Worksheetsதமிழ் இலக்கியம் - படிவம் 4
Total questions: 30
Worksheet time: 30mins
முதல் எழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது ________________.
மோனை
எதுகை
சந்தம்
இயைபு
'சஞ்சிக் கூலி' கவிதையின் பாடுபொருள் யாது?
(a)
'காலம் பறக்குதடா' கவிதையின் மையக்கரு யாது?
தமிழர் முன்னேற்றம்
தோட்டப்புறத் தமிழர்களின் அவலம்
உயர்ந்தோர் வழி நிற்றல்
காலைப் பொழுதின் அழகு
திரிபு அணிக்கான சரியான எடுத்துக்காட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
சேவல் - ஆவல்
அழகு - அழகு
வெள்ளி முளைப்பினிலே - அழகு
துள்ளுது வான்பரப்பில்! - சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!
'புள்ளின ஓசையிலே' என்பதன் பொருள் யாது?
யானைகள் எழுப்பும் ஒலி
கோழிகள் எழுப்பும் ஒலி
நாய்கள் எழுப்பும் ஒலி
பறவைகள் எழுப்பும் ஒலி
குணம்விட்டுக் குறிகள் கெட்டுக்
குவலயம் தன்னில் ஆன்றோர்
இனம்விட்டுச் சிறுமை செய்,தீ
இயல்பினர் தம்மை நாடி
'குவலயம்' என்பதன் பொருள் யாது?
சூரியன்
கிரகங்கள்
சந்திரன்
உலகம்
தென்றல் விளையாடும் சோலை வனமெங்கள்
தேசமென்றே ஒன்றாய்க் கூடுங்கடி
குன்றினில் நின்றாடுங் கோல மயிலெனக்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி!
இக்கவிதையில் இடம்பெற்றுள்ள மோனையைக் கண்டறிக.
தென்றல் - குன்றினில்
தென்றல் - தேசமென்றே
குன்றினில் - கொட்டுங்கடி
கூடுங்கடி - கொட்டுங்கடி
'ஆழக் கிணற்றிலுள்ளாய்' என்பதன் பொருள் யாது?
ஆழ்ந்து
மூழ்கி
பின் தங்கி
உயர்நிலை
வட்ட நிலவினில் பட்ட கறையென
வாழ்க்கை யமைந்தது பாருங்கடி
வெட்ட வெளியினில் பட்ட மரமென
வேரற்றுப் போனதேன் கூறுங்கடி!
கருமையாக்கப்பட்டுள்ள சொற்றொடரின் சரியான அணி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
உருவக அணி
உவமை அணி
திரிபு அணி
தற்குறிப்பேற்ற அணி
சஞ்சிக் கூலியில் வந்தேன் என்று
தலைமுறையாகச் சொல்லிச் சொல்லி
வஞ்சித் தவனை வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்கே மாரடித்தாய் - உன்
வாணா ளெல்லாம் போரடித்தாய்!
கருமையாக்கப்பட்டுள்ள சொற்றொடரின் சரியான அணி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
உவமை அணி
உருவக அணி
பின்வருநிலை அணி
திரிபு அணி
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் சரியான புனைபெயர்களைத் தேர்ந்தெடுக.
கனக சுப்புரத்தினம்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கண்டெழுதுவோன்
கிறுக்கன்
கிண்டல்காரன்
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் கல்வி.
பிரெஞ்சு மொழிப் பள்ளி
கல்வே கல்லூரி
அரசினர் கல்லூரி
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் தொழில்.
பாவேந்தர்
புலவர்
அரசியல்வாதி
புரட்சிக்
பிசிராந்தையார் நாடக ஆசிரியரின் கொள்கை மொழிப்பற்று ஆகும்.
இக்கூற்று சரியா?
ஆம்
இல்லை
பிசிராந்தையார் நாடகத்தின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?
பிசிராந்தையார்
அறிவுடை நம்பி
கோப்பெருஞ்சோழன்
பச்சைக்கிளி
சரியான துணைக் கதைப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பிசிராந்தையார்
இளங்கோச்சோழன்
செங்கோச்சோழன்
பொத்தியார்
பச்சைக்கிளியின் கொலைக்குக் காரணமாக இருந்த இருவர் யார்?
அறிவுடை நம்பி
மான்வளவன்
அமைச்சர்
தூயன்
பிசிராந்தையார் நாடகத்தின் கருப்பொருள் யாது?
நட்பைப் போற்றுதல்
அறமும் உயர்நட்பும்
நீதியை நிலைநாட்டுதல்
காணாமல் கண்ட நட்பு
பிசிராந்தையாரின் பண்புநலன் யாவை?
நட்பைப் போற்றுபவர்
நீதியை நிலை நாட்டுபவர்
உதவும் மனப்பான்மை கொண்டவர்
அன்புள்ளம்
தூயனின் பண்புநலன் யாவை?
மனைவிமீது அன்பு கொண்டவன்
சந்தேகம் கொண்டவன்
உதவும் மன்ப்பான்மை கொண்டவன்
பழிவாங்கும் தன்மை கொண்டவன்
மான்வளவனின் பண்புநலன் யாவை?
மனைவிமீது அன்பு கொண்டவன்
சந்தேகம் கொண்டவன்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
பழிவாங்கும் தன்மை
இடப்பின்னணியைத் தேர்ந்தெடுக்கவும்.
தோப்பு
அதிகாலை
ஆள்வோர் சமுதாயம்
பாண்டிய நாடு
காலப்பின்னணியைத் தேர்ந்தெடுக்கவும்.
காலை
சோழ நாடு
மாலை
பாண்டிய
சமுதாயப்பின்னணியைத் தேர்ந்தெடுக்கவும்.
இரவு
ஆள்வோர் சமுதாயம்
பகல்
ஆளப்படுவோர்
பிசிராந்தையார் நாடகத்தின் முடிவு யாது?
பச்சைக்கிளியின் மரணம் குறித்த விசாரணை நடைபெறுதல்
இளங்கோச் சோழனின் பதவி ஆசை
கோப்பெருஞ்சோழனின் புதல்வர்கள் தந்தைக்கு எதிராகப் போருக்குத் தயாராகுதல்
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் & பொத்தியார் வடக்கிருந்து உயிர் விடுதல்.
பிசிராந்தையார் நாடகத்தில் இடம்பெற்ற உத்தியைத் தெரிவு செய்யவும்.
பின்னோக்கு உத்தி
முன்னோக்கு உத்தி
நனவோடை உத்தி
உரையாடல்
பிசிராந்தையார் நாடகத்தில் இடம்பெற்ற மொழிநடையைத் தெரிவு செய்யவும்.
இலக்கிய நடை
காதல் நடை
காதல் மொழி
பேச்சு வழக்கு
பிசிராந்தையார் நாடகத்தின்வழி, கிடைக்கப்பெற்ற படிப்பினை யாவை?
நட்பைப் போற்றக் கூடாது
அரசுக்கு மக்கள் நலனின் அக்கறை வேண்டும்
பழிவாங்கும் எண்ணம் கூடாது
செய்த தவற்றை ஒப்புக்கொள்ளக் கூடாது
"மான்வளவன், தூயன் செய்த சூழ்ச்சியால் பச்சைக்கிளியைக் கர்ப்பிணி என்றும் கூட பாராமல் கத்தியால் வெட்டிக் கொலை செய்தான்."
மேற்காணும், மான்வளவனின் செயல் உமக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
மகிழ்ச்சி
வருத்தம்
பெருமிதம்
சிரிப்பு
"பதவி ஆசையால் கோப்பெருஞ்சோழனின் புதல்வர்கள் தந்தைக்கு எதிராகப் போருக்குத் தயாராகுதல்."
மேற்காணும் சூழல் உமக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிப்பிடுக.
மகிழ்ச்சி
கவலை
கோபம்
பெருமிதம்
