wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி 2021

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

படத்துடன் தொடர்புடைய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அறஞ்செய விரும்பு

b)

இயல்வது கரவேல்

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

ஐய மிட்டுண்

2.

பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


உயர்ந்த சிந்தனை நம் வாழ்வை மேம்படுத்தும்.

a)

அச்சம் தவிர்

b)

ஆண்மை தவறேல்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

எண்ணுவது உயர்வு

3.

விளக்கத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

வருந்தினால் வராதது இல்லை

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

d)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

4.

படத்திற்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஓதுவ தொழியேல்

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

c)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

5.

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன செய்தாலும்

சொந்தமும் பந்தமும் கூட வரும்


பாடல் வரிகள் உணர்த்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

c)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

d)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

6.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடி என்ன?


அனைத்துச் செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

மாடல்ல மற்றை யவை

d)

என்புதோல் போர்த்த உடம்பு

7.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


மேற்காணும் செய்யுளில் வண்ணமிடப்பட்டுள்ள அடியின் பொருள் யாது?

a)

இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் காற்றாகவும் வெளிச்சமாகவும்

b)

உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாவாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்

c)

இறைவனைப் போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது

d)

தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகத் திகழ்கிறார்

8.

பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


கோவலன் வியாபாரம் செய்ய கண்ணகியின் காற்சிலம்பை விற்றான். ஆனால், பொற்கொல்லனின் தந்திரத்தால் கள்வன் என வீண்பழி சுமத்தப்பட்டு _____________________ இன்றி கொல்லப்பட்டான்.

a)

திட்ட வட்டம்

b)

கையும் களவும்

c)

அரக்கப் பரக்க

d)

ஈவிரக்கம்

9.

சரியான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.


கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்.

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.

d)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

10.

கீழ்க்கண்ட பொருளை விளக்கும் செய்யுள் எது?


ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்பு கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

a)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்...

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை...

c)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...

d)

மாசில் வீணையும் மாலை மதியமும்...

11.

சரியான எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.


கோபுரம்

a)

கோ + பு + ர + ம்

b)

க் + ஒ + ப் + உ + ர் + அ + ம்

c)

க் + ஓ + ப் + உ + ர் + அ + ம்

d)

க் + ஓ + ப் + உ + ர் + அ + ம

12.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மெய் எழுத்துகள் - 18

b)

உயிர்மெய் நெடில் எழுத்துகள் - 156

c)

உயிர்மெய்க் குறில் எழுத்துகள் - 90

d)

உயிர்மெய் எழுத்து - 216

13.

கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாததைத் தெரிவு செய்க.


வனைந்தனர்

a)

பன்மை

b)

உயர்திணை

c)

பலவின்பால்

d)

இறந்தகாலம்

14.

கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


அந்தக் கைவினைப் பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

15.

கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?


மன்னா! நீர் பல்லாண்டு வாழ்க!

வளர்க உம் கொடை உள்ளம்!

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

16.

படத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அமுதன் பந்தை வேகமாக உதைத்தான்.

b)

அமுதன் உதைத்த பந்து உயரே சென்றது.

c)

பந்து அமுதனால் வேகமாக உதைக்கப்பட்டது.

d)

அமுதன் பந்தால் வேகமாக உதைக்கப்பட்டான்.

17.

கோடிட்ட சொல்லுக்கான சரியான இடத்தைத் தெரிவு செய்க.


மன்னா, என் நிலைமையைக் கூறிவிட்டேன். இனி தங்களின் தீர்ப்பு எதுவானாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

a)

தன்மை, படர்க்கை

b)

முன்னிலை, தன்மை

c)

படர்க்கை, முன்னிலை

d)

தன்மை, முன்னிலை

18.

பிழையான பெயர்ச்சொல் இணையைத் தெரிவு செய்க.

a)

கூரை - சினைப்பெயர்

b)

மருத்துவர் - பொருட்பெயர்

c)

வரைதல் - தொழிற்பெயர்

d)

சிவப்பு - பண்புப்பெயர்

19.

அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.

a)

"கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.

b)

"கனிமொழி, நான் கவிதை எழுத விரும்புகிறேன்," என்றாள் குழலி.

c)

"குழலி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் கனிமொழி.

d)

"கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.

20.

கீழ்க்காணும் புணர்ச்சிக்கு ஏற்ற இலக்கண விதியைத் தெரிவு செய்க.


கல் + குகை = கற்குகை

a)

கெடுதல் விகாரம்

b)

இயல்பு புணர்ச்சி

c)

தோன்றல் விகாரம்

d)

திரிதல் விகாரம்