wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணியும் இலக்கணமும் படிவம் 5

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைக் கண்டுபிடி.

நமது மாமன்னர் அரியணை ஏறியது முதல் இன்று வரை பல்வேறு தரப்பினருக்குப் பல லட்சம் வெள்ளியைத் தர்மமாக கொடுத்துள்ளார்.

a)

ஆசாரக் கள்ளன்

b)

கருணைக் கடல்

c)

ஈவிரக்கம்

d)

விழலுக்கு இறைத்தல்

2.

2019 ஆண்டு மலேசியாவின் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாவண்யாவுக்கு அரசாங்கத்தின் உபகாரச்சம்பளமும் கிடைத்தது.அவளது அப்பா மகிழ்ந்தார். மரபுத்தொடர்?

a)

இனிப்புக் காட்டுதல்

b)

கைக்கூடுதல்

c)

வெள்ளிடைமலை

d)

உச்சிக் குளிர்தல்

3.

2020 ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிந்ததும் ஜனவரியில் ஐரோப்பா சுற்றிப்பார்க்க எண்ணியிருந்த நவமியின் ஆசை தேர்வு 2021 ஒத்திப்போனதால் சிதைந்தது. மரபுத்தொடர்?

a)

கயிறு திரித்தல்

b)

கைக்கூடுதல்

c)

கானல் நீர்

d)

முட்டுக்கட்டை

4.

"இந்த உலகம் பொல்லாதது. நாம் இருப்பது கொஞ்ச காலம் . நமக்கு ஏண்டா வம்பு ? நீங்க சொல்லறது சரிதான்னு போக வேண்டியது தானே!"

a)

இனிப்புக் காட்டுதல்

b)

ஒத்துப்பாடுதல்

c)

கைக் கூடுதல்

d)

இரண்டுங் கெட்டான்

5.

"ரொம்ப நாளுக்குப் பிறகு எங்க அக்காவுக்கு இப்பதான் மாப்பிள்ளை கிடைத்தார். அனேகமாக தையில் திருமணம் நடந்துவிடும்."

a)

கைக்கூடுதல்

b)

கைநனைத்தல்

c)

இனிப்புக்காட்டுதல்

d)

உச்சிக்குளிர்தல்

6.

வினா 6 - 10 வரை உவமைத்தொடரைக் கண்டறி.

"என் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு நான் நொந்துவிட்டேன். வேலை இல்லை, விபத்து,மனைவி ஓடிவிட்டாள்..............

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

இலவு காத்த கிளி போல

c)

தீயும் பயிருக்கு பெய்யும் மழை போல

d)

சிறகு இழந்த பறவை போல

7.

"நீங்க எல்லாரும் நல்லா தானே இருந்தீங்க. அந்தப் புது மாணவியின் வருகையால் நட்பு உடைந்ததோ! "

a)

மாலுமி இல்லாத கப்பல் போல

b)

சிறகு இழந்த பறவை போல

c)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

d)

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

8.

மணி: ஏன் அவன் இவ்வளவு சோகமா இருக்கான்

குமார்: அவன் பாவம். அத்தை மகள் ஏமாற்றி விட்டாள். கூட படித்தவனைத் திருமணம் செய்துகிட்டா!

a)

நீரு பூத்த நெருப்பு போல

b)

கொழு கொம்பற்ற கொடி போல

c)

இலவு காத்த கிளி போல

d)

சிறகு இழந்த பறவை போல

9.

இலக்கிய வகுப்பு எல்லாவற்றிற்கும் வந்தும் பரீட்சையில் அவன் தோல்வி அடைந்தான்.அவன் நாவலைப்படிக்கவில்லை, நாடகத்தையும் படிக்கவில்லை.

a)

நுனிப்புல் மேய்ந்தாற்போல

b)

விழலுக்கு இறைத்த நீர் போல

c)

ஊமை கண்ட கனா போல

d)

பசுமரத்தாணி போல

10.

என் வரலாற்று ஆசிரியர் ஆரம்பப்பள்ளியில் கொலம்பஸ் என்ற மாலுமியைப்பற்றி கூறினார். அது தான் இன்று என் நேர்முகத்தேர்வுக்கு உதவியது.

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

c)

தாயைக் கண்ட சேயைப்போல

d)

பசுமரத்தாணி போல

11.

இலக்கணம். வினா 11- 15 வரை. எழுத்துபிழை அறி

பண்றிக்கு நான்கு கால்கள். நமக்கு இரண்டு கால்களே!

a)

நாண்கு

b)

பன்றி

c)

காள்கள்

d)

இரன்டு

12.

பண்ணாட்டு அறிஞர்கள் அந்த அரங்கில் கூடியுள்ளனர்.

a)

அரிஞர்கள்

b)

அறங்கில்

c)

பன்னாட்டு

d)

கூடுயுல்லனர்

13.

உடைந்த கன்னாடித்துண்டு அவளின் காலில் குத்தியதால் அழுதாள்

a)

அவலின்

b)

காளில்

c)

கண்ணாடித்துண்டு

d)

அலுதாள்

14.

நாம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பதன் வலி நாம் பிறருடன் சுலபமாக தொடர்பு கொள்ளலாம்

a)

மொலிகளைக்

b)

கட்பதன்

c)

வழி

d)

சுளபமாக

15.

இவ்வான்டு நூலகத்தில் பல புதிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.

a)

நூளகத்தில்

b)

நூள்கள்

c)

இவ்வாண்டு

d)

வாங்கப்பட்டுல்லன.

16.

வினா 16 முதல் 20 வரை செய்யுளை முழுமைப்படுத்து..

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தாந் மாதர்

a)

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலன்

b)

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு

c)

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்

d)

செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்

பொய்கைவாய்ப் போவதே போன்று

17.

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை...............

a)

பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்

இசைச் சொல் அளவைக் கென்நா நிமிராது

b)

துயிலெழ தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை

c)

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

d)

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

18.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்.......

a)

பண்புடை யாளர் தொடர்பு

b)

உடையது உடையரோ மற்று

c)

அதனை அவன்கண் விடல்

d)

அவ்வ துறைவது அறிவு

19.

....................................................................................

என்ன பயத்தோ சால்பு

a)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

b)

எவ்வ துறைவது உலகம்

c)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

d)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

20.

................................................................................,

பண்புடை யாளர் தொடர்பு

a)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

b)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

c)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

d)

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு