wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

அன்றும் இன்றும்

b)

கண்ணும் கருத்துமாய்

c)

அரை குறை

d)

மேடு பள்ளம்

2.

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

ஆதி அந்தம்

c)

அங்கும் இங்கும்

d)

நன்மை தீமை

3.

பின்வரும் கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி யாது?


சாரணர்களான நாம் தனியாக இருந்தால் எந்தக் காரியமும் நடக்காது குணா. வா, எல்லாருடனும் சேர்ந்து வேலைகளைச் செய்யலாம்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்

c)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

d)

ஊருடன் கூடி வாழ்

4.

பொருளுக்கு ஏற்ற மரபுதொடரைத் தெரிவு செய்க.


ஒருவரின் அறிவைச் சோதித்தல்

a)

செவி சாய்த்தல்

b)

ஆழம் பார்த்தல்

c)

கை கழுவுதல்

d)

கடுக்காய் கொடுத்தல்

5.

விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சிறுவர்கள் ஓடியாடி விளையாடி உடல் நலம் பேண வேண்டும்.

a)

ஓய்தல் ஒழி

b)

உடலினை உறுதி செய்

c)

கற்றது ஒழுகு

d)

காலம் அழியேல்

6.

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

இகழ்வாரை நோவது எவன்

d)

தோன்றலின் தோன்றாமை நன்று

7.

தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

மாசில் வீணையும் மாலை மதியமும்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

ஆன முதலில் அதிகஞ் செலவானால்

8.

புதரிலிருந்து _______________ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

a)

பளபள

b)

சரசர

c)

குடுகுடு

d)

நறநற

9.

சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

விளக்கொளியில் வைர மோதிரம் தகதகவென மின்னியது.

b)

கொடுக்க வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளரிடம் முதலாளி கடுகடுவென பேசினார்.

c)

நீண்ட தூரம் நடந்ததால் என் கால்கள் குடுகுடுவென வலிக்கின்றன

d)

வகுப்பறையில் மாணவர்கள் பரபரவென பேசினர்.

10.

பள்ளிப் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் ____________ வருகைப் புரிந்த அனைவரையும் மகிழ்வித்தனர்.

a)

அருமை பெருமை

b)

கல்வி கேள்வி

c)

ஆடிப்பாடி

d)

அருமை பெருமை