவறு.
38. தெளலதாபாத் காலியாக கைவிடப்பட்டது. ஆனால் குறைந்த அளவு மக்கள் இருந்தனர்.
என குறிப்பிட்டவர்------------
1. மார்கோபோலோ
2.இபன் பதுதா
3.நிக்கோலோ கோண்டி
4.மேற்கண்ட யாரும் இல்லை
39.மதுரை சுல்தானியம் உருவான ஆண்டு----------
1. கிபி -1335
2.கிபி -1336
3.கிபி-1337
4.கிபி 1334
40.கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
1.பிரோஷா துக்ளக் ஏழை முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக அறக்கட்டளை கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்கினார்.
2. சுல்தான்களில் மக்களின் பெருமதிப்பைப் பெற்று பிரோஷாதுக்ளக் ஆட்சி நடத்தினார்.
3. மனிதாபிமானமற்ற கொடூர தண்டனைகளை ஒழித்தார்.
4. பிரோஷாபாத், ஜான்பூர், பிரோஷாபூர் ஆகிய நகரங்களை சூறையாடினார்.
1). 1, 2 - தவறு
2). 4 - தவறு
3). 3 - தவறு
4. அனைத்தும் தவறு
41.’தாமர்லைன்’ என்று அழைக்கப்பட்டவர்--------
1.ஜீனா கான்
2. கிசிர்கான்
3. தைமூர்
4. ஏதுமில்லை
42. சையது வம்சத்தை தோற்றுவித்தவர் ____
1.ஜீனா கான்
2.தைமூர்
3.கிசிர்கான்
4.பிரோஷா துக்ளக்
43. சுல்தானியர்களின் ஆட்சி காலத்தில் பஞ்சாபின் பெயர் என்ன ?
1. சாமர்கண்ட்
2. பந்தேல் கன்ட்
3. சிர்ஹிந்து
4. ஏதுமில்லை
44. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர்------------------
1. பகலூல் லோடி
2. சிக்கந்தர் லோடி
3. இப்ராஹிம் லோடி
4. யாவரும் இல்லை
45. கட்டடங்கள் பாரசீக பாணியிலும், அலங்கார வேலைபாடுகள் இந்திய பாணியிலும், செய்யப்பட்டால் அதன் கலை வடிவம் ---------- எனப்படும்.
1. இந்தோ – சாராசானிக்
2. இந்தோ - ராஜஸ்தானி
3. இந்தோ - பாரசீகம்
4. ஏதுமில்லை
46.பொருத்துக.
1. குத்புதீன் ஐபக் - சிக்கந்தர் லோடி (A)
2. இல்துமிஷ் - ருக்குதின் பிரோஷா (B)
3. பால்பன் - ஜீனா கான் (C)
4. கியாசுதீன் - கைகுபாத் (D)
5. பகலூல் லோடி - ஆரம்ஷா (E)
1). (1-B) (2-C) (3-D) (4-A) (5-E)
2). (1-E) (2-C) (3-D) (4-B) (5-A)
3). (1-C) (2-D) (3-B) (4-A) (5-E)
4). (1-B) (2-A) (3-D) (4-C) (5-E)
47.வட இந்தியாவை ஆண்ட சுல்தான்களின் தாய் நாடு ------------
1. இந்தியா
2. துருக்கி
3. அரேபியா
4. ஆப்கானிஸ்தான்
48.சுந்தரபாண்டியன் வேண்டுதலின் பொருட்டு, தனது படை தளபதி ‘மாலிக் கபூரை’ மதுரையின் மீது படையெடுக்க பணித்தவர்-------------
1. அலாவுதீன் கில்ஜி
2. ஜலாலுதீன் கில்ஜி
3. கியாசுதீன் பால்பன்
4. குத்புதீன் ஐபக்
49.’இபன்பதுதா’ எந்த நாட்டில் இருந்து முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
1. போர்ச்சுக்கல்
2. இத்தாலி
3. மொராக்கோ
4. பாரசீகம்
50. டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவிற்கு வர காரணம் ---------------
1. லோடி வம்சத்தில் திறமையற்ற அரசர்கள்.
2. பானிபட் போரில் மொகலாயர் பாபரின் வெற்றி.
3. ஏதுமில்லை.
4. தேவகிரி படையெடுப்பு
1. ‘வராகன்’ என்னும் தங்க நாணயங்களை வெளியிட்டவர் ------------
1. பாமினி சுல்தான்கள்
2. விஜயநகரப் பேரரசுகள்
3. பாலர்கள்
4. பிரதிகாரர்கள்
2. கிபி 1565 -ல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் தோற்கடிக்கப்பட்டவர்---------------
1. ஹரிஹரர்
2. புக்கர்
3. கிருஷ்ணதேவராயர்
4. ராமராயர்
3. விட்டலசாமி கோவில் ------------ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
1. ஹரிஹரர்
2. இரண்டாம் தேவராயர்
3. முதலாம் தேவராயர்
4. கிருஷ்ணதேவராயர்
4.கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில் ----------
1. சோமநாதர் கோவில்
2. கைலாசநாதர் கோவில்
3. ராமர் கோவில்
4. ஹசராராமசாமி கோவில்
5.வெற்றியின் நகரம் என்று அழைக்கப்படுவது-----------
1. குல்பர்கா
2.அகமது நகர்
3.விஜயநகரம்
4.ஏதுமில்லை
6. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர் -----------------
1. வித்யாரண்யர்
2. புக்கர்
3. ஹரிஹரர்
4. கிருஷ்ணதேவராயர்
7.பொருந்தாததை தேர்ந்தெடு.
1. சங்கமம்சம்
2. சாளுவ வம்சம்
3. துளுவ வம்சம்
4. ஹசன் வம்சம்
8. ---------------சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில் விஜயநகரம் நிறுவப்பட்டது.
1. வித்யாரண்யர்- ஹரிஹரர்
2. ஹரிஹரர் - புக்கர்
3. கிருஷ்ணதேவராயர்- புக்கர்
4. கிருஷ்ணதேவராயர் - வித்யாரண்யர்
9. விஜயநகர பேரரசு உருவாக காரணமாக அமைந்தது -------------------
1. வித்யாரண்யரின் அறிவுரை
2. புக்கரின் அறிவுரை
3. கிருஷ்ணதேவராயரின் அறிவுரை
4. ஏதுமில்லை
10. விஜயநகர பேரரசில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த வம்சம் ---------
1. சங்கமவம்சம்
2. சாளுவ வம்சம்
3. துளுவ வம்சம்
4. ஆரவீடு வம்சம்
11. டெல்லி சுல்தான்களிடமிருந்து மதுரையை மீட்ட விஜய நகர பேரரசின் அரசர் -----------
1. புக்கர்
2. குமாரகம்பனா
3. கிருஷ்ணதேவராயர்
4. ஹரிஹரர்
12. குமாரகம்பனாவின் மனைவி கங்காதேவி எழுதிய நூல் -------------
1. ஜாம்பவதி கல்யாணம்
2. மதுரா விஜயம்
3. அமுக்கமால்யதா
4. ஷா நாமம்
13. மதுரா விஜயம் எனும் நூல் ------------- கைப்பற்றப்பட்டதை விளக்குகிறது.
1. விஜயநகரம்
2. பாமினி
3. மதுரை
4. குல்பர்கா
14. குமாரகம்பனா ----------- என்பவரின் மகன் ஆவார்.
1. முதலாம் புக்கர்
2. ஹரிஹரர்
3. கிருஷ்ணதேவராயர்
4. ராமராயர்
15. ஒடிசாவின் கஜபதி வம்ச அரசர்களை தோற்கடித்த விஜயநகர அரசர்-----------
1. முதலாம் தேவராயர்
2.கிருஷ்ணதேவராயர்
3.ஹரிஹரர்
4.குமாரகம்பணா
16. விஜயநகர சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசர் --------------
1. ஹரிஹரர்
2. முதலாம் தேவராயர்
3. இரண்டாம் தேவராயர்
4. கிருஷ்ணதேவராயர்
17.தன் படைகளுக்கு நவீன போர் முறைகளை பயிற்சி அளிக்க இஸ்லாமிய வீரர்களை பணி அமர்த்திய விஜயநகர அரசர்--------------
1. முதலாம் தேவராயர்
2.இரண்டாம் தேவராயர்
3.கிருஷ்ணதேவராயர்
4.ஹரிஹரர்
18.விஜயநகர பேரரசின் சங்கம வம்சத்தின் கடைசி அரசர் --------------
1. ராமராயர்
2. திருமலைதேவராயர்
3. இரண்டாம் விருப்பாக்சி ராயர்
4. இரண்டாம் தேவராயர்
19.சரியானவற்றை தேர்ந்தெடு
1. சங்கம வம்ச விஜயநகர அரசர்களில் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.
2. ஒடிசாவின் கஜபதி வம்ச அரசர் பிரதாப ருத்திரனை வெற்றி கொண்டு அவரது மகளை
கிருஷ்ணதேவராயர் திருமணம் முடித்துக் கொண்டார்.
3. கிருஷ்ணதேவராயர் மழை நீரை சேமிக்க பெரிய நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள்
உருவாக்கினார்.
4. கிருஷ்ணதேவராயர் போரில் தான் பெற்ற பெரும் செல்வத்தை தென்னிந்திய
கோவில்களுக்கு வழங்கி நுழைவாயில் கோபுரங்களை கட்டினார் அக்கோபுரங்கள்
ராயர் கோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது
1). 1,2,3 - சரி
2). 2,3,4 – சரி
3). 1,3,4 – சரி
4). 1,2,3,4 - சரி
20. குல்பர்காவின் சுல்தான் முகமது ஷாவை சிறையில் இருந்து மீட்டவர்----------------
1. கிருஷ்ணதேவராயர்
2. குமாரகம்பனா 3. புக்கர்
3. புக்கர்
4. யாவரும் இல்லை
21. கிருஷ்ணதேவராயர் கோல்கொண்டா, பீஜ்பூர் சுல்தான்களுக்கு எதிரான போரில் எந்நாட்டின் பீரங்கி படையை துணைக் கொண்டு வெற்றி பெற்றார்.
1. பிரான்ஸ்
2. இத்தாலி
3. இலங்கை
4. போர்ச்சுக்கல்
22. பொருந்தாததை தேர்ந்தெடு
1. கிருஷ்ணசாமி கோவில்
2. ஹசாரா ராமசாமி கோவில்
3. விட்டல சாமி கோவில்
4. குல்பர்கா மசூதி
23.சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர்---------------
1. கிருஷ்ணதேவராயர்
2. நரசிம்மர்
3. புக்கர்
4. யாவரும் இல்லை
24.கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தின் அரசர் --------------
1. சங்கம வம்சம்
2. சாளுவ வம்சம்
3. துளுவ வம்சம்
4. ஆரவீடு வம்சம்
25.துளுவ வம்ச அரசர்களுள் மிகக் குறைந்த வயதில் முடி சூட்டிக்கொண்டவர்------------
1.கிருஷ்ணதேவராயர்
2. சதாசிவராயர்
3.ராமராயர்
4. யாவரும் இல்லை
26.’ராக்ஷச தங்கடி’ என்று அழைக்கப்படுவது -----------
1. தரைன் போர்
2. பக்சார் போர்
3. தலைக்கோட்டை போர்
4.ஏதுமில்லை
27.தலைக்கோட்டை போரில் இருந்து தப்பித்துச் சென்று ஆரவீடு வம்சத்தை பெனுகொண்டாவில் தோன்ற வழி வகுத்தவர் --------------
1.குமாரகம்பனா
2.கிருஷ்ணதேவராயர்
3.திருமலை தேவராயர்
4.புக்கர்
28. ----------- நகரை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
1. குல்பர்கா
2. கோல்கொண்டா
3. பீஜ்பூர்
4. ஹம்பி
29. ஹம்பி எனும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
1. கிருஷ்ணா
2. கோதாவரி
3. துங்கபத்ரா
4. காவிரி
30.கிருஷ்ணதேவராயர் நிர்வாகத்தில் கிராமத் தலைவர்கள் ---------என்று அழைக்கப்பட்டனர்.
1. கௌடா,
2. பாமினி
3. ஆளுநர்
4. தளபதி
31. விஜயநகரப் பேரரசு தென்னிந்தியாவில் மிகவும் அச்சுறுத்தலான ராணுவ படையாக இருந்ததற்கான காரணம் --------------
1. குதிரை படை காலால் படை யானை படை என முப்படைகளை பெற்றிருந்ததால்.
2. போரில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால்.
3. விஜயநகரப் பேரரசுகளின் படைத்தளபதிகள் மிகவும் வீர தீரமிக்கவர்கள்.
4. மேற்கண்ட அனைத்தும்
32.விஜயநகரப் பேரரசு போர்ச்சுக்கல் நாட்டு கட்டுமான கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரிய ஏரி கட்டப்பட்டதாக கூறிய பாரசீக பயணி ---------
1. அப்துல் ரஸாக்
2. இபன் பதூதா
3. மார்கோபோலோ
4. நிக்கோலோ கோண்டி
33.விஜயநகர பேரரசில் கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழில்களை முறைப்படுத்திய அமைப்பு ------------
1. ஆளுநர்
2. கௌடா
3. கில்டுகள்
4. ஏதும் இல்லை
34.கிருஷ்ணதேவராயர் எழுதிய அமுதமால்யதா எதை பற்றிய நூல்?
1. விஜயநகர ஆட்சி முறையை பற்றி கூறுவன.
2. கிருஷ்ணதேவராயரின் வெற்றியை கூறுவன.
3. பெரியாழ்வாரின் மகளைப் பற்றி கூறுவன.
4. இவற்றில் ஏதுமில்லை
35.அமுத்தமால்யதா என்பதன் பொருள் ------------
1. வெற்றி கொண்டாட்டம்
2. தான் அணிந்து பின் கொடுப்பர்
3. புராண கதைகள்
4. ஏதுமில்லை
36.விஜய நகர கட்டடக்கலையில் பெரிய தூண்களில் செதுக்கப்பட்ட விலங்குகளின் சிற்பங்களில் -------------- விலங்கின் சிற்பம் மிகுதியாக உள்ளது.
1. யானை
2. குதிரை
3. சிங்கம்
4. பசு
37.பொருத்துக
1.கிருஷ்ணதேவராயர் - கோதை நாச்சியார் (A)
2.கங்காதேவி - ஜாம்பவதி கல்யாணம் - நாடகம் (B)
3.தெனாலிராமன் - மதுரா விஜயம் (C)
4.அமுக்த மால்யதா - பாண்டுரங்க மகாத்யம் (D)
1). (1-B), (2-C),(3-D),(4-A)
2). (1-B), (2-D),(3-C),(4-A)
3). (1-B), (2-A),(3-D),(4-C)
4). (1-A), (2-C),(3-D),(4-B)
38.கிருஷ்ணதேவராயர் அரசவையில் அலங்கரித்த எட்டு இலக்கிய மேதைகளை ------------என்று அழைக்கப்பட்டனர்.
1 .மண்டலேஸ்வரர்கள்
2. அஷ்டதகஜங்கள்
3. இலக்கிய மாமேதைகள்
4. ஏதுமில்லை
39.கூற்றை ஆராய்க
1.கிருஷ்ணதேவராயர் போர்ச்சுக்கல், அரேபிய நாட்டு வணிகர்களுடன் அதிக நட்புறவில் இருந்ததால் விஜய நகரத்தில் வாணிபம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
2.வெளிநாட்டிலிருந்து அதிகம் பேர் விஜய நகரத்தில் வணிகத் தொடர்பு வைத்திருந்ததால் சுங்கவரி அதிகம் கிடைத்து பேரரசின் வருமானம் அதிகரித்தது.
1). இரண்டும் சரி
2). இரண்டும் தவறு
3). 1- சரி ,2- தவறு
4). 2- சரி ,1- தவறு
40.பொருந்தாததை தேர்ந்தெடு.
1. அலாவுதீன் ஹசன்
2. ஹரிஹரர்
3. ஹசன் கங்கு
4. பாமன் ஷா
41.கீழ்க்கண்டவற்றுள் தவறானவற்றை தேர்ந்தெடு.
1.அலாவுதீன் ஹசன் பாமன் ஷா வாரங்கல் அரசு, ரெட்டி அரசுகளிடம் இருந்து ஆண்டு தோறும் கப்பம் வசூலிக்க எண்ணினார் இதனால் அடிக்கடி போர் ஏற்பட்டது.
2. அலாவுதீன் ஹசன் நிர்வாக வசதிக்காக அரசை நான்கு மாகாணங்களாக பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு ஆளுநரை நியமித்தார்
3.அலாவுதீன் ஹசன் நியமித்த ஆளுநர்களுக்கு படைக்கு தலைமை ஏற்கவும், வரி வசூல் செய்யவும் பணிக்கப்பட்டதால் ஆளுநர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக திரும்ப வழி வகுத்தது.
1). 1,2,3 - தவறு
2). 2,3,4 – தவறு
3). 1,3,4 – தவறு
4). மேற்கண்ட எதுவும் இல்ல
42. பாம்பன் ஷா வாரங்கல் மீதுபோர் தொடுத்து வெற்றி கொண்டதில் இழப்பீடாக பெற்றது --------
1. கோல்கொண்டா கோட்டை
2. நீல வண்ண கற்களால் செய்த சிம்மாசனம்
3. இவை இரண்டுமே
4. ஏதுமில்லை
43. “’பச்சை கலந்த நீல வண்ண கல்லானது விலை உயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது பாரசீக அரசர்களின் சிம்மாசனத்தில் இத்தகைய கற்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியவர்.
1. அப்துல் ரஸாக்
2. பிர்தெளசி
3. பெத்தண்ணா
4. ஏதுமில்லை
44. பாமினி பேரரசில் ஒலி தொடர்பான கட்டடக்கலைஅம்சங்களுக்கு பெயர் பெற்ற கோட்டை ----
1. குல்பர்கா கோட்டை
2. கோல்கொண்டா கோட்டை
3. சித்தூர் கோட்டை
4. ஏதுமில்லை
45.கோல்கொண்டா கோட்டையின் மீதுள்ள மிக உயரமான இடத்திற்கு -------------என்று பெயர்.
1. பாலஹிசார்
2. மணிமண்டபம்
3. ஹம்பி
4. ஏதுமில்லை
46.பொருத்துக.
1. முதலாம் முகமது ஷா - முஜாஹித் கொலையில் சதி செய்தவர்(A)
2. தாவூத் - மகா மசூதி (B)
3. மூன்றாம் முகமது - பிரதம அமைச்சர் (C)
4. மகமது கவான் - பாமினி பேரரசில் 19 ஆண்டு ஆட்சி புரிந்தவர் (D)
1). (1-B), (2-C),(3-D),(4-A)
3). (1-B), (2-A),(3-D),(4-C)
2). (1-B), (2-D),(3-C),(4-A)
4). (1-A), (2-C),(3-D),(4-B)
47.அரேபியா, துருக்கி, பாரசீக நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தக்காணத்தில் பெரும் எண்ணிக்கையில் குடியேற காரணம் --------------
1. முதலாம் முகமது ஷாவின் அழைப்பு
2. முகமது கவானின் அழைப்பு
3. மூன்றாம் முகமதுவின் அழைப்பு
4. இரண்டாம் முகமதுவின் அழைப்பு
48. பொருத்துக
1.வக்கீல்-உஸ்–சல்தானா - நிதி அமைச்சர் (A)
2.பேஷ்வா - அமைச்சரின் மேற்பார்வையாளர் (B)
3.வஸிரி – குல் - பிரதம அமைச்சர் (C)
4.அமீர் - இ – ஜூம்லா - காவல்துறை தலைவர் (D)
5.நசீர் - இணை பிரதம அமைச்சர் (E)
6.கொத்தவால் - உதவி நிதி அமைச்சர் (F)
1). (1-C), (2-E),(3-B),(4-A) ,(5-F),(6-D)
2). (1-B), (2-D),(3-C),(4-A) ,(5-F),(6-E)
3). (1-B), (2-A),(3-D),(4-C) ,(5-F),(6-E)
4). (1-A), (2-C),(3-D),(4-B) ,(5-F),(6-E)
49.கூற்றை ஆராய்க.
1. பாமினி அரசின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்தவர் முகமது கவான் ஆவார்.
2 .பாரசீக வேதியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடி மருந்து தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தார்.
3. பெல்காம் போரில் வெடி மருந்துகளை பயன்படுத்தினார்.
4. உலகப்புகழ் பெற்ற 3000 கையெழுத்து பிரதிகளால் ஆன நூலகத்தைக் கொண்ட மகமது கவான் மதரசாவை உருவாக்கினார்.
1). 1,2,3 - சரி
2). 2,3,4 – சரி
3). 1,3,4 – சரி
4). 1,2,3,4 - சரி
50. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா கல்வி பயின்ற இடம்--------------------
1. ஹம்பி
2. முல்தான்
3. குல்பர்கா
4. பால ஹீசர்
1.புவி பரப்பில் பலவகையான தோற்றங்களான மலைகள், பள்ளத்தாக்குகள் போன்றவை தோன்ற காரணிகளாக இருப்பது -------------
1. அகச் செயல்முறை
2. புறச் செயல்முறை
3. இவை இரண்டும்
4. ஏதும் இல்லை
2.கீழ்க்கண்டவற்றுள் எது அகச் செயல்முறைகளினால் ஏற்படும் நிலத் தோற்றம் ஆகும்.
1. மலைகள்
2. கடற் குகைகள்
3. காயல்கள்
4. மொரைன்கள்
3.கீழ்க்கண்டவற்றுள் எது புற செயல்முறைகளினால் ஏற்படும் நிலத் தோற்றம் ஆகும்.
1. மலைகள்
2. பீடபூமிகள்
3. பள்ளத்தாக்குகள்
4. காயல்கள்
4.புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து சிறு சிறு கற்களாகவும், துகள்களாகவும் சிதைவுறுவது ---------------
1. அரித்தல்
2. வானிலைச் சிதைவு
3. கடத்துதல்
4. படிய வைத்தல்
5.புவியின் மேற்பரப்பில் அரித்தல் மற்றும் படியவைத்தலால் பலதரப்பட்ட -----------------உருவாக்கப்படுகின்றன.
1. ஆறு
2. கடல்
3. மலைகள்
4. நிலத்தோற்றங்கள்
6.ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றிய இடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் -----------எனப்படுகிறது.
1. ஏரி
2. ஆறு
3. கடல்
4. அருவி
7.ஆறுகள் உற்பத்தியாகும் இடம் --------------சென்று கலக்கும் இடம் ------------
1. பிறப்பிடம் - முகத்துவாரம்
2. முகத்துவாரம் - பிறப்பிடம்
3. ஊற்று - முகத்துவாரம்
4. ஊற்று - கடற்கரை
8.பொருத்துக.
1.ஆறு செங்குத்தான மலையை அரிப - வண்டல் விசிறிகள் (a)
2.ஆறு செங்குத்து பாறையின் விளிம்பில் கீழ்நோக்கி விழுவது - உட்பாய்வு தேக்கம் (b)
3.நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் உள்ள பெரும் பள்ளம் - நீர்வீழ்ச்சி (c)
4.ஆறு கடத்தி படிய வைப்பது – ‘U’ வடிவ பள்ளத்தாக்கு (d)
1). (1-c),(2-b),(3-b),(4-a)
2). (1-d),(2-c),(3-b),(4-a)
3). (1-a),(2-c),(3-b),(4-d)
4). (1-c),(2-d),(3-b),(4-a)
9.மென்பாறைகள் அரிப்பதனால் உருவான நீர்வீழ்ச்சி ------------------
1. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
2. ஜோக் நீர்வீழ்ச்சி
3. குற்றால நீர்வீழ்ச்சி
4. திற்பரப்பு நீர்வீழ்ச்சி
10.ஒரு நீரோடை அல்லது ஆறு தன் போக்கில் ஒரு முதன்மை ஆறுடன் இணைவது------------------
1. ஆறு
2. கிளை ஆறு
3. துணை ஆறு
4. சின்னாறு
11.ஒரு முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்வது---------------
1. ஆறு
2. கிளை ஆறு
3. துணையாறு
4. சின்னாறு
12.ஆற்று முக துவாரத்தில் ஆறு பல ----------------- ஆக பிரிந்து சென்று கடலில் கலக்கிறது.
1. ஆறு
2. கிளை ஆறு
3. துணையாறு
4. சின்னாறு
13.உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி -----------------
1. விக்டோரியா நீர்வீழ்ச்சி
2. நயாகரா நீர்வீழ்ச்சி
3. ஜோக் நீர்வீழ்ச்சி
4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
14.பொருத்துக.
1.வட அமெரிக்கா கனடா எல்லை - குதிரை குழம்பு ஏரி (a)
2.ஜாம்பியா மற்றும் ஜிம்பாவே எல்லை - மியாண்டர்ஸ் (b)
3.ஆற்று வளைவுகள் - நயாகரா நீர்வீழ்ச்சி (c)
4.ஆற்று வளைவுகளால் உருவாக்கப்படுவது - விக்டோரியா நீர்வீழ்ச்சி (d)
1). (1-c),(2-b),(3-b),(4-a)
2). (1-d),(2-c),(3-b),(4-a)
3). (1-a),(2-c),(3-b),(4-d)
4). (1-c),(2-d),(3-b),(4-a)
15.தமிழ்நாட்டில் ஆற்று வளைவு (மியாண்டர்ஸ்) உள்ள இடம் ---------------
1. சேத்தியா தோப்பு - கடலூர்
2. பிச்சாவரம் - சிதம்பரம்
3. பழவேற்காடு - சென்னை
4. ஏதும் இல்லை
16.கூற்றை ஆராய்க.
1.ஆறுகள் வளைந்து மற்றும் சுழன்று செல்வதால் ‘மியாண்டர்ஸ்’ தோன்றுகிறது.
2.ஆற்று வளைவுகளில் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிய வைத்தலால் தோன்றுவது குதிரை குழம்பு ஏரி அல்லது ஆக்ஸ் பவ்.
1. கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமே
2. கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை
3. கூற்று சரி காரணம் தவறு.
4. காரணம் சரி கூற்று தவறு
17. ஆசிய மைனர் என்று அழைக்கப்படுவது---------------
1. கனடா
2. துருக்கி
3. ஈரான்
4. ஈராக்
18. மியாண்டர் நதி என் நாட்டில் உள்ளது?
1. கனடா
2. அமெரிக்கா
3. துருக்கி
4. இந்தியா
19.ஆற்று வளைவுகளுக்கு மியாண்டர் எனபெயர் வர காரணம்------------
1. துருக்கியில் உள்ள மியாண்டர் ஆறு
2. இந்தியாவிலுள்ள வெள்ளாறு
3. புவியியல் வல்லுநர்கள் பெயர் சூட்டுதல்
4. ஏதுமில்லை
20. ‘லிவிஸ்’ எனப்படுவது----------------
1. ஆற்றுச் சமவெளி
2. குதிரை குளம்பு ஏரி
3. உயர் அணை
4. வண்டல் படிவுகள்
21.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இரு பகுதிகளிலும் நுண்துகள்கள், மண் இதர பொருட்கள் படிய வைக்கப்படுவதால்உருவாகும் நிலத்தோற்றம் ---------------
1. வெள்ளச் சமவெளி
2. ஆற்றுச் சமவெளி
3. வண்டல் படிவுகள்
4. ஏதுமில்லை
22.முகத்துவாரங்களில் கிளை ஆறுகளால் தோற்றுவிக்கப்படும் படிவுகளால் உருவாகும் நில அமைப்பு------
1. டெல்டா
2. ஆற்றுச் சமவெளி
3. வெள்ளச் சமவெளி
4. ஏதுமில்லை
23.அதிக உற்பத்தி திறனும், வளமானதுமான வண்டல் மண் காணப்படும் பகுதி--------------
1. டெல்டா
2. பீடபூமி
3. மலைகள்
4. கடற்கரை
24. மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக சரிவை நோக்கி மெல்ல நகரும் பெரிய பனிக்குவியல்---------
1. கிளையாறு
2. துணையாறு
3. பனி ஆறு
4. வெள்ளாறு
25.கண்டப் பகுதியில் பெரும் பரப்பில் பரவி காணப்படும் அடர்ந்த பணி படலம்-----------------
1. கண்ட பனியாறு
2. பள்ளத்தாக்கு பனியாறு
3. மலைப் பனி ஆறு
4. நகரும் பனியாறு
26.மலைப்பனியாறுகளால் மலைச்சரிவில் ஏற்படுத்தும் அமைப்பு --------------
1. மலைச்சிகரங்கள்
2. சர்க்குகள்
3. பள்ளத்தாக்குகள்
4. ஏதுமில்லை
27. பனி உருகும் போது மலைச்சரிவில் உள்ள சர்க்குகளில் நீர் நிரம்பி அழகாக காட்சியளிப்பது----
1. மலைமுகடுகள்
2. டார்ன் ஏரி
3. அரெட்டுகள்
4. ஏதுமில்லை
28.இரண்டு அல்லது மூன்று சர்க்குகள் ஒன்றை ஒன்று நெருங்கும் போது உருவாகும் அமைப்பு----------
1. மலை முகடுகள்
2. டார்ன் ஏரி
3. அரெட்டுகள்
4. ஏதுமில்லை
29.’அரெட்டுகள்’ எனப்படுவது -------------
1. நாற்காலி அமைப்பு போன்ற பள்ளம்
2. மலைமுகடுகள்
3. கத்தி முனை குன்றுகள்
4. ஏதுமில்லை
30.கூற்று ஆராய்க
கூற்று-1
இரண்டு அல்லது மேற்பட்ட சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும்போது குறுகிய செங்குத்தான கத்தி முனை போன்ற பக்கவாட்டில் சரிவான முகடுகள் தோன்றும். இது மொரைன்கள் என்று அழைக்கப்படுகிறது.
கூற்று-2
இரண்டு பனி ஆற்றினால் கடத்தப்படும் மணல் மற்றும் வண்டல் படிவுகள் படிந்து உருவாகுவது அரெட்டுகள் எனப்படும்.
1). 2-ம் சரி
2). 2-ம் தவறு
3). 1-சரி 2-தவறு.
4). 1-தவறு 2-சரி
31. அரித்தல் மற்றும் படிய வைத்தலை செயல்படுத்தும் காரணிகளை பொருத்துக.
1. கண்டப் பகுதி - காற்று (a)
2. மலைப்பகுதி - நீர் (b)
3. பாலைவனம் - அலைகள் (c)
4. கடல் - பனியாறுகள் (d)
1). (1-c),(2-b),(3-b),(4-a)
2). (1-d),(2-c),(3-b),(4-a)
3). (1-a),(2-c),(3-b),(4-d)
4). (1-b),(2-d),(3-a),(4-c)
32. கூற்று
பாறையின் மேற்பகுதி அகன்றும் கீழ்ப்பகுதி குறுகியும் பாறை உருமாறுகிறது இது காளான் பாறை அல்லது பீட பாறை என்று அழைக்கப்படுகிறது.
காரணம்
பாறையின் மேல் பகுதியை விட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கிறது.
1.கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமே
2.கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை
3.கூற்று சரி காரணம் தவறு.
4.காரணம் சரி கூற்று தவறு
33.ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போல் காட்சி அளிக்கும் இது--------------------எனப்படுகிறது.
1. இன்சல்பெர்க்
2. அரெட்டுகள்
3. மொரைன்கள்
4. ஏதுமில்லை
34.கூற்று
பாலைவனத்தில் மணல் குன்றுகள் தோன்றுகின்றன.
காரணம்
காற்று வேகமாக வீசும் போது மணல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்பட்டு காற்றின் வேகம் குறையும்போது அவை படிய வைக்கப்படுகின்றன.
1.கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமே
2.கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை
3.கூற்று சரி காரணம் தவறு.
4.காரணம் சரி கூற்று தவறு
35.பிறை சந்திரன் போன்ற அமைப்புடைய மணல் குன்றுகளை -----------------------என அழைக்கப்படுகிறது.
1. மொரைன்கள்
2. அரெட்டுகள்
3. இன்சல்பெர்க்குகள்
4. பர்கான்கள்
36.காற்று அரிப்பு தனி குன்றுகளுக்கு --------------- என்று பெயர்.
1. மொரைன்கள்
2. அரெட்டுகள்
3. இன்சல்பெர்க்குகள்
4. பர்கான்கள்
37. மிக லேசாகவும் எடை குறைவாகவும் இருக்கும் மணல் துகள்கள் காற்றால் நீண்ட தொலைவிற்கு கடத்தப்பட்டு ஒரு பெரும் பரப்பில் படிய வைக்கப்படுகிறது. இந்த நில அமைப்பிற்கு ----------என்று பெயர்.
1. பர்கான்கள்
2. காற்றடி வண்டல் படிவுகள் (லூயிஸ்)
3. வண்டல் விசிறிகள்
4. மணல் குன்றுகள்
38.லூயிஸ் அதிகம் காணப்படும் நாடு -------------
1. ஆப்பிரிக்கா
2. சீனா
3. அமெரிக்கா
4. இந்தியா
39.வடக்கு சீனாவில் உள்ள காற்றடி வண்டல் படிவுகள் -------------------இருந்து கடத்தப்பட்டவை ஆகும்.
1. தார் பாலைவனம்
2. கோபி பாலைவனம்
3. சகாரா பாலைவனம்
4. ராஜஸ்தான் பாலைவனம்
40. கடல் நீரும் நிலமும் சந்திக்கின்ற இடம் -----------------
1. பள்ளத்தாக்கு
2. முகத்துவாரம்
3. கடலோர எல்லை
4. காயல்கள்
41.கடல் அலைகளால் உருவாக்கப்பட்ட நிலத் தோற்றம் --------------------
1. கடல் ஓங்கல்கள்
2. கடற் குகைகள்
3. கடல் வளைவுகள்
4. மேற்கண்ட அனைத்தும்
42.பொருத்துக.
1.சர்க்குகள் - கலஹாரி (a)
2.காற்று அரிப்பு தனி குன்றுகள் - பழவேற்காடு (b)
3.காற்றடி வண்டல் படிவுகள் - ஜெர்மனி (c)
4.உப்பங்கழிகள் - சீனா (d)
1). (1-c),(2-a),(3-d),(4-b)
2). (1-d),(2-c),(3-b),(4-a)
3). (1-a),(2-c),(3-b),(4-d)
4). (1-b),(2-d),(3-a),(4-c)
43.பீடப் பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன.
1. லோயஸ்
2. பர்கான்கள்
3. காளான் பாறைகள்
4. இன்சல்பர்க்குகள்
44.பனி ஆறுகள் இல்லாத கண்டம்________________
1. வட அமெரிக்கா
2. தென் அமெரிக்கா
3. ஆஸ்திரேலியா
4. ஆப்பிரிக்கா
45.பொருத்துக.
1.சிலிக்கா ஏரி - உப்பங்கழிகள்
2.பழவேற்காடு ஏரி - கேரளா
3.வேம்பநாடு ஏரி - தமிழ்நாடு
4.காயல்கள் - ஒடிசா
1). (1-c),(2-a),(3-d),(4-b)
2). (1-d),(2-c),(3-b),(4-a)
3). (1-a),(2-c),(3-b),(4-d)
4). (1-b),(2-d),(3-a),(4-c)
46.உலகின் நீளமான கடற்கரை----------------------
1. மெரினா கடற்கரை
2. பிரியா கோசினா கடற்கரை
3. கோவளம் கடற்கரை
4. ஏதுமில்லை
47.உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை-------------------
1. மெரினா கடற்கரை
2.மியாமி கடற்கரை
3.கோவளம் கடற்கரை
4.கோவா கடற்கரை
48.கடற்கரையிலிருந்து பகுதியாகவோ முழுமையாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த்தேக்கம்---------------------------------- எனப்படும்.
1. காயல்கள்
2. மொரைன்கள்
3. டெல்டா
4. பர்கான்கள்
49.கடற்கரையை அடுத்துள்ள நிலம் அலைகளின் மோதலாலும் அரிப்பினாலும் கடலை நோக்கி செங்குத்தாக உயர்ந்து காணப்படுவது----------------
1. கடற் குகைகள்
2.பாறை கடல் ஓங்கல்கள்
3.கடல் தூண்கள்
4.கடல் திட்டுகள்
50 சரியான கூற்றை தேர்ந்தெடு.
கூற்று-1
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சின் நிற்கும் இதை கடல் வளைவுகள் என்கிறோம்.
கூற்று-2
கடல் குகைகளின் மேற்கூரை முழுவதும் அரிக்கப்படுவதால் பக்கச்சுவர் மட்டும் எஞ்சி நிற்கும். இதை கடல் தூண்கள் என்கிறோம்.
1). 2-ம் சரி
2). 2-ம் தவறு
3). 1-சரி 2-தவறு.
4). 1-தவறு 2-சரி
