Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட ஆத்திசூடியை நிறைவு செய்க. 

                      

                  இயல்வது __________________

a)

கரவேல்

b)

விடேல்

c)

மறவேல்

d)

ஒழியேல்

2.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க. 


        முத்து பணத்தைக் காணாமல் __________________ தேடினான்.

a)

ஆடல் பாடல்

b)

அங்கும் இங்கும்

c)

அல்லும் பகலும்

d)

எலும்பும் தோலும்

3.

பிழையின்றிச் சரியாக எழுதப்பட்ட இணைமொழி எது?

a)

ஆபரணம் ஆடை

b)

பள்ளம் மேடு

c)

இங்கும் அங்கும்

d)

சுற்றும் முற்றும்

4.

உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை யாவை?

a)

குறில்-நெடில்

b)

உயிர்க் குறில்-உயிர் நெடில்

c)

உயிர்மெய்க் குறில்-உயிர் நெடில்

d)

உயிர்மெய்க் குறில்-உயிர்மெய் நெடில்

5.

மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

1

b)

3

c)

5

d)

7

6.

கீழ்க்காணும் ஒருமை  சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

                                                                  

ஆடு

a)

ஆட்கள்

b)

ஆற்கள்

c)

ஆடுக்கள்

d)

ஆடுகள்

7.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனை நிறைவு செய்க. 

                   திரைகடல் ஓடியும் _______________________

a)

பொருள் தேடு

b)

திரவியம் தேடு

c)

பணம் தேடு

d)

செல்வம் தேடு

8.

தாயையும் குழந்தையையும் இணைத்துக் கூறும் இணைமொழி எது?

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

d)

எலும்பும் தோலும்

9.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இணைமொழி எது?

ஒரு செயலின் ________________________________யை ஆராய்ந்து செயல்பட வேண்டும். 

a)

ஆடல் பாடல்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

d)

அல்லும் பகலும்

10.

கொடுக்கப்பட்ட சொற்களுக்குத் தொடர்புடைய மரபுத்தொடரைத் தெரிவு செய்க. 

 பதற்றம், அவசரம்

a)

முழு மூச்சு

b)

ஓட்டை வாய்

c)

தெள்ளத் தெளிதல்

d)

அவசரக் குடுக்கை

11.

பிழையின்றி சரியாக எழுதப்பட்ட பழமொழி எது?

a)

அன்பான தோழனை ஆபத்தில் அறி

b)

அன்பான நணபனை ஆபத்தில் அறி

c)

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி

d)

அன்பான நட்பை ஆபத்தில் அறி

12.

சரியான வினாக்குறி பொருந்தி வராத வாக்கியம் எது?

a)

யார் உன் ஆசிரியர்?

b)

புத்தகத்தை இரவல் கொடுப்பாயா?

c)

உன்னால் இதைச் செய்ய முடியுமா?

d)

அந்த விபத்தில் சிக்கியது அவர் மகன்தான்?

13.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எவ்வகையான வாக்கியம் என்பதைத் தெரிவு செய்க.

                                      

ஐயோ! என் கால் வலிக்கிறதே!

a)

உணர்ச்சி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

விழைவு வாக்கியம்

14.

உணர்ச்சி வாக்கியத்திற்குப் பொருந்தாத சொற்களைத் தேர்ந்தெடுத்திடுக

a)

ஐயோ!

b)

பாட்டி!

c)

ஐயகோ!

d)

ஆஹா!

15.

சரியான விடையைத் தேர்ந்தெடுக. 

தாமதமாக எழுந்த பரதன் பள்ளிக்கு ____________________ புறப்பட்டான்.

a)

ஓட்டமும் நடையுமாய்

b)

அரக்க பறக்கப்

c)

முழு மூச்சுடன்

d)

கண்ணும் கருத்துமாய்

16.

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

 

அலுவலக வேலைகளை உடனுக்குடன் செய்யாது ____________________ முதலாளியின் கோபத்திற்கு ஆளானான் கபிலன். 

a)

கம்பி நீட்டியதால்

b)

ஆறப் போட்டதால்

c)

அள்ளி விட்டதால்

d)

கண்ணும் கருத்துமாக

17.

சரியான விடையைத் தேர்ந்தெடுக. 

பள்ளிப் பாடங்களை _________________வென செய்து முடித்து அனுப்பிவிடும் மலர்விழி ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றாள். 

a)

கல கல

b)

கிலு கிலு

c)

குடு குடு

d)

மள மள

18.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

 

'பாடும் நிலா' என்றழைக்கப்படும் பாடகர் பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகெங்கிலும் உள்ள இசைப்பிரியர்களிடையே ____________________________________ பரவியது.

a)

இலைமறைக் காய் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

காட்டுத் தீ போல

19.

சேர்த்து எழுதுக. 

                                     

சொல் + அழகு =

a)

சொலழகு

b)

சொற்றழகு

c)

சொல்லழகு

d)

சொல் அழகு

20.

வெற்றி வேற்கையில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் என்ன?

                        செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

a)

பணக்காரர்கள்

b)

ஏழைகள்

c)

மாணவர்கள்

d)

உறவினர்கள்