wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ACCOUNTANCY LESSON 1 (12 STD )

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது.—

a)

நிறுமம்

b)

சிறிய அளவிலான தனி ஆள்வணிகம்

c)

அரசு

d)

பன்னாட்டு நிறுவனங்கள்

2.

நிலை அறிக்கை ஒரு...

a)

வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை

b)

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

c)

ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

d)

கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு

3.

தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது...

a)

தொடக்க முதல் கண்டறிய

b)

இறுதி முதல் கண்டறிய

c)

அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

d)

அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

4.

பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

a)

நட்டம்

b)

ரொக்கம்

c)

முதல்

d)

இலாபம்

5.

கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக்கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

a)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

b)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

c)

அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

d)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

6.

கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது..

a)

மொத்தக் கடனாளிகள் கணக்கு

b)

பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

c)

மொத்தக் கடனீந்தோர் கணக்கு

d)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கு

7.

முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

a)

இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

b)

ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

c)

இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

d)

வரி அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை

8.

உரிமையாளரின் சொத்துகள் 85,000 மற்றும் பொறுப்புகள் ₹21,000 எனில் அவருடைய முதல்தொகை

a)

₹85,000

b)

₹1,06,000

c)

₹21,000

d)

₹64,000

9.

தொடக்க முதல் ₹10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ₹6,000, அவ்வாண்டின் இலாபம் ₹2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ₹3,000 எனில் இறுதி முதல் காணவும்.

a)

₹9,000

b)

₹11,000

c)

₹21,000

d)

₹3,000

10.

கடனாளிகள் தொடக்க இருப்பு: ₹30,000, பெற்ற ரொக்கம்: ₹ 1,00,000, கடன்விற்பனை: ₹ 90,000 கடனாளிகள்இறுதி இருப்பு: ?

a)

₹30,000

b)

₹1,30,000

c)

₹740,000

d)

₹20,000