wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 SCIENCE -15நா ரொம்ப மண்டலம்

Total questions: 33

Worksheet time: 1hrs 6mins

Name
Class
Date
1.

இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்

a)

கண் விழித்திரை

b)

பெருமூளைப் புறணி

c)

வளர் கரு

d)

சுவாச எபிதீலியம்

2.

பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது

a)

சிறுநீரகம்

b)

காது

c)

மூளை

d)

நுரையீரல்

3.

அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை

a)

மூளை, தண்டு வடம், தசைகள்

b)

உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்

c)

தசைகள், உணர்வேற்பி, மூளை

d)

உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்

4.

டென்ட்ரான்கள் செல் உடலத்தை ---------------தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து -------------- தூண்டலையும் கடத்துகின்றன

a)

வெளியே / வெளியே

b)

நோக்கி/ வெளியே

c)

நோக்கி / நோக்கி

d)

வெளியே / நோக்கி

5.

மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்

a)

அரக்னாய்டு சவ்வு

b)

பையா மேட்டர்

c)

டியூரா மேட்டர்

d)

மையலின் உறை

6.

--------- இணை மூளை நரம்புகளும் ------------ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.

a)

12,31

b)

31,12

c)

12,13

d)

12,21

7.

மைய நரம்பு மண்டலத்திலிருந்து தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்.

a)

உட் செல் நியூரான்கள்

b)

கடத்து நரம்பு செல்கள்

c)

வெளிச்செல் நரம்பு செல்கள்

d)

ஒரு முனை நியூரான்கள்

8.

மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?

a)

தலாமஸ்

b)

ஹைபோதலாமஸ்

c)

பான்ஸ்

d)

கார்பஸ் கலோசம்

9.

ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்

a)

தசைகள்

b)

ஆக்சான்கள்

c)

டெண்ட்ரைட்டுகள்

d)

சைட்டான்

10.

வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்

a)

முகுளம்

b)

வயிறு

c)

மூளை

d)

ஹைப்போதலாமஸ்

11.

கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது

a)

நியூரிலெம்மா

b)

சார்கோலெம்மா

c)

ஆக்ஸான்

d)

டெண்டிரான்கள்

12.

12. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?

a)

முகுளம்

b)

பெருமூளை

c)

பான்ஸ்

d)

ஹைபோதலாமஸ்

13.

பொருத்துக:

அ) நிசில் துகள்கள்---முன் மூளை

ஆ) ஹைப்போதலாமஸ்---புற அமைவு நரம்பு மண்டலம்

இ) சிறு மூளை---சைட்டான்

ஈ) ஸ்வான் செல்கள்---பின்மூளை

a)

2,4,1,3

b)

2,1,3,4

c)

2,3,1,4

d)

3,1,4,2

14.

1. கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும் மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது

காரணம் (R): மூளைத் தண்டு வடத் திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.

a)

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றிற்கான சரிய விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் தவறு

15.

கூற்று (A): டியூரா மேட்டர் மற்றும் யையா மேட்டர்களுக்கிடைப்பட்ட இடைவெளியில் கார்பஸ் கலோசம் அமைந்துள்ளது.

காரணம் (R): இது மூளைப் பெட்டகத்தினுள் நிலையான உள் அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

a)

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றிற்கான சரிய விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் தவறு

16.

நமது உடலில் உள்ளவற்றுள் ----------- என்பது மிக நீளமான செல்லாகும்

(a)  

17.

------------ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.

(a)  

18.

புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு ------------எனப்படும்.

(a)  

19.

செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை-------------

(a)  

20.

தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள -------------மற்றும்-------------ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன

(a)  

21.

6.நியூரானில் ---------------என்னும் நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை

(a)  

22.

மூளைப் பெட்டகத்தினுள் நிலையான அழுத்தத்தை -------------- பேணுகிறது.

(a)  

23.

பெருமூளையின் புறப்பரப்பு -------மற்றும்--------------ஆகியவற்றால் அதிகரிக்கிறது

(a)  

24.

மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி----------------

(a)  

25.

டெண்ட்ரான்கள் என்பவை செல் உடலத்திலிருந்து தூண்டல்களை வெளிப்புறமாக கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்

(a)  

26.

பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றது..

(a)  

27.

மனித உடலில் உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது

(a)  

28.

பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

(a)  

29.

மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது

(a)  

30.

உடலின் அனைத்து நரம்புகளும் மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது

(a)  

31.

மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது

(a)  

32.

உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை வில் ஆகும்

(a)  

33.

சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதில் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.

(a)