wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

எலியும் பூனையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

b)

எப்போதும் ஒற்றுமையாக இருத்தல்

c)

எப்போதும் பொறாமை கொண்டிருத்தல்

d)

எப்போதும் விளையாடிக் கொண்டிருத்தல்

2.

நிறைவு செய்க.

_________________ இரும்பைக் கவர்வது போல

a)

பலகை

b)

வானம்

c)

காந்தம்

d)

தகரம்

3.

பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.

*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

d)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

4.

திருக்குறளை நிறைவு செய்.

_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

a)

துணிக எண்ணித் தினமும்

b)

எண்ணித் துணிக கருமம்

c)

எண்ணித் துணிக வீரம்

d)

கற்க கசடற கற்பவை

5.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

தக தக - கொழுந்து விட்டு எரிதல்

b)

பள பள - செந்நிறமான ஒளி

c)

தர தர - வேகமாக ஓடுதல்

d)

சல சல - உரக்கப் பேசுதல்

6.

மிக நெருக்கமாக எனும் பொருளுக்கேற்ற உவமைத் தொடர் யாது?

a)

வேடிக்கை பார்ப்பது போல

b)

எலியும் பூனையும் போல

c)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

d)

நகமும் சதையும் போல

7.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்;முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

d)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மரபுத்தொடர் எது?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அள்ளி விடுதல்

c)

கிணற்றுத் தவளை போல

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

9.

நாலாப்பக்கம் எனும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?

a)

மேடு பள்ளம்

b)

சுற்றும் முற்றும்

c)

ஆறப்போடுதல்

d)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

10.

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

a)

முயற்சி திருவினையாக்கும்......

b)

வேண்டுதல் வேண்டாமை .....

c)

கற்றதனா லாய....

d)

அகர முதல் எழுத்தெல்லாம்....

11.

___________________________

இன்மை புகுத்தி விடும்

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

c)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

12.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

a)

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்

b)

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

c)

ஒரு குழந்தை சிறு வயதில் எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

d)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்

13.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

a)

10

b)

13

c)

130

d)

1330