NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 14
Worksheet time: 14mins
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
உப்பிட்டவரை உள்ளவும் நினை
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.
ஊருடன் கூடி வாழ்
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
சிவா கோபத்தால் செய்யும் காரியம் _________________________ என்பதற்கேற்ப அவனுக்கே பாதகமாக முடிந்தது.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஊருடன் கூடி வாழ்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
முதன் முறையாக, கோலாலம்பூருக்கு வந்த முருகன் வழி தெரியாததால் பலரிடம் __________________என்பதற்கேற்ப வழி கேட்டுக் கொண்டே செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சபா சென்ற அரவிந்தன் அங்குள்ள மக்களுடன் _________________________ என்பதற்கேற்ப ஒற்றுமையாக வாழத் தொடங்கினான்.
கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஊருடன் கூடி வாழ்
தேர்ச்சி பெற முயன்று படித்த கந்தனுக்கு இறைவன் ___________________________ என்பதற்கேற்ப துணை இருப்பார் எனப் பெற்றோர்கள் நம்பினர்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஊருடன் கூடி வாழ்
அழுதபிள்ளை பால் குடிக்கும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சீலன் தனது மருத்துவப் படிப்புக்கு உதவிய அந்தப் பெரியவரை முதுமைக் காலத்தில் _______________ என்பதற்கேற்ப மறவாமல் ஆதரித்தான்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஊருடன் கூடி வாழ்
அழுதபிள்ளை பால் குடிக்கும்
பாலு தன் தந்தையிடம் _______________________ என்பதற்கேற்ப தனக்கு வேண்டியவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்வான்.
அழுதபிள்ளை பால் குடிக்கும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஊருடன் கூடி வாழ்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
மருத்துவராக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய உதவி செய்த நண்பனைக் கபிலன்____________________என்பதற்கேற்ப என்றும் மறக்கவில்லை.
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
குமரன் ________________________________என்பதற்கேற்ப சிறுவயதிலேயே சிலம்பக் கலையைக் கற்றுக் கொண்டான்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
சிக்கனம் சீரளிக்கும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சுகன்யா _____________________ என்பதற்கேற்ப இளம் வயதிலேயே கணினி வகுப்பிற்குச் சென்று பலவற்றைக் கற்றுக் கொண்டாள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடு வாழ்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சிக்கனம் சீரளிக்கும்
