wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 15

Total questions: 21

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

Module 15ன் பெயர் என்ன?

a)

நோயுற்ற காலத்தில் உணவு ஊட்டுதல்

b)

கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு?

c)

தாய்ப்பால் புகட்டுவதில் பிரச்சினை உள்ள தாய்மார்களுக்கு உதவுதல்

d)

குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிடுதல்

2.

பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் குடிப்பதில் உள்ள பிரச்சினைகள்

a)

குழந்தைக்கும் தாயின் மார்பகத்தில் உள்ள தவறான இணைப்பு

b)

தேவையான வலிமையுடன் தாய்ப்பால் குடிக்க இயலாமை

c)

நோயுற்ற போது குறைவாக தாய்ப்பால் குடித்தல் அல்லது தாய்ப்பால் குடிப்பதில் விருப்பம் இல்லாமை

d)

புட்டிப்பால் புகட்டுவதால் தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுதல்

e)

இவை அனைத்தும்

3.

கீழ்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?

a)

மார்பகக் காம்புகளில் புண்

b)

மார்பக பால் கட்டிகள்

c)

உள்வாங்கிய முலைக்காம்பு

d)

இரவு நேரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல்

4.

தாய் வசதியாக அமர்ந்தோ அல்லது படுத்தோ தாய்ப்பால் தரவில்லை என்றாலும் குழந்தையால் நீண்டநேரம் பால் குடிக்க முடியும்

a)

சரி

b)

தவறு

5.

ஆரோக்கியமான பச்சிளம் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாததற்கான காரணங்கள்

a)

தாய் வசதியாக அமர்ந்து அல்லது படுத்து தாய்ப்பால் தராதது

b)

குழந்தையை தாய்ப்பால் குடிக்க வசதியாக பிடித்துக் கொள்ளாதது

c)

குழந்தையின் தலை பின்னோக்கி சாய்வாக இல்லாதது

d)

மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது

e)

தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை தூங்கி விடுவது

6.

ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போதும் ஒரு மார்பகத்தில் முழுவதுமாக குடித்து விட்டு இரண்டாவது மார்பகத்தில் ஒரு பகுதியாவது குடிக்கும்

a)

சரி

b)

தவறு

7.

பின்வருவனவற்றுள் பலவீனமான குழந்தைக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எது?

a)

குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது

b)

தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைத்தல்

c)

குழந்தையைக் கதகதப்பாக வைக்க கங்காரு பராமரிப்பு முறையை பயன்படுத்துதல்

d)

இவை அனைத்தும்

e)

சுத்தமான கைகளால் குழந்தையை கையாளுதல் மேலும் தொப்புள்கொடியை வறண்டதாகவும் சுத்தமானதாகவும் பராமரித்தல்

8.

தாய்ப்பால் குடிக்கும் போது, சீக்கிரம் சோர்வாகி தூங்கிவிடும், பலவீனமான குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கக் கூடாது

a)

சரி

b)

தவறு

9.

பலவீனமான குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லை என்றால் புட்டிப்பால் புகட்டலாம்

a)

சரி

b)

தவறு

10.

ஒரு குழந்தை மிகச் சிறிதளவே தாய்ப்பால் குடித்தாலும் அல்லது தாய்ப்பாலே குடிக்க வில்லை என்றாலும் அதனை வீட்டில் வைத்து பராமரிக்கலாம்

a)

சரி

b)

தவறு

11.

தாய்ப்பால் குடிக்க இயலாத பலவீனமான குழந்தைகள் விஷயத்தில் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்?

a)

குழந்தை பிறந்தவுடன் முதல்வாரத்தில் சென்று வீடுகள் பார்வையிட வேண்டும்

b)

பார்வையிட்ட குழந்தை பலவீனமான குழந்தையா என கண்டறிய வேண்டும்

c)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதில் அல்லது கொடுப்பதில் பிரச்சினை உள்ளதா என கண்டறிய வேண்டும்

d)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதில் அல்லது கொடுப்பதில் பிரச்சினை இருப்பின் தகுந்த ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும்

e)

இவை அனைத்தும்

12.

பலவீனமாக பிறந்த குழந்தை அல்லது நோயுற்ற குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாதபோது தாய்ப்பாலை கைகளால் வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

13.

மார்பகக் காம்பிற்கு பின்னால் உள்ள பெரிய குழாய்களில் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது

a)

சரி

b)

தவறு

14.

போதுமான அளவு தாய்ப்பால் வெளியேற்ற ஐந்து நிமிடங்கள் போதுமானது

a)

சரி

b)

தவறு

15.

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்

b)

பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்

c)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒருபோதும் சூடாக்க கூடாது

d)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது

e)

இவை அனைத்தும்

16.

வெளியேற்றிய தாய்ப்பாலை கொடுப்பதற்கு முன் ஒவ்வொரு முறையும் குழந்தை நேரடியாக தாய்ப்பால் குடிக்கிறதா என முயற்சி செய்ய வேண்டும்

a)

சரி

b)

தவறு

17.

குழந்தை சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை குடிக்கவில்லை என்றால் குழந்தையின் வாயில் ஊற்றலாம் இதனால் குழந்தைக்கு அடைப்பு ஏற்படாது

a)

சரி

b)

தவறு

18.

குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவதை விட கிண்ணத்தில் தாய்ப் பால் புகட்ட நீண்ட நேரம் ஆகும்

a)

சரி

b)

தவறு

19.

மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

a)

மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடன் இருக்கும்

b)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

c)

தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது

d)

தாய்ப்பால் குடிக்காத குழந்தை பசி மற்றும் எரிச்சலுடன் காணப்படும்

e)

இவை அனைத்தும்

20.

கீழ்கண்டவற்றுள் தாய்க்கு மார்பக பால் கட்டிகள் இருக்கும் போது செய்யக் கூடாதது எது?

a)

சூடான துணியை பயன்படுத்தி மார்பகத்தை மசாஜ் செய்யலாம்

b)

பாலை வெளிப்படுத்த மார்பகங்களை தயார் செய்யலாம்

c)

இரு மார்பகங்களில் இருந்தும் முழுமையாக பாலை வெளியேற்றலாம்

d)

பிரச்சினை உள்ள போது குழந்தை பசியாற புட்டிபால் பயன்படுத்தலாம்

21.

முலைக்காம்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:

அ. இணைப்பு சரியாக இல்லாதது

ஆ. புட்டிப் பால் புகட்டுவது

இ. சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துவது

ஈ. தாய்ப்பாலை புண் உள்ள முலைக்காம்பில் தடவுவது

a)

அ மற்றும் ஈ சரியானவை

b)

ஆ மற்றும் ஈ சரியானவை

c)

ஈ சரியானது

d)

அ, ஆ, இ சரியானவை