wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கலவை (ஆ:4 & 5) ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால்/என்றாலும், எனினும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பள்ளியில் அடுத்த வாரம் கல்வி முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.________, படிநிலை இரண்டு சார்ந்த மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ள தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டார்._________, அந்த நாளில் பள்ளி காற்பந்தாட்ட குழு வெளி மாநிலத்திற்குச் செல்லவிருப்பதால் அவர்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் உண்டாகியது.

a)

ஏனென்றால், என்றாலும்

b)

ஆகவே, எனினும்

c)

எனவே, அதற்காக

d)

எனினும், அதற்காக

2.

நீச்சல் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என நித்யா முழு மூச்சுடன் பயிற்சி செய்தாள்._______, கடந்த போட்டியின் போது தனக்கு விபத்து ஏற்பட்டதால் அவளால் பங்கேற்க இயலவில்லை.______, சில மாதங்களாகவே அன்றாடம் பயிற்சிக்குச் சென்று வெற்றியடைய வேண்டுமென உறுதியாக இருக்கிறாள்.

a)

ஏனென்றால்,எனினும்

b)

ஆகவே,அதற்காக

c)

ஏனென்றால், அதற்காக

d)

ஆகவெ , எனினும்

3.

இராமன் மட்டுமே 14 வருடம் காட்டிற்குச் செல்ல வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது._______, தன் சகோதரத்துவத்தை விட்டுக்கொடுக்க இயலாத இலட்சுமணனும் சென்றான்._______, அண்ணனுக்குக் கிடைக்காத அரியாசனம் தனக்கும் வேண்டாமென முடிவு செய்தான்.

a)

ஆகையால், அதற்காக

b)

என்றாலும்/எனென்றால்

c)

ஆகவே,என்றாலும்

d)

எனினும், ஆகவே

4.

சித்ராவும் மித்ராவும் இருவருமே இரட்டைச் சகோதரிகள்._______, இருவரும் உருவத்தால் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கின்றனர்._______, குணத்தால் சித்ரா சற்று உயர்ந்தவளாக இருக்கிறாள்.

a)

எனவே,அதற்காக

b)

ஆகவே,எனினும்

c)

ஆகவே, ஏனென்றால்

d)

எனவே, எனினும்

5.

மாணவர்கள் தினமும் நாளிதழ்களை வாசிக்க வேண்டும்._____________ அவை முக்கிய செய்திகளைத் தாங்கி வருகின்றன எனத் தலைமையாசிரியர் மாணவர்களிடம் கூறியது மட்டுமின்றி _________, தினமும் பள்ளி நூல்நிலையத்தில் அதனை வாங்கி வைக்கவும் வழி செய்தார்.

a)

ஆகவே, அதற்காக

b)

எனென்றால், அதற்காக

c)

ஆகவே, எனினும்

d)

எனென்றால், எனினும்

6.

இடைவிடாத கனத்த மழை பெய்தது._________, அக்கிராமத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது. பாதுகாப்புக் கருதி அரசு மயங்களுக்கு மக்கள் மற்றலாகி வர வேண்டும் என அரசாங்கம் கட்டளை விதித்தது; போதுமான வசதிகளும் செய்திருந்தது. ________, மக்கள் மாற்றலாகமலே இருந்தனர்.

a)

ஏனென்றால், எனவே

b)

எனவெ, எனினும்

c)

ஆகவே, ஆகையால்

d)

ஆகையால்,

என்றாலும்

7.

அதிகாரி: பணியாளர்களே, திரு கதிரவன் திறமையான பணியாளர். _______, அவருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது._______, நீங்களும் முழு மூச்சுடன் திறமையாகப் பணியாற்றினால் உங்களுக்கும் பதவி உயர்வு நிச்சயம்.

a)

எனவே, என்றாலும்

b)

அதற்காக,

ஆகவே

c)

ஆகவே, எனினும்

8.

புகைப் பிடிப்பதனால் ஏற்படும் விளைவுகளைச் சுகாதர அமைச்சுப் பல முறை தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர சமூக ஊடக வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது._________, இப்பழக்கம் இன்னும் இளைஞர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றது. _______, நாம் நம்மை திருத்திக் கொண்டாலே இப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.

a)

எனினும், அதற்காக

b)

ஆகையால், ஆகவே

c)

எனினும், எனவே

d)

ஏனென்றால், ஆகவே

9.

உடற்பயிற்சி உடலுக்குத் தேவை.________, அதுவே நம் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கச் செய்கிறது. _________, வாரம் இரு முறை அல்லது 3 முறை உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

a)

என்றாலும், அதற்காக

b)

ஏனென்றால், எனவே

c)

ஏனென்றால், ஆகவே

d)

அதற்காக, எனவே

10.

தலைமையாசிரியர்: மாணவர்கள் நிறைய வாசிக்க வேண்டும்._________, வாசிப்பதின் வழி மொழிவளம் பெருகும்.___________, இலக்கியச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதை அதிகரியுங்கள்!

a)

ஏனென்றால்,

ஆகவே

b)

ஆகவே, எனினும்

c)

ஏனென்றால், ஆகையால்

d)

எனவே, என்றாலும்