wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள்

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
இந்தப் பழமொழியின் பொருள் என்ன?

a)

மற்றவரை நொந்து கொள்ள வேண்டும்

b)

குற்றதிற்குக் காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

c)

குற்றதிற்குக் காரணமாக உள்ளவனைத் தண்டிக்க வேண்டும்.

2.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது
கொடுக்கப்பட்ட பழமொழியின் பொருள் என்ன?

a)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் நம்மால் இயங்குகின்றன

c)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தையும் யாரும் இயக்கவில்லை

3.

அமுதன் விளையாடும் போது தன் வீட்டு சன்னலை உடைத்து விட்டான். ஆனால், அவன் வீட்டார் அந்தக் குற்றத்தை அப்பாவி அண்டை வீட்டார் மீது சுமத்தினர்.

a)

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

b)

பதறாத காரியம் சிதறாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

4.

காற்பந்து ஆட்டத்தில், கபிலன் தவறு செய்தான். ஆனால், நடுவர் தவறுதலாக மற்றொரு மற்றொரு விளையாட்டு வீரருக்கு மஞ்சள் அட்டை கொடுத்தார்.

a)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

b)

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

5.

மருத்துவர்கள் சிகிச்சை செய்தும் நோயாளி குணமாகவில்லை. அனைவரும் “இனி கடவுளின் கருணை மட்டுமே உதவும்” என்று சொன்னார்கள்.

a)

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

c)

சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டும்

6.

விவசாயி கடுமையாக உழைத்தாலும், மழை இல்லாமல் பயிர்கள் வளரவில்லை. அவர், “இறைவன் அருளில்லாமல் எதுவும் நடக்காது” என்று எண்ணினார்.

a)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

b)

தனி மரம் தோப்பாகாது

c)

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

7.

“அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்ற பழமொழி எதை உணர்த்துகிறது?

a)

மனிதனின் ஆற்றல்

b)

அரசனின் ஆட்சி

c)

இறைவனின் பேராற்றல்

8.

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?” என்ற பழமொழி எதை உணர்த்துகிறது?

a)

காரணத்தை விடுத்து அப்பாவியை குற்றம்சாட்டுவது பயனில்லை

b)

அம்பால் ஏற்பட்ட காயம் எளிதில் ஆறும்

c)

அம்பு ஏய்பவன் வலிமையானவன்