

இரட்டைக்கிளவி
Presentation
•
Other
•
9th - 11th Grade
•
Practice Problem
•
Easy
Barkawi Damodharan
Used 3+ times
FREE Resource
7 Slides • 5 Questions
1
இரட்டைக்கிளவி
ஓரு சொல் இரண்டு முறை தொடர்ந்து வந்து பொருள் தருமிடத்து அது இரட்டைக்கிளவி எனப்படும். அதாவது ஓர் சொல் இருமுறை தொடர்ந்து வந்து உணர்த்தும் பொருளை அதே சொற்கள் பிரிந்து நிற்கும் போது தருவதில்லை .

2
இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும்
1.கத கத - விரைவாக
2. கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
3. கரகர - காய்ந்து இருத்தல்
4. கம கம - மணம் வீசுதல்
5. கண கண - உடம்புச் சூடு
6. கலகல - சிரிப்பு
7. கடுகடு - போபமாக பேசுதல்
8. கறகற - தொந்தரவு
9. கலீர் கலீர் - சலங்கையொலி
10. கணீர் கணீர் - மணி ஒலி
3
11. கிணு கிணு - மெல்ல இரைதல்
12. கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
13. கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
14. கிடுகிடு - விரைவாக /அச்சம்
15. கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
16. கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
17. குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
18. குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
19. குபீர் குபீர் - குருதி பாாய்தல்
20. குறு குறு - மனம் உறுத்துதல்
21. குசுகுசு - ரகசியம் பேசுதல்
22. குமுகுமு - மிக மணத்தல்
23. குபுகுபு - புகை கிளம்புதல்
24. கொழு கொழு - பருத்தல்
25. சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
4
26. சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
27. சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
28. சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
29. சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
30. சிலீர் சிலீர் - குளிர்தல்
31. சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
32. சுள்சுள் - வலித்தல்
33. சுறு சுறு - கோபம்
34. டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
35. தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
36. தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
37. தளதள - இளக்கம், சோபை
38. தழுதழு - நாத்தடுமாறுதல்
39. தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
5
40. திருதிரு - அச்சம் ,முழித்தல்
41. திடு திடு - விரைவான ஓட்டம்
42. துடு துடு - ஒலிக்குறிப்பு
43. துருதுரு - சுறுசுறுப்பு
44. துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
45. தொளதொள - இறுக்கமின்மை
46. தொண தொண - இடைவிடாது பேசுதல்
47. நறு நறு - கோபம்
48. நற நற - பல்லைக் கடித்தல்
49. நெருநெரு - உறுத்தல்
50. நொளுநொளு - குழைவு
51. பள பள - மினுங்குதல்
52. பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
6
53. பகபக - வேக குறிப்பு
54. பளிச் பளிச் - மின்னுதல்
55. படபட - இதயத்துடிப்பு
56. பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
57. பளீர் பளீர் - மின்னல்
58. பிசுபிசு - பசைத்தன்மை
59. புறு புறு - முணுமுணுத்தல்
60. பொல பொல - கண்ணீர் வடிதல்
61. பொலுபொலு - உதிர்தல்
62. மடமட - வேகமாக நீர் குடித்தல்
63. மளமள - முறிதல்
64. மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
65. மெது மெது - மென்மை
66. மொழு மொழு - வளர்ச்சி
7
67. மொறமொற - மிகக் காய்தல்
68. மொர மொர - கடித்தல்
69. வழவழ - உறுதியின்மை
70. வளவள - பயனின்றி பேசுதல்
71. வளுவளு - நொளு நொளுத்தல்
72. விதிர்விதிர் - அச்சம்
73. விசுக் விசுக் - வேகநடை
74. விண் விண் - வலித்தல்
75. விடுவிடு - வேகமாக
76. விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
77. வெடுவெடு - கோபமான பேச்சு்
78. வெதுவெது - இளஞ்சூடு
79. வெலவெல - நடுங்குதல், பதறுதல்
8
Multiple Choice
ஆற்று நீர் ................வென ஓடியது.
சட சட
சலசல
சளசள
தடதட
9
Multiple Choice
தங்கம் .............வென பிரகாசித்தது.
விண் விண்
பளிச் பளிச்
தகதக
கம கம
10
Multiple Choice
கூடையில் கிடந்த பூக்கள் ........... என வாசம் வீசின.
மினுமினு
கண கண
சரசர
கமகம
11
Multiple Choice
தமிழரசன் கோபத்தில் பற்களை ...............வென கடித்தான்.
நறநற
கறகற
கரகர
சரசர
12
Multiple Choice
அவள் .........வென சிரித்தாள்.
பொல பொல
தொண தொண
விசுக் விசுக்
கலகல
இரட்டைக்கிளவி
ஓரு சொல் இரண்டு முறை தொடர்ந்து வந்து பொருள் தருமிடத்து அது இரட்டைக்கிளவி எனப்படும். அதாவது ஓர் சொல் இருமுறை தொடர்ந்து வந்து உணர்த்தும் பொருளை அதே சொற்கள் பிரிந்து நிற்கும் போது தருவதில்லை .

Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
21 questions
Lab Safety
Quiz
•
10th Grade
10 questions
Would you Rather?
Quiz
•
9th - 12th Grade
20 questions
Characteristics of Life
Quiz
•
9th - 10th Grade
10 questions
Scientific Method (The scientific method)
Interactive video
•
9th Grade
20 questions
REGULAR Present tense verbs
Quiz
•
8th - 9th Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...