wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9 போட்டித்தேர்வு வினா

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

தமிழ் விடு தூது------என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது?

a)

தொடர் நிலைச் செய்யுள்

b)

புதுக்கவிதை

c)

சிற்றிலக்கியம்

d)

தனிப்பாடல்

2.

காலம் பிறக்கும் முன்பிறந்தது தமிழே!-எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!------இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்.

a)

முரன், எதுகை, இரட்டை த்தொடை

b)

இயைபு,அளபெடை.செந்தொடை.

c)

மோனை.எதுகை.இயைபு

d)

மோனை.முரன்.அந்தாதி

3.

முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர்?

a)

ஜான் பென்னி குவிக்

b)

ராஜ ராஜ சோழன்

c)

முதலாம் ராஜேந்திரன்

d)

ராஜேந்திர சோழன்

4.

"மிசை" என்பதன் எதிர்ச் சொல் என்ன?

a)

கீழே

b)

மேலே

c)

இசை

d)

வசை

5.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

a)

அகழி

b)

ஆறு

c)

இலஞ்சி

d)

புலரி

6.

அழகின் சிரிப்பு என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வானிதாசன்

d)

முடியரசன்

7.

CONICAL STONE ---கலைச்சொல் என்ன?

a)

நீர் மேலாண்மை

b)

குமிழிக் கல்

c)

வெப்ப மண்டலம்

d)

தண்ணீர்

8.

ஐம்பெருங்குழு.எண்பேராயம்---சொற்றொடர் உணர்த்தும் இலக்கணம்?

a)

திசைச் சொற்கள்

b)

வடசொற்கள்

c)

உரிச்சொல்

d)

தொகைப் சொற்கள்

9.

பொருந்தாத இணை எது?

a)

ஏறுகோள்-எருது கட்டி

b)

திருவாரூர்-கரிக்கையூர்

c)

ஆதிச்சநல்லூர்-அரிக்கமேடு

d)

பட்டிமன்றம்-பட்டிமண்டபம்

10.

முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக?

a)

தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

b)

தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

c)

தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்

d)

தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்

11.

பின்வருவனவற்றுள் தவறான செய்தியை தரும் கூற்று

a)

அரிக்கமேடு அகழ்வாய்வு ரோமானிய நாணயங்கள் கிடைத்தன

b)

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்து கூறப்பட்டுள்ளது

c)

எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

d)

பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது

12.

தீரா இடும்பை தருவது எது?

a)

ஆராயாமை. ஐயப்ப டுதல்

b)

குணம். குற்றம்

c)

பெருமை. சிறுமை

d)

நாடாமை. பேணாமை

13.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

a)

ஜி யு போப்

b)

கால்டுவெல்

c)

வீரமாமுனிவர்

d)

பாரதிதாசன்

14.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது?

a)

தேசிய திறனறி தேர்வு

b)

ஊரக திறனறி தேர்வு

c)

தேசிய திறனறி கல்வி உதவித்தகை தேர்வு

d)

மூன்றும் சரி

15.

பல்லவர் காலச் சிற்பக் கலைக்கு சிறந்த சான்று

a)

மாமல்லபுரம்

b)

பிள்ளையார்பட்டி

c)

தாடிக்கொம்பு

d)

குன்றகுடி

16.

மரவேர் என்பது----புணர்ச்சி

a)

இயல்பு

b)

திரிதல்

c)

தோன்றல்

d)

கெடுதல்

17.

அதிரப் புகுதக் கனாக்கண்டேன்-யார் கனவில் யார் அதிர புகுந்தார்?

a)

கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

b)

தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

c)

ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

d)

ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

18.

திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை

a)

விலங்கு உருவங்கள்

b)

தீர்த்தங்கரர் உருவங்கள்

c)

தெய்வ உருவங்கள்

d)

நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

19.

வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே-இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

a)

மனம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

b)

வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

c)

செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்

d)

பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

20.

முண்டி மோதும் துணிவே இன்பம்-இவ்வடியில் இன்பமாக உருவாக்கப்படுவது எது?

a)

மகிழ்ச்சி

b)

வியப்பு

c)

துணிவு

d)

மருட்சி

21.

ஞானம் என்பதன் பொருள் யாது?

a)

தானம்

b)

தெளிவு

c)

சினம்

d)

அறிவு

22.

தமிழ் புலவரைப் போலவே உரோம சிந்தனையாளர் கொண்ட கொள்கை

a)

நிலையற்ற வாழ்க்கை

b)

பிறருக்காக வாழ்க்கை

c)

இம்மை மறுமை

d)

ஒன்றே உலகம்

23.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

a)

சொல் பின்வருநிலையணி

b)

பொருள் பின்வருநிலையணி

c)

சொற்பொருள் பின்வருநிலையணி

d)

வஞ்சப்புகழ்ச்சி அண

24.

இமயத்துக் ""கோடு""உயர்ந்தன்ன-இவ்வடியில் கோடு என்ற சொல்லின் பொருள் யாது?

a)

கொம்பு

b)

மலையுச்சி

c)

சங்கு

d)

மேடு

25.

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் எண்ணிக்கை?

a)

1333

b)

1330

c)

1210

d)

1310