Worksheetsஇலக்கணம், இலக்கியம் தொடர்பான கேள்விகள்
Total questions: 25
Worksheet time: 13mins
மாறனில் சிறந்தவன் இலக்கியன்.
இந்த வாக்கியம் எந்த வேற்றுமை உருபை ஏற்றுள்ளது? *
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
பூ + சோலை =
சேர்த்தெழுதுக. *
பூச்சோலை
பூஞ்சோலை
பூசோலை
கீழ்க்காணும் படம் எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சேர்ந்தது?
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
நகுலன் நாயைக் கண்டு பயந்து ஓடினான். இந்த வாக்கியத்தின் வினைமுற்று எது? *
நகுலன்
பயந்து
ஓடினான்
இவற்றுள் எது கிரந்த எழுத்துச் சொல்?
எஃகு
கஜம்
மலர்
தன்மை,முன்னிலை,படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் ஏற்று வந்துள்ள வாக்கியம் எது?
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
நான் உன் புத்தகத்தைச் செல்வியிடம் கொடுத்து விட்டேன்.
நான் ஏப்ரல் மாதத்தில் பிறந்தேன்.
உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை?
125
126
127
128
கீழ்க்காணும் வாக்கியத்தை ஏற்புடைய இணைமொழியைக் கொண்டு நிரப்புக.
- குடிநீர் திட்டத்தில் குழாய் நீர் பதித்த சாலைகளில் குழியைச் சரியாக மூடாததால் _____________மாகக் காணப்படுகிறது.
மேடு பள்ளம்
ஒளிவு மறைவு
அங்கும் இங்கும்
பின் வரும் பொருளுக்கு ஏற்ற செய்யுள் எது ?
நாம் பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
ஏற்பது இகழ்ச்சி
உடையது விளம்பேல்
ஔவியம் பேசேல்
செய்யுளைப் பூர்த்தி செய்க.
_______________ மண்னாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரைக் __________________
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
வானாகி ......... தேனாகி
தேனாகி ......... கூத்தாட்டு
வானாகி ......... கூத்தாட்டு
கீழ்க்காணும் விளக்கத்திற்கு பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நல்லவன் போல நடித்துப் பிறரை
ஏமாற்றும் குணம் படைத்தவன்.
எலியும் பூனையும் போல
இலைமறை காய் போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
பசுத்தோல் போத்திய புலி போல
கீழ்க்காணும் செய்யுளின் மூன்றாவது அடி எது ?
அடக்க முடையா ரறிவிலரென் றென்னிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
________________________________________________
வாடி யிருக்குமாங் கொக்கு.
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
ஆன முதலில் அதிகஞ் செலவானால்
மெய்வருத்தம் பாரார்
பழமொழியை நிறைவு செய்க : ________________________________ முளையிலே தெரியும்
நிழலின் அருமை
அகத்தின் அழகு
விளையும் பயிர்
சுடர் விளக்காயினும்
'போகாத விடந்தனிலே போக வேண்டாம் ' எனப் பாடியவர் யார்?
ஓளவையார்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
அதிவீரராம பாண்டியன்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கருத்தைக் கூறியவர்?
பாரதியார்
இளங்கோ
வள்ளுவர்
கணியன் பூங்குன்றனார்
காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.
மள மள, தட தட
மள மள , குடு குடு
மட மட, குடு குடு
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு
_______________ காணப்பட்டாய்.இப்பொழுது
என்னவாயிற்று?
அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி
விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து
போய்விட்டேன்.
எலும்பும் தோலுமாய்
உருண்டு திரண்டு
அரை குறையாய்
கீழ்காணும் செய்யுளை நிரல்படுத்துக.
A. நெல்லுக் கிறைத்தீர் வாய்க்கால் வழியோடிப்
B. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
C. எல்லார்க்கும் பெய்யும் மழை
D. புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
A, C, B, D
B, C, A, D
A, D, B, C
D, C, B, A
பிழையான இணையைத் தெரிவு செய்க
ஆணித்தரம் - உறுதி
தலை குனிதல் – அவமானம் ஏற்படுத்துதல்
கரை கண்டவர் – ஒரு கலையில் அல்லது துறையில்
சிறந்த தேர்ச்சி பெற்றவர்
ஈவிரக்கம் - மனக்கசிவு
கோடிடப்பட்ட சொற்றொடரின் பொருளினை விளக்கும் உவமைத் தொடரினைத் தெரிவு செய்க.
இளஞ்செழியன் மிகவும் அமைதியான மாணவன். வெளிப்படாமல் மறைந்திருந்த அவனின் ஆற்றல் ஓரங்க நாடகத்தின் போது எல்லாராலும் அறியப்பட்டது.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
சிலை மேல் எழுத்துப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
கீழ்க்கண்ட விளக்கத்தைத் தாங்கி வரும் மூதுரையின் செய்யுளடியைத் தெரிவு செய்க.
இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
கீழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொற்களைத் தேர்ந்தெடுக.
கண்மணி மிகவும் குறும்புக்காரி. ____________________________________ அவள் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்றாள்.
ஆகவே
ஆயினும்
எனவே
ஆதலால்
சரியான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
குயவர்கள் மட்பாண்டங்களை _________________________ சந்தையில் விற்றனர்.
வனைந்து
முடைந்து
கொய்து
வேய்து
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடியைத் தேர்வு செய்க.
அம்மா: ரவி நீ இப்படி நேரத்தை வீணடிப்பது சரியல்ல. காலம் பொன்னானது.
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
காலம் அழியேல்
திருக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒரு செயலை முதலில் தொடங்கிவிட வேண்டும். அதன் பிறகே அதனை ஆராய வேண்டும்.
ஒருவருக்கு தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
