NEW
Font size
Worksheets11 புரட்சிகளின் காலம்
Total questions: 20
Worksheet time: 10mins
வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள்
அ) போர்த்துகீசியர்
ஆ) ஸ்பானியர்
இ) டேனியர்
ஈ) ஆங்கிலேயர்
நியூ ஆம்ஸ்ட ர்டாமிற்கு ……………… என மறுபெயர் சூட்டப்பட்டது.
அ) வாஷிங்டன்
ஆ) நியூயார்க்
இ) சிக்காகோ
ஈ) ஆம்ஸ்ட ர்டாம்
கூற்று : ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை இயற்றினர்
காரணம் : காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென்பதைச் இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
கூற்று : 1770இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம் : காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ……… இல் நடைபெற்றது.
அ) 1775
ஆ) 1773
இ) 1784
ஈ) 1799
கூற்று : ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
காரணம் : அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை.
கூற்று I : 1776 ஜூலை 4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தன.
கூற்று II : சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.
அ) I
ஆ) II
இ) இரண்டும் தவறு
ஈ) இரண்டும் சரி
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
அ) ரிச்சட்டு லீ
ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்
இ) வில்லியம் ஹோவே
ஈ) ராக்கிங்காம்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை?
கூற்று I : பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II : பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III : வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
அ) I மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிப்புக்குத் தலைமையேற்ற பிரபு ……… ஆவார்.
அ) மாரட்
ஆ) டாண்டன்
இ) லஃபாய்ட்
ஈ) மிராபு
கூற்று : வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத் தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம் : அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ மாண்டெஸ்கியூ--------1 ஜேகோபியர்கள்
ஆ வால்டர்--------2 ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி
இ பயங்கர ஆட்சி--------3 பதினான்காம் லூயியின் காலம்
ஈ ஜான் லாக்--------4 சட்டங்களின் சாரம்
அ) 1 3 4 2
ஆ) 4 3 1 2
இ) 4 1 2 3
ஈ) 1 4 3 2
பாஸ்டில் சிறை தகர்ப்பு …………… இல் நடந்தது.
அ) 1789, ஜூன் 5
ஆ) 1789, ஜூலை 14
இ) 1789, நவம்பர் 11
ஈ) 1789, மே 1
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் …………….. அதிருப்தி கொண்டிருந்தார்.
அ) ஒலிம்பே டி கோஜெஸ்
ஆ) மேரி அன்டாய்னெட்
இ) ரோஜெட் டி லிஸ்லி
ஈ) ரோபஸ்பியர்
பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது.
அ) வெர்செய்ல்ஸ்
ஆ) தௌலன்
இ) மார்செய்ல்ஸ்
ஈ) டியூ லெர்ஸ்
……………. தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
அ) மெக்சிகோ
ஆ) பனாமா
இ) ஹைட்டி
ஈ) ஹவானா
மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர் ……………
அ) சைமன் பொலிவர்
ஆ) ஜோஸ்மரியா மோர்லோ
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) மிகுவல் ஹிடல்கோ
அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர்…………………….
அ) சான் மார்ட்டின்
ஆ) டாம் பெட்ரோ
இ) பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
ஈ) மரினாமோர்லஸ்
நகரம் ‘காட்டன் பொலிஸ்’ எனும் புனைப் பெயரைப் பெற்றது.
அ) மான்செஸ்டர்
ஆ) லங்காசயர்
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) கிளாஸ்கோ
கீழேகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ மைக்கேல் பாரடே----1 ஆர்க்ரைட்
ஆ எலியாஸ்ஹோவே---2 ராபர்ட் புல்டன்
இ நீர்ச் சட்டகம்---3 மின்சாரம்
நீராவிப் படகு---4 தையல் இயந்திரம்
அ 1 3 4 2
ஆ 1 4 2 3
இ 3 4 1 2
ஈ 3 4 2 1
