wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடரும் உவமைத்தொடரும் ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

c)

முழுக் கவனத்துடன்

d)

அற்பமான ஒருவர்

2.

கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க

a)

மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

b)

வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.

c)

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.

3.

கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருள்களைக் கண்டறிக.

- கடுக்காய் கொடுத்தல்

a)

உறுதி பூணுதல்

b)

கம்பி நீட்டுதல்

c)

கரி பூசுதல்

d)

ஏமாற்றித் தப்புதல்

4.

கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

c)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

5.

படத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கரிப் பூசுதல்

c)

கடுக்காய் கொடுதல்

d)

கம்பி நீட்டுதல்

6.

உச்சி __________________

a)

மலர்தல்

b)

குளித்தல்

c)

குளிர்தல்

d)

குளி

7.

அரக்கப் -----------------

a)

பரக்க

b)

பறக்க

8.

தொன்று தொட்டு


என்பதன் பொருள் என்ன?

Enbathan porul enne?

a)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல் ( Perum mana magilchi adaithal )

b)

நெடுங்காலமாய் ( Nedunggalamai )

9.

உச்சி குளிர்தல்


என்பதன் பொருள் என்ன?

a)

நெடுங்காலமாய்

b)

ஆதிகாலத்திலிருந்து

c)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

10.

பொருள் : ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்

a)

நகமும் சதையும் போல

b)

காட்டுத் தீ போல

11.

கண்ணினைக் காக்கும் _____________________________________________

a)

தீ போல

b)

இமை போல

c)

எழுத்துப் போல

12.

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.

a)

காட்டுத் தீ போல

b)

சிலைமேல் எழுத்துப் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

13.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல.

b)

சிலைமேல் எழுத்துப் போல.

c)

காட்டுத் தீ போல.

14.

மிகவும் பாதுகாப்பாக

a)

சிலைமேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

15.

சென்ற ஆண்டு கற்ற அனைத்துக் கட்டுரைகளும் இன்றும் ______________ நினைவில் உள்ளன.

a)

கண்ணினைக் காக்கும் இமைப் போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

காட்டுத் தீ போல

16.

வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன் ________ பாதுகாத்து வந்தான்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

17.

கமலனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டச் செய்தி ___________ ஊர் மக்களிடையே பரவியது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

18.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் _________ பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

19.

சுய கடமைகளை என்றும் ________ பாதுகாப்பது நம் அனைவரின் கடமை எனத் தாயார் கூறினார்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

20.

சிறு வயதில் அப்பா கூறிய அனைத்து அறிவுரைகளும் இன்றும் என் மனதில் ______ பதிந்துள்ளது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல