wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. அச்சமில்லை...அச்சமில்லை...அச்சமில்லை....

a)

அச்சம் தவிர்

b)

ஆண்மை தவறேல்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

ஐம்பொறி ஆட்சிகொள்

2.

2. கீழ்க்காணும் படம் உணர்த்தும் மரபுத்தொடர் யாது?

a)

கரி பூசுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

கண்ணும் கருத்தும்

3.

3.படத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

a)

கலகல

b)

தகதக

c)

பளபள

d)

கடுகடு

4.

4. சிவாவும் சக்தியும் சிறுவயதிலிருந்தே இணைப்பிரியா நண்பர்கள். வயது அறுபதைக் கடந்த பின்னும் சிறுவயதில் நடந்த பசுமையான நினைவுகள் இன்னும் அவர்கள் மனத்திலிருந்து அழியவில்லை.

a)

நகமும் சதையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

காட்டுத் தீ போல

d)

சிலை மேல் எழுத்துப் போல

5.

5. பத்து மாதம் சுமந்த என் தாய்க்கு இணையானவர், தாய் மொழியை எனக்குள் விதைத்தவர்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

6.

இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _______________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடு கடு

b)

பளீர் பளீர்

c)

படி படி

d)

பட் பட்

7.

துன் சம்பந்தன் தோட்டத்தில் பிறந்த அகிலன் படித்துப் பட்டதாரியான செய்தி _______________ ஊர் மக்களிடையே பரவியது.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

இலை மறை காய் போல

d)

காட்டுத் தீ போல

8.

இசைஞானி இளையராஜாவின் கலைநிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள் திறமையாக ______________ மக்களை மகிழ்வித்தனர்.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி

c)

அருமை பெருமை

d)

சீரும் சிறப்பும்

9.

திருக்குறளைத் தெரிவு செய்க.


நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகிவிடும்.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

d)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்

10.

நமது தாய்மொழியான தமிழ்மொழியை ________________ காப்பதன் வழி அம்மொழியின் சிறப்பைக் காலத்தினால் அழியாமல் கட்டிக் காக்க முடியும்.

a)

சிலைமேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

இலைமறை காய் போல

11.

திருடனின் கையில் இருந்த கத்தி __________வென மின்னியது.

a)

தகதக

b)

பளபள

c)

பளார்பளார்

d)

மினுமினு

12.

நெஞ்சார _________________ சொல்ல வேண்டாம்.

a)

பொய்தன்னைச்

b)

உண்மைதனைச்

c)

மெய்தனைச்

d)

ஏமாற்றம்

13.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

______________________________

a)

என்னுடைய ரேனும் இலர்

b)

துப்பாய தூஉம் மழை

c)

இடுக்கண் களைவதாம் நட்பு

d)

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

14.

காணாமல் போன தன்னுடைய தங்கத் தோட்டைக் கோகிலா __________ தேடினாள்.

a)

அன்றும் இன்றும்

b)

ஒளிவு மறைவு

c)

அல்லும் பகலும்

d)

அங்கும் இங்கும்

15.

பாம்பு இலைகளின் ஊடே _____________வென ஊர்ந்து சென்றது.

a)

சரசர

b)

மடமட

c)

தரதர

d)

சலசல