wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் படிநிலை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

a)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காயைப் பறித்துத் திண்பதற்கு ஒப்பாகும்.

b)

எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

2.

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்,முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையச் சேர்த்துவிடும்.

b)

கண்ணுடையவர் என்று கூறப்படுபவர் கற்றவரே,கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவார்.

3.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விட சிறந்ததாகப் போற்றப்படும்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்

4.

நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு.

a)

ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும்.அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

b)

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

5.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.

a)

இவ்வாழ்க்கை கற்பென்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

b)

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்;ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

6.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

b)

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே;மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை

7.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

a)

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றொரின் பெருமையை,உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களின் மறைமொழிகளே காட்டிவிடும்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

8.

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

_________________________________________________________________

a)

இகழ்வாரை நோவ தெவன்

b)

கற்றனைத் தூறும் அறிவு

9.

குேள் எண் : 236

a)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

b)

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ தென்ப திழுக்கு.

10.

_____________________________________________________________

நோக்கக் குழையும் விருந்து.

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

b)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து