wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


"வீரபாண்டிய கட்டபொம்மன் தம் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்தோடு போராடினார்"

a)

அச்சம் தவிர்

b)

ஏறு போல் நட

c)

ஆண்மை தவறேல்

d)

இளைத்தல் இகழ்ச்சி

2.

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


"சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்"

a)

கோபம் வருவதைத் தடுக்கக் கூடாது

b)

கோபம் கொண்டவரோடு சேரக்கூடாது

c)

கோபம் கொண்டவர் வீட்டுக்குப் போகக் கூடாது

d)

கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையக் கூடாது.

3.

கீழ்க்காணும் திருக்குறளின் பொருளோடு தொடர்பில்லாத செய்யுளைத் தெரிவு செய்க.


"முயற்சி திருவினை யாக்கும் - முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்"

a)

உக்கமது கைவிடேல்

b)

மனம் உண்டானால் மார்கம் உண்டு

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

4.

படம் உணர்த்தும் திருவாசக செய்யுளடியைத் தெரிவு செய்க.

a)

ஊனாகி உயிராகி

b)

வானாகி நின்றாயை

c)

வானாகி மண்ணாகி

d)

கோனாகி யான் எனது

5.

பின்வரும் செய்யுளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.


"நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை"

a)

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

b)

நெல்லுக்கும் உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

c)

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

d)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

6.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

இரண்டாம் வேற்றுமை - ஐ

b)

மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

c)

நான்காம் வேற்றுமை - கு

d)

ஐந்தாம் வேற்றுமை - அது, உடைய

7.

கீழ்க்காணும் சொற்களில் ஏகாரத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஔடதம்

b)

மோதிரம்

c)

வைத்தியம்

d)

மேடை

8.

சரியான எழுத்துக்கூட்டலைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

மண்றம்

b)

தென்றல்

c)

சொன்தம்

d)

மங்ஙலம்

9.

படர்க்கை சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தங்களை நாளை சந்திக்கலாமா?

b)

மன்னர் போரில் வெற்றி அடைந்தாரா?

c)

நீங்கள் அனைவரும் எங்கே செல்கிறீர்கள்?

d)

யாம் கூறியபடி அவனைச் சிறையிட்டாயா ?

10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்றொடர் எதைக் குறிக்கிறது?


"வீரமாமுனிவர் தமிழ்மொழிக்கு ஆற்றிய சேவை போற்றுதலுக்குரியது."

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினையடை

d)

பெயரடை

11.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்குப் பொருந்தும் கொன்றை வேந்தனைத் தேர்வு செய்க.


"திரு. வளவன் பிறரைப் பற்றி குறை கூறுவதை விரும்பமாட்டார். அதனால், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும்.

a)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

12.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


தீ + குழம்பு = தீக்குழம்பு

a)

வன்தொடர் குற்றியலுகரச் சொல்லுக்குப் பின் வலிமிகும்

b)

ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும்

c)

அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்

d)

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின் (க், ச், த், ப்) வரின் வலிமிகும்

13.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


"மணி எதையும் சுயமாக சிந்திக்காமல், அடுத்தவர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவன். அவனைப் பிறர் எளிதில் வசப்படுத்திவிட முடியும்"

a)

ஈவிரக்கம்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கடுக்காய் கொடுத்தல்

d)

கை கொடுத்தல்

14.

படத்தினை நன்கு கவனித்து மிகப் பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க.

a)

கரு + தேள்

b)

கரும் + தேள்

c)

கருப்பு + தேள்

d)

கருமை + தேள்

15.

கீழ்க்காணும் ஆத்திசூடி செய்யுள்களில் எது கொடுப்பது தொடர்பான செய்யுள் அல்ல?

a)

ஈவது விலக்கேல்

b)

இயல்வது கரவேல்

c)

அறஞ்செய விரும்பு

d)

உடையது விளம்பேல்