wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொல் / வலிமிகும் வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் இடைச்சொல்லை ஏற்று வந்துள்ள சொல் எது?


ராமு மீன் பிடிக்க ஆற்றங்கரை சென்றான். அவன் தன் தம்பியை அழைத்துச் சென்றான். ஆனால், தூண்டிலில் வைக்கப்படும் உணவை எடுத்துச் செல்ல மறந்ததால் வீடு திரும்பினான்.

a)

அ. ஆற்றங்கரை

b)

ஆ. அவன்

c)

இ. தம்பியை

d)

ஈ. ஆனால்

2.

பத்தியில் இடம்பெற்றுள்ள இடைச்சொல்லை அடையாளம் காண்க.


அரசன் மிகவும் பருமனாக இருப்பான். எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய தொடங்கினான்.

a)

அ. பருமனாக

b)

ஆ. தொடங்கினான்

c)

இ. எனவே

d)

ஈ. உடற்பயிற்சி

3.

கீழ்க்காணும் பகுதியில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


ராமு நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனென்றால், கடும் காய்ச்சல் ஏற்பட்டது. ஏனென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எனவே, இந்தத் தகவலை ஆசிரியரிடம் கூறுமாறு தன் நண்பனிடம் சொன்னான்.


a)

அ. ஏனென்றால்

b)

ஆ. ஏனென்றால்

c)

இ. எனவே

4.

இடைச்சொல்லை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அ. இவனா திருடன்?

b)

ஆ. நேற்று குவாந்தானில் வெள்ளம் ஏற்பட்டது. ஏனென்றால், காலை தொடங்கி இரவு வரை கனத்த மழை பெய்த்தது.

c)

இ. நேற்று மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.

d)

ஈ. எப்பொழுது வீடு திரும்பினாய்?

5.

காலியான இடத்தைச் சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிரப்புக.


நாளை மலேசியா முழுவதும் விடுப்பு வழங்கப்படும். ……………… , நாளை தேசிய தினமாகும்.

a)

அ. ஏனென்றால்

b)

ஆ. ஆனால்

c)

இ. ஆகவே

d)

ஈ. ஆகையால்

6.

சரியான பதிலைத் தெரிவு செய்க.


இணையம் அனைவரது வாழ்விலும் முக்கிய பங்காற்றுகின்றது. ………1……… , சுலபமாகவும் விரைவாகவும் தகவல்களைப் பெறலாம். ………2…… , சில வேளைகளில் தீமையையும் கொண்டு வருகிறது. ………3……. , நன்மை தீமை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

a)

அ. 1. ஆகவே 2. ஏனென்றால் 3. ஆனால்

b)

ஆ. 1. ஏனென்றால் 2. ஆனால் 3. ஆகவே

c)

இ. 1. ஆனால் 2. ஆகவே 3. ஏனென்றால்

7.

சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க

a)

அ. ஓடும்படிச் சொன்னார்

b)

ஆ. தூக்கிலிடும்படிக் கட்டளையிட்டார்

c)

இ. சாப்பிடுமாறுக் கூறினார்

d)

ஈ மற்றச் சீருடைகள்

8.

தவறாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.


அரைக் கிலோ உழுந்தும் பாதிப் பழமும் கடையிலிருந்து வாங்கி வரும்படிச் சொன்னார் அம்மா.

a)

அ. அரைக் கிலோ

b)

ஆ. பாதிப் பழம்

c)

இ. வரும்படிச் சொன்னார்

9.

கீழ்கான்பனவற்றுள் வலிமிகும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அ. ஒப்புவிக்குமாறு கூறினார்

b)

ஆ. மற்ற புத்தகங்கள்

c)

இ. வரையும்படி சொன்னார்

d)

ஈ. தரும்படி பணித்தார்

10.

கீழ்கான்பனவற்றுள் வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அ. இனி கேள்

b)

ஆ. எடுக்கும்படி கூறினார்

c)

இ. தனி பிள்ளை

d)

ஈ. மற்ற காவலாளிகள்