Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு -அலகு1- இயக்கவிதிகள்

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?

a)

பொருளின் எடை

b)

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

பொருளின் நிறை

d)

அ மற்றும் ஆ

2.

2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்கு சமமானது?

a)

உந்த மாற்று வீதம்

b)

விசை மற்றும் கால மாற்ற வீதம்

c)

உந்த மாற்றம்

d)

நிறை வீத மாற்றம்

3.

3. கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

a)

ஓய்வு நிலையிலுள்ள பொருளில்

b)

இயக்க நிலையில் உள்ள பொருளில்

c)

அ மற்றும் ஆ

d)

சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

4.

4. உந்த மதிப்பை Y அச்சிலும், காலத்தினை X அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ் வரைபட சாய்வின் மதிப்பு

a)

கணத்தாக்கு விசை

b)

முடுக்கம்

c)

விசை

d)

விசைமாற்ற வீதம்

5.

5. விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?

a)

நீச்சல் போட்டி

b)

டென்னிஸ்

c)

சைக்கிள் பந்தயம்

d)

ஹாக்கி

6.

6. புவிஈர்ப்பு முடுக்கம் g ன்அலகு ms - 2 ஆகும். இது கீழ் காண்அலகுகளில் எதற்கு சமமாகும்

a)

Cm S -1

b)

N Kg -1

c)

N m 2 Kg - 1

d)

Cm 2 S -2

7.

7. ஒரு கிலோகிராம் எடை என்பது ............... ற்கு சமமாகும்

a)

9.8 டைன்

b)

9.8 x 10 4 N

c)

98 X 10 4 டைன்

d)

980 டைன்

8.

8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆாத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு

a)

4M

b)

2M

c)

M/4

d)

M

9.

9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடை யானது?

a)

50% குறையும்

b)

50% அதிகரிக்கும்

c)

25% குறையும்

d)

300% அதிகரிக்கும்

10.

10. ராக்கெட் ஏவுதலில் ................. விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

c)

கேர்கோட்டு உந்தமாறாக் கோட்பாடு

d)

அ மற்றும் இ

11.

11. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ................. தேவை

a)

தொலைவு

b)

இயக்கம்

c)

விசை

d)

உந்தம்

12.

12. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால் பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு .............. மூலம் விளக்கப்படுகிறது.

a)

இயக்கத்தில் நிலைமம்

b)

ஒய்வில் நிலைமம்

c)

திசையில் நிலைமம்

d)

உந்தம்

13.

13. மரபு ரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ............... குறியிலும், இடஞ்சுழித் திருப்புத்திறன் ................. குறியிலும் குறிக்கப்படுகிறது.

a)

நேர், எதிர்

b)

எதிர், நேர்

c)

எதிர், எதிர்

d)

நேர், நேர்

14.

14. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற ................ பயன்படுகிறது

a)

ஏற்றப் பலகை

b)

திருப்புச் சக்கரம்

c)

பற்சக்கரம்

d)

இரட்டை

15.

15. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் .................. அளவாக இருக்கும்

a)

98

b)

980

c)

890

d)

490

16.

16. விசையின் எண் மதிப்பு ......... ஆல் அளவிடப்படுகிறது

a)

நிலைமம்

b)

விசை

c)

திருப்புத்திறன்

d)

நேர்க்கோட்டு உந்தம்

17.

17. விசை ஒரு ......... அளவு

a)

வெக்டார்

b)

ஸ்கேலார்

c)

டைன்

d)

நியூட்டன்

18.

18. ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செ.மீ வி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை

a)

1 N

b)

10 N

c)

102 டைன்

d)

1 டைன்

19.

19. இரு பொருட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவற்றிற்கிடையே உள்ள விசை என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ........ ஆக இருக்கும்

a)

2F

b)

F/2

c)

F/4

d)

4F

20.

20. விசையின் விதி என்பது

a)

நியூட்டனின் முதல் விதி

b)

நியூட்டனின் இரண்டாம் விதி

c)

நியூட்டனின் மூன்றாம் விதி

d)

நியூட்டனின் ஈர்ப்பியல் விதி

21.

21. 50 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் .................. அளவாக இருக்கும்

a)

98

b)

980

c)

49

d)

490

22.

22. புவியின் ஆரம் R ன் மதிப்பு

a)

6738 km

b)

6387 km

c)

6783 km

d)

6378 km

23.

23. உந்தமாற்றத்தின் எண் மதிப்பு

a)

விசை

b)

இரட்டை

c)

கணத்தாக்கு

d)

டைன்

24.

24. ஒரு நியூட்டன் என்பது

a)

103 டைன்

b)

105 டைன்

c)

107 டைன்

d)

109 டைன்

25.

25. நிலநடுக்கோட்டுப் பகுதியில் g ன் மதிப்பு ........... துருவப்பகுதியில் g ன் மதிப்பு .......... ஆகும்

a)

குறைவு, குறைவு

b)

அதிகம், அதிகம்

c)

குறைவு, அதிகம்

d)

அதிகம், குறைவு

26.

26. விண்பொருட்களின்பாதையை வரையறை செய்ய பயன்படும் விதி

a)

உந்த அழிவின்மை விதி

b)

ஈர்ப்பியல் விதி

c)

நியூட்டனின் முதல் விதி

d)

நியூட்டனின் இரண்டாம் விதி

27.

27. விற்பனை தள்ளுவண்டியின் நிறை 60கி.கி. வண்டியை 0.3 மீ வி-2 என்ற அளவில் முடுக்குவிக்க செயல்படுத்த வேண்டிய விசையின் அளவு

a)

18 N

b)

200 N

c)

60.3 N

d)

59.7 N

28.

28. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதி

a)

ஈர்ப்பியல் விதி

b)

நியூட்டனின் முதல் விதி

c)

நியூட்டனின் இரண்டாம் விதி

d)

உந்த அழிவின்மை விதி

29.

29. ஒரு பொருளின் மீது 5 N விசை செயல்பட்டு அப்பொருளை 5 செ.மீ வி -2 என்ற அளவிற்கு முடுக்குவிக்கிறது எனில் பொருளின் நிறை .........

a)

10 kg

b)

1000 kg

c)

1 kg

d)

100 kg

30.

30. 5 கிகி நிறையுள்ள பொருள் ஒன்றின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவீ -1 எனில் அதன் திசைவேகம

a)

0.1 மீவீ -1

b)

0.5 மீவீ -1

c)

2.5 மீவீ -1

d)

2 மீவீ -1

31.

31. ஒரு பனி சறுக்கு விளையாட்டு வீரர் தனது கால் தசைகளால் கடினமாக உந்தித்தள்ளி வேகமாக நகரத் தொடங்குகிறார். இது ..........

a)

நியூட்டனின் முதல் விதி

b)

நியூட்டனின் இரண்டாம் விதி

c)

நியூட்டனின் மூன்றாம் விதி

d)

அழிவின்மை விதி

32.

32. ஒரு படகை துடுப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது

a)

நியூட்டனின் முதல் விதி

b)

நியூட்டனின் இரண்டாம் விதி

c)

நியூட்டனின் மூன்றாம் விதி

d)

உந்த மாறா விதி

33.

33. ஒரு கி.கி. நிறையுள்ள ஒரு பொருள் மீது செயல்படும் புவியின் ஈர்ப்பு விசை

a)

8.9 N

b)

9.8 N

c)

980 N

d)

1 N

34.

34. 1 N விசையானது 1 கி.கி நிறையின் மீது செயல்படும் போது அது நகருமானால் அதன் முடுக்கம்

a)

1 ms1

b)

2 ms 1

c)

1ms - 1

d)

2 ms-1

35.

35. நிலைமம் என்பது

a)

பொருளின் தன்மை

b)

விசையின் வக

c)

பொருளின் வேகம்

d)

ஏதுமில்லை

36.

36. மின்தூக்கி மேலே உயரும்போது தோற்ற எடை

a)

குறையும்

b)

சமமாக இருக்கும்

c)

அதிகரிக்கும்

d)

ஏதுமில்லை

37.

37. கணத்தாக்கின் SI அலகு

a)

Ns

b)

Ns2

c)

kg ms - 2

d)

kg m2 s - 2

38.

38. இது ஒரு வெக்டர் அளவு

a)

வேகம்

b)

தொலைவு

c)

நீளம்

d)

உந்தம்

39.

39. ஓடும் மகிழுந்து வளை பாதையில் செல்லும் போது பயணியர் ஒரு பக்கமாக சாயக் காரணம்

a)

இயக்கத்தில் நிலைமம்

b)

திசையில் நிலைமம்

c)

ஓய்வில் நிலைமம்

d)

விசை

40.

40. ஒரு பொருளின் நிறை 50 kg, 100 N விசையுடன் ஓடுகிறது எனில் அதன் முடுக்கம்

a)

0.2 ms-2

b)

2 ms - 2

c)

500 N

d)

2 N

Similar Resources on Wayground