MCQ questions_2019_Prelim

MCQ questions_2019_Prelim

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

6th - 8th Grade

9 Qs

பழமொழி-ஊருடன் கூடி வாழ்

பழமொழி-ஊருடன் கூடி வாழ்

3rd - 6th Grade

8 Qs

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

3rd - 10th Grade

10 Qs

கணனியின் நண்பன் 6(1)

கணனியின் நண்பன் 6(1)

6th Grade

10 Qs

அறிவியல்  QUIZ 8

அறிவியல் QUIZ 8

4th - 6th Grade

10 Qs

சுட்டெழுத்து

சுட்டெழுத்து

6th Grade

8 Qs

PT - 3 - Tamil

PT - 3 - Tamil

6th Grade

10 Qs

மொழி வளம் 1 - தொ6

மொழி வளம் 1 - தொ6

6th Grade

10 Qs

MCQ questions_2019_Prelim

MCQ questions_2019_Prelim

Assessment

Quiz

World Languages

6th Grade

Practice Problem

Hard

Created by

Nalini Raj

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

     ஓர் ஊரில் திரு பாபு என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவரிடம், மாதவன் என்பவன் வேலை செய்து வந்தான். அவன் ஓர் அப்பாவி. திரு பாபுவைப் பார்த்தாலே அவன் பயத்தில் நடுங்குவான்.  இருப்பினும் அவன் தன் முதலாளியைத் தெய்வமாகப் போற்றி வந்தான்.

சிறு வயதில் தன் பெற்றோர் இறந்ததிலிருந்து மாதவன் திரு பாபுவின் கடையில் வேலை செய்து வந்தான். நீண்ட காலம் வேலை புரிந்த அவன், தன் முதலாளிக்கு  ஒரு விசுவாசமான தொழிலாளியாக விளங்கினான். திரு பாபுவோ மாதவனின் நற்குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கடையில் உள்ள எல்லா வேலைகளையும் அவன் தலையில் சுமத்தினார். மாதவனும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லும் பகலும் ஓய்வின்றி வியர்வை சிந்தி உழைத்தான்.

Question 1 - மாதவன், திரு பாபு மீது விசுவாசத்துடன் இருந்ததற்குக் காரணம் என்ன?

அவனுடைய பெற்றோர் இறந்து போனது

திரு பாபுவிடம் நீண்ட காலம் வேலை புரிந்தது

அவன் தன் முதலாளியைத் தெய்வமாக நினைத்தது

அவனுக்குத் திரு பாபுவை எதிர்த்துப் பேசத் தைரியம் இல்லாதது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறு வயதில் தன் பெற்றோர் இறந்ததிலிருந்து மாதவன் திரு பாபுவின் கடையில் வேலை செய்து வந்தான். நீண்ட காலம் வேலை புரிந்த அவன், தன் முதலாளிக்கு  ஒரு விசுவாசமான தொழிலாளியாக விளங்கினான். திரு பாபுவோ மாதவனின் நற்குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கடையில் உள்ள எல்லா வேலைகளையும் அவன் தலையில் சுமத்தினார். மாதவனும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லும் பகலும் ஓய்வின்றி வியர்வை சிந்தி உழைத்தான்.

Question 2 - திரு பாபு எதனால் மாதவனை நன்கு வேலை வாங்கினார்?

மாதவன் முன்கோபக்காரன் என்பதால்

மாதவன் புதிய வியாபாரம் ஆரம்பித்ததால்

மாதவன் நற்குணம் உடையவன் என்பதால்

மாதவன் அவனுடைய தொழிலாளி என்பதால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு புது வியாபாரி வந்தார். அவர் திரு பாபுவின் கடைக்கு அருகிலேயே ஒரு கடையைத் தொடங்கினார். மாதவனின் வேலை செய்யும் திறமையையும் பொறுமையையும் பார்த்த அந்த வியாபாரி மாதவனைத் தனது கடையில் வேலைக்கு அமர்த்த நினைத்தார். ஒரு முறை மாதவன் செய்த சிறு தவற்றுக்காகப் அவனுடைய முதலாளி  அவனைக் கடைக்கு வெளியே நிற்க வைத்துக் கடுமையாகத் திட்டினார். அதனால், மாதவன் சிறிது நேரம் கண்கலங்கி வெளியே நின்றான். இதை அந்த வியாபாரி கவனித்தார். இதுதான் தக்க தருணம் என்று அவர் எண்ணினார். உடனே மாதவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது அவனைப் பின்தொடர்ந்து சென்றார்.

Question 3 - கடையைத் தொடங்கிய புது வியாபாரி என்ன செய்ய நினைத்தார்?

மாதவன் மீது அக்கறை காட்ட நினைத்தார்

மாதவனைத் தன் கடையில் வேலைக்கு அமர்த்த நினைத்தார்

மாதவனின் வேலை செய்யும் திறமையைக் கண்காணிக்க நினைத்தார்

தன் கடையைத் திரு பாபுவின் கடைக்கு அருகில் தொடங்க நினைத்தார்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தற்செயலாக அங்கு வந்த திரு பாபு அதைக் கவனித்தார். உடனே அவர் இருவரையும் பின்தொடர்ந்தார். புது வியாபாரி மாதவனிடம் சென்று, "ஏன் இப்படி அவமானப்பட்டு வாழ்கிறாய்? நீ என்னுடன் வா, உன்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறேன்," என்று கூறினார்.

 

     அதற்கு மாதவன், "ஐயா! உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. ‘’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனக்கு அன்னை, பிதா, தெய்வம் எல்லாமே என் முதலாளிதான். மீண்டும் என்னிடம் இதைப் பற்றிப் பேசாதீர்கள்," என்று பதிலளித்தான். அதைக் கேட்ட திரு பாபு, மாதவன் தன்மேல் கொண்ட விசுவாசத்தை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார்.      

Question                               

மாதவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக

மாதவனுக்குப் புத்திமதி புகட்டுவதற்காக

மாதவனின் மனதை மாற்றி தன்னுடன் சேர்வதற்காக

மாதவனின் நேர்மையான உழைப்பைப் பாராட்டுவதற்காக

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தருணம்

காலம்

சமயம்

வாய்ப்பு

காரணம்