wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேர்வு 3 தலைப்பு (நுண்ணறிவு )

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

புரிந்துகொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலை தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையிலுள்ள குறைபாடுகளை தானே உணர்தல் ,போன்ற கூறுகள் எதனூள் அடங்கியுள்ளன என்று "பீனை" குறிப்பிடுகிறார்

a)

ஆளுமை

b)

ஊக்கம்

c)

நுண்ணறிவு

d)

கற்றல்

2.

"நோக்கத்தோடு செயல்படல், பகுத்தறிவோடு சிந்தித்தல், திறமையாக சூழ்நிலையை சமாளித்தல் ",போன்றவை சேர்ந்த ஒரு கூட்டு செயலாற்றலே நுண்ணறிவு என்று கூறியவர்....

a)

வெஸ்லர்

b)

ஸ்டோடர்ட்

c)

கார்டனர்

d)

பீனே

3.

நுண்ணறிவு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்

a)

மாலின்

b)

வெக்ஸ்லர்

c)

பீனே

d)

ரேவன்

4.

நுண்ணறிவு ஈ வை கணக்கிடுவதற்கான சூத்திரம் ?

a)

IQ=MA/CA ×100

b)

IQ= CA/MA ×100+5

c)

IQ =MA/CA ×100+5

d)

IQ = CA/MA×100

5.

வெக்ஸ்லரின் முதியவர்களுக்கான நுண்ணறிவு சோதனை அளவுகோலில் உள்ள சொற்ச் சோதனைகள் எத்தனை ?

a)

6

b)

5

c)

8

d)

4

6.

எந்த வயதிற்கு பின் அளிக்கப்படும் நுண்ணறிவு சோதனை மதிப்புகள் நிலையானது

a)

1

b)

2

c)

5

d)

20

7.

நுண்ணறி பற்றிய சொற்சாரா சோதனைகள் யாருக்கு ஏற்றது?

a)

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்

b)

படிப்பறிவற்றவர்கள்

c)

சிறு குழந்தைகள்

d)

அனைவருக்கும்

8.

வெக்ஸ்லரின் குழந்தைகளுக்கான நுண்ணறிவு சோதனைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு?

a)

1939

b)

1949

c)

1955

d)

1956

9.

இன்று புதன்கிழமை நாளை மறுநாளைக்கு முந்திய கிழமை ----------இது எந்த வகை சோதனை ?

a)

பொது அறிவு

b)

புரிந்து கொள்ளுதல்

c)

கணித ஆய்வு

d)

சொற்களஞ்சியம்

10.

பழமொழிக்கு பொருள் கூறல் மூலம் சோதிக்கப்படுவது?

a)

புது திறமை

b)

பொதுத்திறமை

c)

ஆக்கத்திறன்

d)

நுண்ணறிவு

11.

நுண்ணறிவு பற்றிய "முடியரசு கொள்கை" எனப்படுவது ?

a)

ஒற்றைக் காரணி கொள்கை

b)

இரட்டை காரணி கொள்கை

c)

பல காரணிக் கொள்கை

d)

குழு காரணி கொள்கை

12.

கில்போர்டு கட்டமைப்பு மாதிரியின் விளைவு காரணிகள் என்ன ?

a)

சிந்தித்தல் அறிவுசார் செயல் மற்றும் காரணமறிதல்

b)

பொருள் செயல்பாடுகள் மற்றும் விளைவு

c)

செயல் நிலைகள் செயல்பாடுகள் மற்றும் திட்ட முறைகள்

d)

செயல்பாடுகள் செயல் விளைவுகள் மற்றும் செயல் விளைவு

13.

விளையாட்டு சார்ந்த விஷயங்களில் தனி திறமையோடு விளங்கும் குழந்தையிடம் அதிகம் இருப்பது?

a)

கருத்தியல் (இடம் சார்ந்த நுண்ணறிவு

b)

தொடர்(படிநிலை) -கணித நுண்ணறிவு

c)

உடல் -தொடு உணர் நுண்ணறிவு

d)

பிற மனித நுண்ணறிவு

14.

ஆசிரியர் தனது பாடம் நடத்துதலின் திட்டம் தயாரித்தலில் பின்வருவனவற்றுள் எம் உரை பொருத்தமானதாக கருதப்படுகிறது?

a)

சமூக வரைவியல் முறை

b)

ஆளுமை முறை

c)

ஆக்கத்திறன் முறை

d)

நுண்ணறிவு முறை

15.

நுண்ணறிவு சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ப சிறப்பாக செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர் ?

a)

கெட்டல்

b)

ஆல்பிரட் பீனே

c)

பிரான்சிஸ் கால்டன்

d)

உட்வொர்த்

16.

வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன்?

a)

நுண் திறன்

b)

புலன் காட்சி திறன்

c)

பொறித்திறன்

d)

இடவாற்றல்

17.

நுண்ணறிவு ஈவு 120 முதல் 140 கொண்ட குழந்தைகள்?

a)

கணித மேதைகள்

b)

பொறியாளர்கள்

c)

விளையாட்டு வீரர்கள்

d)

எழத்தாளர்கள்

18.

________ஒரு மனிதனுடைய மனமுதிர்ச்சியை குறிக்கிறது ?

a)

மன வயது

b)

அடிப்படை வயது

c)

அடைவு வயது

d)

கால வயது

19.

1.நுண்ணறிவு சோதனையின் தந்தை ஆல்பிரட் பீனே

2.மன வயது என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் ஆல்பிரட் பீனே

3.நுண்ணறிவு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஆல்பிரட் பீனே

4.ஒற்றைக் காரணி கோட்பாட்டுடன் தொடர்புடையவர் ஆல்பிரட் பீனே

a)

ஒன்று மற்றும் இரண்டும் சரி

b)

ஒன்று மற்றும் நான்கு சரி

c)

ஒன்று இரண்டு மற்றும் மூன்றும் சரி

d)

அனைத்தும் சரி

20.

மனவெழுச்சி நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்?

a)

மேயர் மற்றும் சலோவி

b)

டேவிட் கோல்மேன்

c)

பீனே

d)

வெக்ஸ்லர்

21.

நுண்ணறிவு படிநிலை கோட்பாட்டை உருவாக்கிய "பி எஃப் வெர்னர்" எந்த நாட்டு உளவியல் அறிஞர்

a)

இங்கிலாந்து

b)

ரஷ்யா

c)

ஜெர்மனி

d)

பிரான்ஸ்

22.

காது கேளாதோர் மற்றும் மொழி பயன்பாட்டில் பின்தங்கிய குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது?

a)

பிண்ட்னர்/பேட்டர்சன் அளவு கோல்

b)

பட கட்டமைப்பு தேர்வு

c)

ஆர்தரின் புள்ளி அளவுகோல்

d)

பொருள் ஒருங்கமைத்தல் முறை

23.

1.நுண்ணறிவு என்பது கற்றலுக்கான திறன்

2.நுண்ணறிவு என்பது சூழ்நிலையுடன் இணக்கமாக செயல்படும் திறன்

3.நுண்ணறிவு என்பது சிக்கலை தீர்ப்பதற்கான திறன்

4.நுண்ணறிவு மரபு மற்றும் சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுகிறது

a)

ஒன்று மட்டும் சரி

b)

இரண்டும் மூன்றும் சரி

c)

நான்கு மட்டும் சரி

d)

அனைத்தும் சரி

24.

1983 அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் ஹொவர்டு கார்டனர் தான் வெளியிட்ட பிரபல நூலான "மனத்திட்பங்கள் -பன்முக நுண்ணறிவு கோட்பாடு" என்பதில் எத்தனை வகையான நுண்ணறிவினை விவரிக்கிறார்?

a)

8

b)

7

c)

9

d)

5

25.

பலதரப்பட்ட மனித மனவன்மைகளை கருத்தில் கொண்டு நுண்ணறிவை அளவிட்ட உளவியலாளர்?

a)

பீனே

b)

கார்டனர்

c)

ஜாக் மேயர்

d)

தாண்டக்

26.

நுண்ணறிவு பல வகைப்பட்டது என்று கூறிய "தார்ண்டைக், ஹொவார்டு கார்டனர்,ஜாக் மேயர், பீட்டர் ஸலோவே"போன்றோர் எந்த நாட்டு உளவியலாளர்கள்?

a)

இங்கிலாந்து

b)

ஜெர்மனி

c)

அமெரிக்கா

d)

இந்தியா

27.

தார்ண்டைக்க நுண்ணறிவு வகைகள் எத்தனை ?

a)

2

b)

3

c)

4

d)

8

28.

சொற்கள், எண்கள், குறியீடுகள், கணிவைகள், வரைபடங்கள் ,ஆகியவற்றை கையாளும் திறனையே இவ்வகை நுண்ணறிவு குறிக்கிறது என்று தார்ண்டைக் எதை குறிப்பிடுகிறார் ?

a)

பொறி சார்ந்த நுண்ணறிவு

b)

கருத்தியல் நுண்ணறிவு

c)

சமூக நுண்ணறிவு

d)

இடரீதியான நுண்ணறிவு

29.

ஓவியர்கள், சிற்பிகள் ,கட்டிட வரைபடம் தயாரிப்போர்,பொறியியல் வல்லுநர்கள்ஆகியோரிடம் மிகுந்து காணப்படும் நுண்ணறிவு எவ்வகை என்று கார்டனர் விளக்குகிறார் ?

a)

தர்க்க ரீதியான நுண்ணறிவு

b)

இடரீதியான நுண்ணறிவு

c)

உடல் இயக்கம் தொடர்பான நுண்ணறிவு

d)

தன் செயலில் சாமர்த்தியமாக இயங்குவதற்குரிய நுண்ணறிவு

30.

கவிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ,இவர்களிடம்காணப்படும் நுண்ணறிவு எவ்வகை என்று கார்டனர் குறிப்பிடுகிறார் ?

a)

இயற்கையை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு

b)

மொழி சார்ந்த நுண்ணறிவு

c)

சமூக நுண்ணறிவு

d)

அழகுணர்ச்சி நுண்ணறிவு

31.

கீழ் காண்பவர்களில் யார் மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்பில்லாதவர்கள் ?

a)

ஜாக் மேயர்/பீட்டர் ஸலோவே

b)

லீ ப்ரோவேதனி

c)

ஸ்டொடார்ட்

d)

S.கெயின்

32.

1.பாம்பை கண்டு பயம் கொண்டோர் "பாம்பு "என்று சொல்லிக் கொண்டே அழுவர்

2.அழுதால் பெற்றோர் சினம் கொள்வர் என்பதை உணரும் குழந்தை அச்சமுறும்போது இயற்கையாக எழும் அழுகை கூட அடக்கிக் கொள்ள முயலும் இது எவ்வகை நுண்ணறிவு?

a)

மனவெழுச்சி நுண்ணறிவு

b)

உடல் இயக்கம் தொடர்பான நுண்ணறிவு

c)

சமூக நுண்ணறிவு

d)

இயக்க நுண்ணறிவு

33.

ஜாக் மேயர் மற்றும் பீட்டர் ஸ்லோவா மனவெழுச்சி நுண்ணறிவின் உட்கூறுகள் எத்தனை ..

a)

4

b)

6

c)

3

d)

2

34.

ஒருவனுடைய நுண்ணறிவு ஈவு என்ற ஒற்றை மதிப்பினை கொண்டு நுண்ணறிவை அளவிட முடியும் என்று வாதிட்டவர் ....

a)

பீனே

b)

தாண்டக்

c)

ஸ்பியர் மேன்

d)

தர்ஸ்டன்

35.

1.புள்ளி விவர இயலின் வழி எழுந்தது .

  1. G காரணி பெரும்பாலும் மரபால் தீர்மானிக்கப்படுகிறது

  2. S காரணிகளை நாட்டங்கள் அல்லது சிறப்பு திறன்கள் என்கிறோம்

  3. சொல்லாற்றல் எண்ணாற்றல் நினைவாற்றல் குவி சிந்தனை போன்றவற்றை உள்ளடக்கியது ....

a)

இரண்டு மூன்று சரி

b)

இரண்டு மூன்று நான்கு சரி

c)

இரண்டு மட்டும் சரி

d)

அனைத்தும் சரி

36.

பீனே எந்த நாட்டு உளவியல் அறிஞர் .?

a)

பிரஞ்சு

b)

அமெரிக்கா

c)

ரஷ்யா

d)

இந்தியா

37.

I.தார்ண்டைக் கூற்றுப்படி நுண்ணறிவானது பல்லாயிரக்கணக்கான சிறு சிறு ஆற்றல்களை உள்ளடக்கியது

II.வாக்கியங்களை பூர்த்தி செய்தல் எண் கணக்குகள் தொடர்பான ஆராய்ந்தறிதல் ,சொற்களஞ்சியம், கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நான்கு பகுதிகளை கொண்டது ...

a)

ஒன்று தவறு இரண்டு சரி

b)

இரண்டு தவறு ஒன்று சரி

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

38.

தர்ஸ்டன்ன் முதன் முதலில் நுண்ணறிவு ஆராய்ந்ததில் எத்தனை அடிப்படை திறன்களை கண்டறிந்தார் ...

a)

8

b)

7

c)

9

d)

5

39.

தர்ஸ்டன் குழு காரணி கொள்கையில் எந்த திறன் இரண்டாக பகுப்பாய்வு செய்யப்பட்டது.

a)

ஆராய்ந்து அறியும் திறன்

b)

சொல் வேகத்திறன்

c)

புலன் காட்சித்திறன்

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

40.

தர்ஸ்டன் குழு காரணி கோட்பாட்டு ஆய்வு முடிவுகளில் இருந்து "நுண்ணறிவு வளர்ச்சி கோட்பாடு" என்ற ஒன்றை உருவாக்கியவர் யார் ?

a)

கில்போர்ட்

b)

H E. கேரட்

c)

கால்டன்

d)

கேட்டல்

41.

குழந்தைகளிடம் தொடக்கத்தில் நுண்ணறிவு ஒரு பொதுக் காரணியாக திகழ்ந்து வயது அதிகரிக்க அதிகரிக்க இது பல வகை சிறப்பு ஆற்றலாக உருப்பெற்று தனித்திய இயங்க ஆரம்பிக்கிறது என்று கூறிய உளவியல் கோட்பாடு?

a)

H.E கேரட் நுண்ணறிவு வளர்ச்சி கோட்பாடு

b)

ஒற்றைக் காரணி கோட்பாடு

c)

இரட்டை காரணி கோட்பாடு

d)

குழு காரணி கோட்பாடு

42.

1.ஆல்பிரட் பினே- பிரான்ஸ்

2.ஸ்பியர்மென் -இங்கிலாந்து

3.தார்ண்டைக்- அமெரிக்கா

4.தர்ஸ்டன்-அமெரிக்கா

a)

ஒன்று இரண்டு சரி

b)

மூன்று நான்கு தவறு

c)

நான்கு மட்டும் சரி

d)

அனைத்தும் சரி

43.

"காரணி பகுப்பு கோட்பாடு "மற்றும் "அடிப்படை உளத்திறன் கோட்பாடு" என்று அழைக்கப்படுவது ?

a)

குழு காரணி கொள்கை

b)

ஒற்றைக் காரணிக் கொள்கை

c)

இரட்டை காரணி கொள்கை

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

44.

தர்ஸ்டனின் குழு காரணி கொள்கையில் இறுதியாக 9 திறன்கள் உள்ளன இறுதியாக சேர்க்கப்பட்ட அடிப்படைத் திறன் எது?

a)

தொகுப்பாய்வு திறன்

b)

பகுப்பாய்வுத்திறன்

c)

பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல்

d)

நினைவாற்றல்

45.

1.1966 இல் நுண்ணறிவு கட்டமைப்பு கோட்பாட்டை உருவாக்கியவர்

2.மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்படுகிறது என்றவர் ..

3.அமெரிக்க தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியலாளர்...

a)

கில்போர்ட்

b)

தர்ஸ்டன்

c)

பீனே

d)

மேற்கண்ட யாரும் இல்லை

46.

3D கொள்கை, SOI-கொள்கை என்று அழைக்கப்படுவது ..

a)

தர்ஸ்டன் குழு காரணி கோட்பாடு

b)

கில்போர்ட் நுண்ணறிவு கோட்பாடு

c)

தார்ண்டைக் பல காரணி கோட்பாடு

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

47.

தற்போது கில்போர்ட் நுண்ணறிவு கூறுகள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது

a)

4×5×6=120

b)

5×6×6=180

c)

3×5×5=75

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

48.

கில்போர்ட்டின் பொருள் கூறுகளில் எது இரண்டாக பகுக்கப்பட்டது ...

a)

உருவம்

b)

குறியீடு

c)

நடத்தை

d)

சொல்

49.

கில்போர்ட் நுண்ணறிவு கோட்பாட்டில் உள்ள "செயல் "கூறுகளில் எது இரண்டாக பகுக்கப்பட்டது ..

a)

நினைவு கூறுதல்

b)

குவி சிந்தனை

c)

விரி சிந்தனை

d)

மதிப்பீடு

50.

கில்போர்ட் தம் ஆய்வின் மூலம் 120 உளத்திரன்களில் ________அளவிடும் சோதனை உருப்படிகளை உருவாக்கியுள்ளார் ?

a)

70

b)

80

c)

60

d)

50