wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. கவிச்சக்கரவர்த்தி நாடகம் பெற்ற விருது யாது?

a)

சாகித்திய அகாதமி விருது

b)

தமிழ்நாட்டு அரசு விருது

c)

இந்திய ஜனாதிபதி விருது

d)

கரிகாலச் சோழன் விருது

2.

கம்பரின் ‘ஏர் எழுபது' பாடல்களுக்குப் பொருள் விளக்கம் அளித்தது யார்?

a)

சிங்கராயர்

b)

குமாரப்புலவர்

c)

குணவீரப் பண்டிதர்

d)

பல்லவராயன்

3.

கம்பர் எழுதிய ‘ஏர் எழுபது’ நூலின் சிறப்பு யாது?

a)

மக்களின் வாழ்க்கையின் சிறப்புகளைப் பாடும் பாடல்கள்

b)

உழவுத்தொழிலுக்குத் துணைபுரியும் தேவர்களைச் சிறப்பிக்கும் பாடல்கள்

c)

புலவர்களையும் புலமைத்திறத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்

d)

உழவரையும் உழவுத்தொழிலையும் சிறப்பிக்கும் பாடல்கள்

4.

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையே உள்ள வேற்றுமை யாது?

i கவிபாடும் மரபு

ii அரசவை மரபு

iii தமிழ் மரபு

iv போர் மரபு

a)

i , ii , iv

b)

i, iii, iv

c)

ii, iii, iv

d)

i, ii, iii

5.

பின்வருவனவற்றுள் யார் சடையப்ப வள்ளலின் குடும்பத்தினர் அல்லர்?

a)

மகேஸ்வரி

b)

சிலம்பி

c)

சேதிபன்

d)

இணையாரமார்பன்

6.

கம்பர் இராமாயணத்தை எங்கே இயற்றினார் ?

a)

குலோத்துங்க சோழனின் அரண்மனையில்

b)

குணவீரபண்டிதரின் ஆசிரமத்தில்

c)

சடையப்ப வள்ளலின் வீட்டில்

d)

இணையாரமார்பனின் வீட்டில்

7.

சோழ நாடு என்று குறிப்பிடாமல் காவிரி நாடு என்று இராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டது ஏன்?

a)

சோழ வம்சம் அழியும் என்றும் காவிரிக்கு அழிவில்லை என்பதனால்

b)

சடையப்ப வள்ளலைக் கண்டித்த குலோத்துங்கன் மீது கோபம் ஏற்பட்டதால்

c)

குலோத்துங்க சோழனின் மேல் தான் கொண்ட அன்பின் காரணத்தால்

d)

சோழ வம்சத்தைவிட காவிரி ஆறே பழமை வாய்ந்தது என்பதனால்

8.

கம்பரின் இராமாயண அரங்கேற்றம் எங்கே நடந்தேறியது ?

a)

சடையப்பர் வீடு

b)

நாட்டரசன் கோட்டை

c)

திருவரங்கம் ரங்கநாதர் கோயில்

d)

கங்கைகொண்ட சோழபுரம்

9.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் துணைக்கருப்பொருளைத் தெரிவு செய்க.

i சுதந்திர உணர்வு சாதனைக்கு வழிவகுக்கும்

ii தீர விசாரித்து முடிவெடுத்தலே சிறப்பு

iii ஆணவம் அழிவுக்கு வித்திடும்

iv அறநூல்கள் வாழ்வை நெறிப்படுத்தும்

a)

i , ii , iv

b)

i, iii, iv

c)

ii, iii, iv

d)

i, ii, iii

10.

கம்பர் ‘கம்பர்ச்சிலம்பி’ என்ற நாட்டிய மங்கைக்கு இட்ட புதிய பெயரென்ன?

a)

அன்புச்சிலம்பி

b)

அம்பர்ச்சிலம்பி

c)

அம்பிகைச்சிலம்பி

d)

அன்பர்ச்சிலம்பி

11.

பின்வரும் கூற்று எந்த உத்தியைக் கொண்டுள்ளது?


கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடி என்ற இடத்தில் இராமன் தனியே அமர்ந்திருந்த சமயம் சூர்ப்பனகை அங்கே வருகிறாள்.

a)

நிரட்சி உத்தி

b)

பின்நோக்கு உத்தி

c)

கதைகூறல் உத்தி

d)

தனிமொழி உத்தி

12.

பின்வரும் கூற்றை வெளிப்படுத்தியவர் யார்?

“இந்தத் தமிழகத்தையும் தமிழையும் விண்ணுக்கு உயர்த்தும் அருஞ்சாதனையைச் சாதித்துவிட்டுத் தன்னிகரற்ற தனிப்பெரும் காவியத்தைக் கையில் சுமந்து கொண்டு காட்டு வழியில் நடப்பதா?” (கவிச்சக்கரவர்த்தி, பக்கம் 141)

a)

சிங்கன்

b)

ஸ்ரீமத் நாதமுனிகள்

c)

குலசேகரப் பாண்டியன்

d)

குணவீரபண்டிதர்

13.

“விளையாட்டாக இன்று கன்னி மாடத்தைவிட்டு இறங்கி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். நம் கூடவே, நம் தலைக்குமேல் ஒரு கூரிய வாளும் அந்தரத்தில் தொடர்ந்து வருகிறது”

(கவிச்சக்கரவர்த்தி, பக்கம் 160)


தலைக்குமேல் ஒரு கூரிய வாளும்’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன?

a)

சோழன்

b)

வீரர்கள்

c)

ஆபத்து

d)

பகைவர் படை

14.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் முடிவு யாது?

a)

இராமாயண அரங்கேற்றம்

b)

கம்பர் அரண்மனையைவிட்டு வெளியேறுதல்

c)

கம்பரின் மரணம்

d)

சோழன் போரில் தோற்றல்

15.

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் ஏற்பட்ட பூசல் யாது?

a)

துமி, துளி என்ற சொல்லில் சிக்கல்

b)

ஆஸ்தானக் கவிஞர் என்பதில் ஏற்பட்ட வாதம்

c)

ஒட்டக்கூத்தர் குமாரப் புலவரை ஆதரித்தது

d)

கம்பர் மன்னருக்கு உலா பாடியது

16.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் சரியான கதைப்பின்னலைத் தேர்ந்தெடு.

a)

உச்சம், தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

b)

தொடக்கம், வளர்ச்சி, உச்சம், சிக்கல், முடிவு, சிக்கல் அவிழ்ப்பு

c)

தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

d)

சிக்கல், தொடக்கம், வளர்ச்சி, சிக்கல் அவிழ்ப்பு, முடிவு, உச்சம்