NEW
Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 20
Worksheet time: 12mins
நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்றைத் தெரிவு செய்க.
"நான் என் நிலத்தை விற்கப் போகின்றேன்," என்று வளவன் கூறினான்.
நான் தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போகிறேன் வளவன் கூறினான்.
நான் என் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை 'ஆல்' உருபை ஏற்று வருவது யாது?
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
செய்வினை
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
8
4
8
கோடிட்ட சொற்கள் குறிக்கும் இடத்தைத் தெரிவு செய்க.
"அவர்கள் இருவரும் என்னைப் பார்க்க நாளைப் பினாங்கிலிருந்து வருகின்றனர்," என்று அம்மா கூறினார்.
A. முன்னிலை , படர்கை
B. படர்கை , முன்னிலை
C. முன்னிலை , தன்னிலை
D. படர்கை , தன்னிலை
" மாணவர்களே, நம் வாழ்க்கைச் சூழலில் தற்போது அனைவரும் துரித உணவை விரும்புகிறோம். துரித உணவால் நம் உடலுக்குக் கெடுதி" என்றார் ஆசிரியர்.
இவ்வாக்கியத்திற்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
A. ஔடதம் குறை
B. ஈகை திறன்
C. உடலினை உறுதிசெய்
D. ஊண்மிக் விரும்பு
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சியடைந்துள்ளது.
B. யானையினது தந்தம் சாலையோரத்தில் உடைந்து கிடந்தது.
C. பாடல்கள் கவிஞர் வைரமுத்துவால் இயற்றப்பட்டது.
D. மனுநீதிச் சோழன் தம் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றார்.
பொன் + தாமரை =
A. பொன்தாமரை
B. பொன்னாமரை
C. பொந்தாமரை
D. பொற்றாமரை
கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன் _________________ உடைத்தாள்.
A. காற்சிலம்பு
B. காற்சிலம்புடன்
C. காற்சிலம்பை
D. காற்சிலம்பில்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பிழையான இணையைத் தெரிவுசெய்க.
A. மெய் எழுத்துகள் = 18
B. உயிர்மெய் நெடில் எழுத்துகள் = 150
C. ஆய்த எழுத்து = 1
D. உயிர்மெய் குறில் எழுத்துகள் = 5
கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
'வரைந்தனர்'
A. பன்மை
B. உயர்திணை
C. பலவின்பால்
D. இறந்தகாலம்
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சியடைந்துள்ளது.
B. யானையினது தந்தம் சாலையோரத்தில் உடைந்து கிடந்தது.
C. பாடல்கள் கவிஞர் வைரமுத்துவால் இயற்றப்பட்டது.
D. மனுநீதிச் சோழன் தம் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றார்.
எச்சரிக்கை செய்யும் வகையில் அமைந்துள்ள பழமொழி யாது?
வல்லவனுக்குப் புள்ளும் ஆயுதம்
வருந்தினால் வாராதது இல்லை
வெள்ளம் வரும் முன் அணைப்போடு
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
நல்ல நண்பர்கள் இல்லாதவரோடு நட்புக் கொள்ளா வேண்டாம். என்ற பொருள் தரும் உலக நீதியின் செய்யுள் யாது?
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
நல்லிணக்கமில்லாரோ டிணங்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
மனுநீதிச் சோழன் தம்மிடம் கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரித்து நீதி வழங்கினான். இச்சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
கல்விக்கழகு கசடற மொழிதல்
மன்னர்க்கழகு செங்கோன் முறைமை
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
பின்வருபவற்றுள் எது மனவுறுதியைக் குறிக்கும் பழமொழி
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
நிறைகுடம் தளும்பாது
புத்திமான் பலவான்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கீழ்க்காணும் செய்யுளடியின் பொருளுரையில் எது தவறு?
வானாகி மண்ணாகி- ஆகாயமும் நிலமும் ஆகி
ஊனாகி உயிராகி - உணவாகவும் ஆன்மாவாகவும் ஆகி
வளியாகி ஒளியாகி - காற்றாகவும் வெளிச்சமாகவும் ஆகி
உண்மையுமாய் இன்மையுமாய் - உள்ளவனாகவும் இல்லாதவனாகவும் ஆகி
குழந்தைகள், முதியவர்கள் என்றும் பாராமல் அவர்களைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர். இவ்வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?
கிள்ளுக் கீரை
ஈவிரக்கம்
கை கூடுதல்
கை கொடுத்தல்
வழியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சாமர்த்தியமாக பேசிய ஆடவன் அவரின் பணப்பையைத் திருடினான். இவ்வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?
கை கொடுத்தல்
காது குத்துதல்
கையும் களவுமாய்
கை கூடுதல்
