Worksheetsஅமைப்புச் சொற்கள்
Total questions: 3
Worksheet time: 45mins
நட்பு என்பது ஆழமான அன்பென்று கூறலாம். ஆனால் நாம் அதை முழுமையாக உணர்வது இல்லை. நம் வாழ்வில் சிறிது Q11 _______ நண்பர்கள் நம்மோடு இருப்பார்கள் என நினைத்து அவர்களை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். Q12.__________ நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால் நாம் நம்முடைய நண்பர்களை முழுமையாக நேசிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தாயிடமிருந்தே உண்மையான அன்பைப் பெறுகின்றனர். அது இயற்கையான ரத்தபந்தம் என்பதால் ஏற்படுவதாகும். ஆனால், எவ்வித ரத்த உறவும் Q13 _________ நம்முடைய நலனை விரும்புவது நம்முடைய நண்பர்கள் மட்டுமே என்றால் அது மிகையில்லை.
வேதனைகளையும், கவலைகளையும் நண்பர்களிடம் Q14_________கொள்பவர்கள் மிகவும் குறைவே. மேலும் நண்பர்களுக்காக நாம் Q15 __________ விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்று பார்த்தால் அதுவும் குறைவே. எனவே நாம் நல்ல நண்பர்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.
1. இல்லாமல் 6) நேரமே
2) ஆனால் 7) எத்தனை
3) பகிர்ந்து 8) எதிர்பார்ப்பும்
4) அன்பும் 9) காலமே
5) எவ்வளவு 10) ஆகவே
தேன் என்பது பூக்களில் இருக்கும் ஒரு திரவம். பூக்களின் அழகிய நிறமும் வாசனையும் தேனீக்களைப் பூக்களிடத்தில் இழுக்கின்றன. தேனீக்கள் அப்பூக்களில் உள்ள Q11 ____( )____ பருகுகின்றன. பிறகு, தேனீக்கள் தாம் பருகியவற்றைத் தம் வாயில் அமைந்துள்ள உறிஞ்சுகுழாயின் மூலம் தம் வாயிலுள்ள பையில் நிரப்புகின்றன. தேனீக்கள் தேன்கூட்டை அடைந்ததும் Q12 ___( )______ உள்ள அறைகளில் தேனை உமிழ்ந்து சேமித்து வைக்கின்றன. இதுவே நாம் பயன்படுத்தும் தேனாகும். தேன் மிகப் பழங்காலத்திலிருந்தே உடலுக்கு Q13 ____( )_____ தரும் உணவுப் பொருளாகவும் பயன்படுகிறது; மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தேன் மக்களுக்கு உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
மேலும் தேன் Q14 ___( )____ அழிக்கும் தன்மை வாய்ந்தது. தேன் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் இருக்கக்கூடியது. இதனால்தான், சில வகை உணவுகளில் தேன் சேர்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று பஞ்சாமிர்தமாகும். குழந்தைகளின் Q15 ___( )_____ தினமும் தேனைத் தடவி வந்தால் குழந்தைகளுக்கு நன்றாகப் பேச்சு வரும் என்று முன்னோர் கூறுகிறார்கள். எனவே, தேனின் அருமையை உணர்ந்து நாமும் அதை அளவோடு பயன்படுத்தலாம்.
(1) அறிவை (2) அழிக்கும்
(3) ஊட்டம் (4) கிருமிகளை
(5) அழகு (6) தேன்கூட்டில்
(7) நாவில் (8) சுவையை
(9) ஈக்களை (10) தேனை
இன்று புதிது புதிதாக நோய்கள் மனிதர்களைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. Q11___________ அனைத்து நோய்களுக்கும் நம்மிடமே மருந்துகள் உள்ளன. கீரை வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் கொண்ட ஆரோக்கியமான Q12_________ சாப்பிட்டு வந்தால் நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் நோய்களின்றி வாழலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர பழங்களிலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் ஆப்பிள் முதன்மையானதாக Q13_________. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் Q14 ________ பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்து ஆகும். அந்த அளவிற்கு ஆப்பிளில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, ஆப்பிளில் நார்ச்சத்து Q15___________ உள்ளது. தினந்தோறும் உணவோடு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை நாமும் கடைபிடிக்க வேண்டும்.
(1) விளங்குகிறது (2) மருந்தை
(3) உணவை (4) என
(5) ஆனால் (6) அதனால்
(7) அதிகம் (8) மிகவும்
(9) அமைகிறது (10) என்பது
