NEW
Font size
Worksheetsஇலக்கணம் இலக்கியம்
Total questions: 15
Worksheet time: 8mins
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. பொருள் யாது
ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகை செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.
படிக்க படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல, நல்ல குணமுடையவர்களின்
நட்பு பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்.
இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
___________________________என்பதற்கொப்ப வளவன் யாருக்கும் தெரியாது என நினைத்துச் செய்துவந்த திருட்டுத்தனங்களைப் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
அள்ளாது குறையாது இல்லாது பிறவாது
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது . எனும் பழமொழியின் பொருள் யாது?
உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்துவிடும்.
நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.
நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன எனும் பழமொழிக்கு பொருள் யாது
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு
நோயற்ற வாழ்வே __________________.
குறைவுல்ல செல்வம்
குறைவற்ற செல்வம்
குறையில்லா செல்வம்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் . பொருளைக் குறிப்பிடுக.
கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.
கிடைக்கும் காற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தக்க சமயத்தில் திறமையாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்
_______________________
கபிலன் சொல்லும்
எதையும் அவனது நண்பர்கள் நம்பமாட்டார்கள்.
ஆசாரக்கள்ளனான
அண்டப்புரட்டனான
இரண்டாங்கெட்டான
தான் காதலித்த பெண்ணைத் திருமணம் புரிவதா இல்லை தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணைத் திருமணம் புரிவதா எனத் தெரியாமல் புகழேந்தி இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தான்.
இவ்வாக்கியம் சரியா?
சரி
பிழை
மிகவும் வெளிப்படையாகத் தெரிவது. என்ன மரபுத்தொடர் ஆகும்.
நுனிப்புல் மேய்ந்தாற் போல
புற்றீசல் போல
வெள்ளிடமலை
முட்டுக்கட்டை. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
என் காதலுக்கு அப்பா தடையாக இருக்கிறார்
நான் நெடுங்காலமாய் இவ்விடத்திலேயே வாழ்ந்து வருகிறேன்.
வீடுகள் கட்டுவதற்காக இவ்விடத்திற்கு மரங்களை வெட்ட வேண்டும்.
பல முறை பயிற்சிகள் மீள்பார்வைகள் செய்தும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்து கொண்டே தான் போகிறது. சரியான உவமைத்தொடர் யாது?
பயனற்ற உழைப்பு
விழலுக்கு இறைத்த நீர் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
குமுதாவின் சிரிப்பு ____________ அமைந்திருந்தது.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல
அழகுக்கு அழகு செய்வது போல
அழகுக்கு அழகு செய்தது போல
புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால் - எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்-
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல
அறிவுடையவரே பலமுடையவராவர். பலமுள்ளார் அறிவற்றுப்போனால் எவ்வகையிலேனும் அவருக்குத் துன்பம் வந்தே தீரும்.
சிறுமுயல் ஒன்றி தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று பலமற்றவர் தன் அறிவுக்கூர்மையால் பலமுள்ளவர்களையும் வெல்லலாம்.
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் –
மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளை சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று
மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு
மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்
