Search Header Logo
உடம்படுமெய் படிவம் 1

உடம்படுமெய் படிவம் 1

Assessment

Presentation

Other

7th Grade

Easy

Created by

MANNOSH RAMA

Used 2+ times

FREE Resource

9 Slides • 3 Questions

1

உடம்படுமெய் - இலக்கணம் - படிவம் 1

2

​உடம்படுமெய் என்பது என்ன?

​'உடம்படுமெய்' எனும் சொல்லின் பொருள் இணைப்பது ஆகும்.

  1. உடம்படுமெய் - உடம்படுத்துவதற்கு - இணைப்பதற்கு

​நிலைமொழி ஈற்றில் உயிரொலி (உயிரெழுத்தின் ஒலி) இருந்து வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிரெழுத்து இருந்தால் அவை இயல்பாகப் புணராது. அவ்விரு உயிர்களையும் உடம்படுத்துவதற்குத் தோன்றும் மெய்யெழுத்தே உடம்படுமெய்யாகும்

3

​தொடர்ச்சி....

​உடம்படுமெய் இருவகைப்படும்:

  • ​யகர உடம்படுமெய் (ய்)

  • ​வகர உடம்படுமெய் (வ்)

4

​யகர உடம்படுமெய் (ய்)

நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் 'ய' கர மெய் தோன்றும்.

​எ . கா =

​கூலி + ஆள் = கூலியாள் (யா எவ்வாறு தோன்றியது?)

​நிலைமொழி ஈற்றில் இருக்கும் எழுத்தைப் பிரித்துப் பார்க்கவும்!

லி (ல் + ) = ஆக, நிலைமொழி ஈற்றில் '' எனும் எழுத்தின் ஒலியுண்டு. இவ்விரு சொற்களையும் இணைக்க யகர உடம்படுமெய் தோன்றும்.

5

​வகர உடம்படுமெய் (வ்)

​நிலைமொழி ஈற்றில் அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ உயிரொலிகள் நிலைமொழி ஈற்றில் இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் 'வ' கர (வ்) உடம்படுமெய் தோன்றும்.

எ.கா:

கோ + இல் = கோவில் ('வி 'எப்படி தோன்றியது?)

கோ (க் + ஓ) + இல் = நிலைமொழி ஈற்றில் ஓகார ஈறு. வருமொழி முதலில் உயிர் எழுத்தாகிய 'இ' உள்ளது. ஆக, இங்கு வகர உடம்படும்மெய் இடம்பெற்றது.

6

​ஏ + உயிர் எப்படி?

​நிலைமொழி ஈற்றில் ஏகாரம் (ஏ) இருந்தால் வகர மெய் அல்லது யகர மெய் தோன்றும். ஆனால், சில விதிகளும் உள்ளன.

​விதி 1 : நிலைமொழியில் ஏ ஈறு இருந்தால், அது பெயர்ச்சொல் என்றால் 'வ்' என்ற உடம்படுமெய் தோன்றும்.

​விதி 2 : நிலைமொழியில் பெயர்ச்சொல் அல்லாத வேறு சொல் இடம்பெற்றால் 'ய்' என்ற உடம்படுமெய் தோன்றும்.

7

​விதி 1 எ.கா:

​தே + உலகம் = தேவுலகம்

​தே (த் + ஏ)  ஆக, இங்கு ஏ + உ ஆகும். 

​தே + வ் + உலகம் ( வ் + உ = வு) இஃது இயல்பு புணர்ச்சியாகும்.

​நிலைமொழி ஈறு (த் + ஏ) ஏ என்ற உயிராக வந்தது. தே என்பது தெய்வம் என்ற பொருளில் வந்த பெயர்ச்சொல். ஆக, இந்த ஈறு வ் என்ற உடம்படுமெய்யைப் பெற்றது. 

8

​விதி 2 எ.கா

அதே + இடம் = அதேயிடம்

​அதே + ய் + இடம்

​நிலைமொழியில் அதே (அது + ஏ) என்ற சொல் பெயர்ச்சொல் அல்ல. எனவே, இந்த ஏ ஈறு, ய் என்ற உடம்படுமெய் பெற்றது.

9

media

10

Open Ended

உடம்படுமெய்யின் வகையை எழுதவும்

11

Open Ended

மூ + அசை

இவற்றுள் எந்த உடம்படுமெய் தோன்றும்?

12

Open Ended

மலை + அருவி

சேர்த்தெழுதுக

உடம்படுமெய் - இலக்கணம் - படிவம் 1

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE