Font size
Worksheetsகோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்பவும்.
Total questions: 5
Worksheet time: 3mins
மேடையில் தோன்றிய ஒருவர் தன்னைக் கல்வி மேலதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் மேடையில் தோன்றியதும் “ஒரு 1. (a) (பனைச் / பானைச்) சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
அதுபோல இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் நற்பண்பு நிறைந்தவர்களாகவும் பணிவன்பு நிறைந்தவர்களாகவும் 2. (a) (இருபதைக் / இருப்பதைக்) கண்டு நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்," என்றார்.
தலைமையாசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. பேச்சின் இறுதியில் முத்துவேலுவை அவ்வதிகாரி மேடைக்கு வருமாறு 3. (a) (அழைத்தார் / அலைத்தார்.) நடுக்கத்துடன் மேடையேறிய அவனைப் பார்த்து எல்லாரும் வியந்தனர். தலைமையாசிரியரின் விழிகள் வியப்பால் விரிந்தன.
கண்பார்வையில்லாத மனிதருக்கு அன்று 4. (a) (காளை / காலை) அவன் செய்த பேருதவியை அவ்வதிகாரி வானளாவப் புகழ்ந்தார். பள்ளிக்கு நேரத்தோடு போகவேண்டிய சூழ்நிலையிலும்கூடத் தேவைப்பட்டவர்களுக்கு உடன் உதவிய முத்துவேலுவின் தொண்டுள்ளத்தை வெகுவாகப் பாராட்டினார்.
மாணவர்களாகிய 5. (a) (நீங்கள் / நாங்கள்) கல்வியில் மட்டும் உயர்ந்தால் போதாது. மனிதநேயம் நிறைந்தவர்களாக, உதவி தேவைப்படுபவர்களுக்குத் தக்க தருணத்தில் உதவும் பண்பினை வளர்த்துக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும். மற்ற மாணவ மாணவியரும் முத்துவேலுவைப் பின்பற்றிப் பிறருக்குப் பயன்பட வாழவேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
