Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BIOLOGY 18-22

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன

a)

அ. ஒரு ஜோடி ஜீன்கள்

b)

ஆ. பண்புகளை நிர்ணயிப்பது

c)

இ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது

d)

ஈ. ஒடுங்கு காரணிகள்

2.

செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி

a)

குரோமோமியர்

b)

சென்ட்ரோசோம்

c)

சென்ட்ரோமியர்

d)

குரோமோனீமா

3.

ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது

a)

ஹெலிகேஸ்

b)

டி.என்.ஏ பாலிமெரேஸ்

c)

ஆர்.என்.ஏ பிரைமர்

d)

டி.என்.ஏ லிகேஸ்

4.

எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

a)

பிரிதல்

b)

குறுக்கே கலத்தல்

c)

சார்பின்றி ஒதுங்குதல்

d)

ஒடுங்கு தன்மை

5.

சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது _____ வகை குரோமோசோம்.

a)

டீலோ சென்ட்ரிக்

b)

மெட்டா சென்ட்ரிக்

c)

சப்- மெட்டா சென்ட்ரிக்

d)

அக்ரோ சென்ட்ரிக்

6.

டி.என்.ஏ வின் முதுகெலும்பாக _____ உள்ளது.

a)

டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

b)

பாஸ்பேட்

c)

நைட்ரஜன் காரங்கள்

d)

சர்க்கரை பாஸ்பேட்

7.

மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ________

a)

22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1ஜோடி அல்லோசோம்கள்

b)

22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்கள்

c)

46 ஆட்டோசோம்கள்

d)

46 கோடி ஆட்டோசோம் கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

8.

பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ________ என அழைக்கப்படுகிறது.

a)

நான்மய நிலை

b)

அன்யூ பிளாய்டி

c)

யூ பிளாய்டி

d)

பல பன்மய நிலை

9.

உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

a)

தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்

b)

தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

c)

தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

d)

தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கிடையே தொடர்பில்லை

10.

"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்

a)

சார்லஸ் டார்வின்

b)

எர்னஸ்ட் ஹெக்கல்

c)

ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

d)

கிரிகர் மெண்டல்

11.

பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?

a)

கருவியல் சான்றுகள்

b)

தொல் உயிரியல் சான்றுகள்

c)

எச்ச உறுப்பு சான்றுகள்

d)

மேற்குறிப்பிட்ட அனைத்தும்

12.

தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை

a)

ரேடியோ கார்பன் முறை

b)

யுரேனியம் காரீய முறை

c)

பொட்டாசியம் ஆர்கான் முறை

d)

அ மற்றும் இ

13.

வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

a)

கொரானா

b)

J.W.கார்ஸ் பெர்கர்

c)

ரொனால்டு ராஸ்

d)

ஹியுகோ டி விரிஸ்

14.

ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?

a)

போத்துத் தேர்வு முறை

b)

கூட்டுத் தேர்வு முறை

c)

தூய வரிசைத் தேர்வு முறை

d)

கலப்பினமாக்கம்

15.

பூசா கோமல் என்பது _____ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

a)

கரும்பு

b)

நெல்

c)

தட்டைப்பயிறு

d)

மக்காச் சோளம்

16.

கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____ இன் ரகமாகும்.

a)

மிளகாய்

b)

மக்காச்சோளம்

c)

கரும்பு

d)

கோதுமை

17.

தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ______ ஆகும்.

a)

IR 8

b)

IR 24

c)

அட்டாமிட்டா 2

d)

பொன்னி

18.

உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?

a)

உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி

b)

வாழும் உயிரினங்கள்

c)

வைட்டமின்கள்

d)

அ மற்றும் ஆ

19.

டி.என்.ஏ வை வெட்டப் பயன்படும் நொதி ______

a)

கத்தரிக்கோல்

b)

ரெஸ்ட்ரிக்சன் எண்டோநியூக்ளியேஸ்

c)

கத்தி

d)

ஆர்.என்.ஏ நொதிகள்

20.

rDNA என்பது ______

a)

ஊர்தி DNA

b)

வட்ட வடிவ DNA

c)

ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை

d)

சாட்டிலைட் DNA

21.

DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _____ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

a)

ஓரிழை

b)

திடீர்மாற்றமுற்ற

c)

பல்லுருத்தோற்ற

d)

மீண்டும் மீண்டும் வரும் தொடர்

22.

மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் _____ என அழைக்கப்படுகின்றன.

a)

அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்

b)

மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை

c)

திடீர் மாற்றம் அடைந்தவை

d)

அ மற்றும் ஆ

23.

ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மாயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே _____ ஆகும்.

a)

n = 7 மற்றும் x = 27

b)

n = 21 மற்றும் x = 21

c)

n = 7 மற்றும் x = 7

d)

n = 21 மற்றும் x = 7

24.

புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி _____

a)

நிக்கோட்டின்

b)

டானிக் அமிலம்

c)

குர்குமின்

d)

லெப்டின்

25.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் _____

a)

மே 31

b)

ஜூன் 6

c)

ஏப்ரல் 22

d)

அக்டோபர் 2

26.

சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன ஏனெனில் அவை

a)

வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை

b)

பிளவுக்கு உட்படுவதில்லை

c)

திடீர் மாற்றமடைந்த செல்கள்

d)

துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

27.

நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை

a)

கார்சினோமா

b)

சார்க்கோமா

c)

லுயூக்கேமியா

d)

லிம்போமா

28.

அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தால் உருவாவது _____

a)

ஞாபகமறதி

b)

கல்லீரல் சிதைவு

c)

மாயத் தோற்றம்

d)

மூளைச் செயல்பாடு குறைதல்

29.

இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்

a)

ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று

b)

பெரிகார்டியத்தின் வீக்கம்

c)

இதய வால்வுகள் வலுவிழப்பு

d)

இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

30.

எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _____ என்று பெயர்.

a)

லுயூக்கேமியா

b)

சார்க்கோமா

c)

கார்சினோமா

d)

லிம்போமா

31.

மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.

a)

வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

b)

தீங்கற்ற கட்டி

c)

அ மற்றும் ஆ

d)

மகுடக் கழலை நோய்

32.

பாலிபேஜியா என்ற நிலை _____ ல் காணப்படுகிறது.

a)

உடற்பருமன்

b)

டயாப்டீஸ் மெல்லிடஸ்

c)

டயாப்டீஸ் இன்சிபிடஸ்

d)

எய்ட்ஸ்

33.

மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி _____

a)

கண்கள்

b)

செவி உணர்வுப் பகுதி

c)

கல்லீரல்

d)

மைய நரம்பு மண்டலம்

34.

கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்?

(i) தார்

(ii) கரி

(iii) பெட்ரோலியம்

a)

(i) மட்டும்

b)

(i) மற்றும் (ii)

c)

(ii) மற்றும் (iii)

d)

(i), (ii) மற்றும் (iii)

35.

கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?

a)

கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்

b)

கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்

c)

கழிவுகளை மறு சுழற்சி செய்தல்

d)

மேலே உள்ளவை அனைத்தும்

36.

வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்

(i) கார்பன் மோனாக்சைடு

(ii) சல்பர் டை ஆக்சைடு

(iii) நைட்ரஜன் ஆக்சைடுகள்

a)

(i) மற்றும் (ii)

b)

(i) மற்றும் (iii)

c)

(ii) மற்றும் (iii)

d)

(i), (ii) மற்றும் (iii)

37.

மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது

a)

காடுகள் அழிப்பு

b)

காடுகள்/மரம் வளர்ப்பு

c)

அதிகமாக வளர்த்தல்

d)

தாவரப் பரப்பு நீக்கம்

38.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

a)

பெட்ரோலியம்

b)

கரி

c)

அணுக்கரு ஆற்றல்

d)

மரங்கள்

39.

கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம் _____

a)

மழைப்பொழிவு இல்லாத இடம்

b)

குறைவான மழைப்பொழிவு உள்ள இடம்

c)

அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

d)

இவற்றில் எதுவுமில்லை

40.

கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள் _____

a)

காற்றாற்றல்

b)

மண்வளம்

c)

வன உயிரி

d)

மேலே உள்ள அனைத்தும்

41.

கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்

a)

மின்சாரம்

b)

கரி

c)

உயிரி வாயு

d)

மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

42.

பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது _____

a)

பூமி குளிர்தல்

b)

புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்

c)

தாவரங்கள் பயிர் செய்தல்

d)

பூமி வெப்பமாதல்

43.

மிக மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் _____

a)

நீர் ஆற்றல்

b)

சூரிய ஆற்றல்

c)

காற்றாற்றல்

d)

வெப்ப ஆற்றல்

44.

புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு _____

a)

கடல் மட்டம் உயர்தல்

b)

பனிப்பாறைகள் உருகுதல்

c)

தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்

d)

மேலே கூறிய அனைத்தும்

45.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

a)

காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்

b)

காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன

c)

காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது

d)

காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்