NEW
Font size
Worksheetsதொடரியல்
Total questions: 10
Worksheet time: 5mins
1. தொடர் என்பதை தெரிவு செய்க.
A. ஒரு வாக்கியம் ஒரு எழுவாய் மட்டும் கொண்டிருக்கும்.
B. ஒரு பயனிலையை மட்டும் கொண்டிரும்.
C. A. ஒன்றை ஒன்று தொடர்ந்து வருவது தொடர் எனப்படும்.
D. பயனிலை முடிவுப்பெறாத நிலையில் இருக்கும்.
2.கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற பொருள் விளக்குக.
பாடினாள்
A. ஒரு செயலினை சுட்டி விளக்குகிறது.
B. இந்தச் சொல் திணை, பாலை விளக்குகிறது என கூறலாம்.
C. எழுவாய் மறைந்து காணப்படுகிறது.
D. இச்சொல் பயனிலை சொல்லாக விளங்குகிறது.
3. கீழ்க்காண்பனவற்றுள் விகாரப் புணர்ச்சியை தெரிவு செய்க.
A. இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலோ (இறுதியிலோ) வருமொழியின் முதலியோ மாற்றங்கள் ஏற்படும்.
B. நிலைமொழியும், வருமொழியும் மாற்றங்கள் நிகழ்வது ஆகும்.
C. நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து வருமொழி முதலில் உயிர்ரெழுத்து வரும்.
4. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சரியான எழுவாய், பயனிலை அல்லது
செயப்படுப்பொருள் கண்டறிக?
அப்பா குழந்தையை தூக்கிக் கொஞ்சினார்.
A. எழுவாய் – குழந்தை
B.தூக்கிக் – செயப்படுபொருள்
C.அப்பா- பயனிலை
D.கொஞ்சினார் – பயனிலை
5. கீழ்காணும் வினாவுக்கு சிரியான விடையளி.
தனிக்குற்றெழுத்து என்பது :- பாக்கு + தோப்பு = பாக்குத் தோப்பு
A.அச்சு + தொழில் = அச்சுத் தொழில்
B. தப்பு + கணக்கு = தப்புக் கணக்கு
C.கனா + கண்டான் = கனாக் கண்டான்
6. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் வலிமிகும் இடத்தின் பொருளை தெரிவு
செய்க.
A. சொற்றொடர்களில் வருமொழி ‘க்,ச்,த்,ப்’ ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகும்.
B. சொற்றொடர்களில், வருமொழி ‘க்,ச்,த்,ப்’ ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது.
C. வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால்தான் வல்லினம் மிகும்.
7.கீழ்க்காணும் வாக்கியங்களில் எது எழுவாய் பற்றிய தவறான கூற்று? அதனை அடையாளங்காண்க.
A. ஒரு செயல் நிகழ்வதற்கு காரணமாய் இருப்பது எழுவாய்
B. பயனிலையின் முன் யர், எது, எவை, யாவை முதலிய வினாக்களை எழுப்பும்போது விடை கிடைக்காது.
C. பெயர்ச்சொற்கள், தொகைகள், முதலியவை வாக்கியத்தில் எழுவாயாக அமையாது.
8. கீழ்க்காணும் சொற்களில் எது உயிர் இரட்டித்தல் சொல் ஆகும்?
A. தை + திங்கள் = தைத்திங்கள்
B. பூ+ சோலை = பூஞ்சோலை
C. கண் + இமை = கண்ணிமை
D. கை + குட்டை = கைக்குட்டை
தனிக் குற்றெழுத்து அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலிமிகும்.
9. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கு ஏற்ற பதிலை தெரிவு செய்க.
i. கனா + கண்டான் = கனாக் கண்டான்
ii. பலா + பழம் = பலாப் பழம்
iii. முழு + பாடல் = முழுப்பாடல்
iv. ஓடும் + நதி = ஓடுநதி
A. i, ii
B. i, iv
C. ii, iii
D.ii,iii,iv
10. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது செயப்படுப்பொருள் மற்றும் பயனிலையைக் குறிக்கிறது?
கபிலன் தன் நண்பர்களுடன் விளையாடச்சென்று மாலையில் வீட்டை வந்தடைந்தான்.
A. தன், வீட்டை
B. நண்பர்களுடன், மாலையில்
C. கபிலன், விளையாடச்சென்று
D. வீட்டை, வந்தடைந்தான் .
