wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பிறந்த நாள் பரிசாகத் தனக்குப் புதிய திறன்பேசி வேண்டுமென நயமாகப் பேசி கயல் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றாள்.

a)

இளங்கன்று பயமறியாது.

b)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

d)

நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.

2.

எல்லாப் பாடங்களையும் திறம்படக் கற்க முடியும் என்று மனவுறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான வழிகளும் பலனும் கிட்டும்.

a)

வருந்தினால் வாராதது இல்லை.

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

c)

புத்திமான் பலவான்.

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

3.

இப்படத்திற்குப் பொருந்தும் பழமொழி யாது ?

a)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்.

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து.

4.

இப்படத்தில் பயிற்றுநரின் கூற்று எந்தப் பழமொழியைக் குறிக்கின்றது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

5.

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

மனம் உண்டானால் _____________ உண்டு.

a)

வழிகள்

b)

மார்க்கம்

c)

பாதைகள்

d)

அன்பு

6.

கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வேளை தவறாமல் உண்ண வேண்டும். உடல் வலிமையாக இருந்தால்தான் உழைக்க முடியும். நினைத்ததைச் சாதிக்க முடியும்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்.

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

c)

சிறு துளி பெரு வெள்ளம்.

d)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

7.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது.

a)

பதறாத காரியம் சிதறாது.

b)

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

c)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?

d)

வருந்தினால் வாராதது இல்லை.

8.

உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

திவ்யன் : என்ன பரிதி உம்மென்று உட்கார்ந்திருக்கிறாய்?

பரிதி : நான் எனது வண்ணப் பென்சில் பெட்டியைக் கொண்டு வரவில்லை. வண்ணம் தீட்டும் போட்டியில் எப்படிக் கலந்து கொள்வது என்று தெரியவில்லை.

திவ்யன் : நீ வண்ணப் பென்சில்களைக் கொண்டு வரவில்லை என்று நீ சொன்னால் தானே எனக்குத் தெரியும். இதோ என்னுடையதைப் பயன் படுத்திக் கொள்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை.

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

d)

இளமை கல்வி சிலையில் எழுத்து.

9.

தேவைக்கு ஏற்பச் செலவு செய்து வாழ்வதே சிறப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

c)

சிக்கனம் சீரளிக்கும்.

d)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

10.

வியாபாரத் துறையில் ஈடுபட எண்ணம் கொண்டிருந்த ரிஷி, தனது தந்தையின் வழிகாட்டலையும் பண உதவியையும் திறம்படப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைந்தான்.

a)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

c)

தனிமரம் தோப்பாகாது.

d)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

11.

நண்பனின் கதைப்புத்தகத்தைக் கோகுலன் தொலைத்துவிட்டான். அவன் அதனை எண்ணிப் பல நாள் வருந்தினான். நண்பனிடம் சென்று மன்னிப்புக் கோரினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

d)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

12.

வாகை சூட வயது ஒரு தடையல்ல...

தன் 12-வது வயதில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி மலேசியச் சாதனை புத்தகத்தில் பெயர் பொறித்த முகிலன் தனது 5 வயது முதலே நீந்தும் திறனை நன்கு பெற்றிருந்தான்.

a)

இளங்கன்று பயம் அறியாது.

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

d)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

13.

அப்பா இருந்தவரை எங்களை நன்கு படிக்க வைத்தார். எங்களுடைய தேவைகளைக் குறிப்பறிந்து செய்வார். அவர் இருந்த வரை வறுமை என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. ஆனால், அப்பாவின் இறப்பிற்குப் பிறகு வறுமையே வாழ்க்கையாகி விட்டது.

a)

சிக்கனம் சீரளிக்கும்.

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

14.

.................... பயமறியாது.

a)

பசுக்கன்று

b)

இலங்கன்று

c)

இளங்கன்று

15.

சித்திரமும் கைப்பழக்கம் ................... நாப்பழக்கம்

a)

சென்ந்தமிழ்

b)

செந்தமிழும்

c)

செந்தமிலும்

16.

உப்பில்லாப் .................குப்பையிலே.

a)

பண்றம்

b)

பன்டம்

c)

பண்டம்

17.

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை


கொடுக்கப்பட்ட பழமொழியில் வண்ணமிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உப்புக் கொடுத்தவரை

b)

உப்பு வாங்கியவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

உணவு வாங்கியவரை

18.

அகத்தின் ____________ முகத்தில் தெரியும்.

a)

அலகு

b)

அழகு

c)

அளகு

d)

அழகி

19.

________________________ என்பதை உணர்ந்த சத்தீசன் தமது மேற்படிப்பிற்கான பணத்தைச் சிறு வயது முதலே சேமித்து வைக்கத் தொடங்கினான்.

a)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

b)

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

c)

தன் கையே தனக்கு உதவி

20.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்