
அலை ஒளியியல்
Authored by bergin G
Physics
12th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யங் இரட்டைப் பிளவு சோதனையில், பிளவுகளுக்குப் பதிலாக இரண்டு நுண்ணிய துளைகள் (pinholes) பயன்படுத்தப்பட்டால், குறுக்கீட்டுப் பட்டைகள் தெளிவாகத் தெரிவதில்லை. காரணம் என்ன?
துளைகள் ஓரியல் மூலங்களாகச் செயல்படாது.
துளைகள் வழியே செல்லும் ஒளியின் செறிவு மிகவும் குறைவாக இருக்கும்.
ஒளி அதிக அளவில் விளிம்பு விளைவு அடையும்.
ஒளி தளவிளைவு அடைந்துவிடும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சோப்பு நீர்க்குமிழி வெடிக்கும் தருவாயில் நிறமற்றுத் தோன்றுவதற்குக் காரணம், அதன் மென்படலத்தின் மேல் மற்றும் கீழ் பரப்புகளில் இருந்து எதிரொளிக்கும் அலைகளுக்கு இடையே _______.
ஆக்கக் குறுக்கீடு ஏற்படுகிறது.
அழிவுக் குறுக்கீடு ஏற்படுகிறது.
முழு அக எதிரொளிப்பு ஏற்படுகிறது.
விளிம்பு விளைவு ஏற்படுகிறது.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறுக்கீட்டு விளைவு மற்றும் விளிம்பு விளைவு ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு எது?
குறுக்கீட்டில் அனைத்துப் பட்டைகளும் சம அகலம் கொண்டவை; விளிம்பு விளைவில் மையப் பட்டை மட்டும் அகலமானது.
குறுக்கீடு ஒலியிலும், விளிம்பு விளைவு ஒளியிலும் மட்டுமே நிகழும்.
குறுக்கீட்டிற்கு ஓரியல் மூலங்கள் தேவையில்லை.
விளிம்பு விளைவில் பட்டைகள் வண்ணமயமாக இருக்கும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மழைத் தூறலின் (drizzle) போது, தெருவிளக்கைச் சுற்றி வண்ண வளையங்கள் தோன்றுவது ______ நிகழ்வால் ஏற்படுகிறது.
நிறப்பிரிகை
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
விளிம்பு விளைவு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டு போலராய்டுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையில் 45° கோணத்தில் மூன்றாவது போலராய்டு வைக்கப்பட்டால், இறுதி ஒளியின் செறிவு என்னவாகும்? (I0 என்பது முதல் போலராய்டுக்குப் பின் வரும் ஒளியின் செறிவு)
பூஜ்ஜியம்
I0/2
I0/4
(ஈ) I0/8
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஹைஜன்ஸ் தத்துவத்தின் முக்கிய வரம்பு யாது?
அது ஒளி நேர்க்கோட்டில் செல்வதை விளக்காது.
அலைகள் ஏன் பின்னோக்கிப் பரவுவதில்லை என்பதை அது விளக்காது.
அது குறுக்கீட்டு விளைவை விளக்காது.
அது மின்காந்த அலைகளுக்குப் பொருந்தாது.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு தொலைநோக்கியின் பகுதிறனை (resolving power) அதிகரிக்கச் சிறந்த வழி எது?
கண்ணருகு லென்சின் குவிய தூரத்தைக் குறைத்தல்.
அதிக அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்துதல்
பொருளருகு லென்சின் விட்டத்தை அதிகரித்தல்.
தொலைநோக்கியின் நீளத்தை அதிகரித்தல்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?