wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி

Total questions: 48

Worksheet time: 24mins

Name
Class
Date
1.
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
a)
ஈகை திறன்
b)
ஊண்மிக விரும்பு
c)
உடலினை உறுதிசெய்
d)
இளைத்தல் இகழ்ச்சி
2.

அறஞ்செய விரும்பு

a)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

d)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

3.

ஆறுவது சினம்

a)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

c)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

d)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

4.

இயல்வது கரவேல்

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

b)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

c)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

d)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

5.

ஈவது விலக்கேல்

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

c)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

6.

உடையது விளம்பேல்

a)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

b)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

c)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

d)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

7.

ஊக்கமது கைவிடேல்

a)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

c)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

d)

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

8.

எண்ணெழுத் திகழேல்

a)

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

c)

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.

d)

நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.

9.

ஏற்ப திகழ்ச்சி

a)

துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

b)

எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

c)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

10.

ஐய மிட்டுண்

a)

உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.

b)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

c)

நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.

d)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

11.

ஒப்புர வொழுகு

a)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்

c)

ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.

d)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

12.

ஓதுவ தொழியேல்

a)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

b)

நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.

c)

துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

d)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்

13.

ஔவியம் பேசேல்

a)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்

c)

எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

d)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

14.

ஔவியம் பேசேல்

மேற்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

உலகநாத பண்டிதர்

c)

அதிவீரமா பாண்டியன்

d)

ஔவையார்

15.

கீழ்க்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் கருத்துக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கிலை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருப்பது உனக்கே சரியாமோ?

a)

ஊக்கமது கைவிடேல்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்பது இகழ்ச்சி

16.

1. கீழ்க்காணும் ஆத்திசூடி வரிகளை அகர வரிசைபடி நிரல்படுத்துக.

i. ஒப்பிர வொழுகு

ii. ஐய மிட்டுண்

iii. ஈவது விளக்கேல்

iv. உடையது விளம்பேல்

a)

i, ii, iii, iv

b)

ii, iii, I, iv

c)

i, ii, iv, iii

d)

iii, iv, ii, i

17.

கீதா பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தன் உடையை ஏழ்மையில் வாடும் தன் அண்டை வீட்டுச் சிறுமிக்குக் கொடுப்பதை அவள் அம்மா வேண்டாமெனத் தடுத்தார்.

இச்சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடி என்ன?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

இயல்வது கரவேல்

d)

ஈவது விலக்கேல்

18.

கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?

a)

எண்ணுவது உயர்வு

b)

கற்றது ஒழுகு

c)

ஓய்தல் ஒழி

d)

இளைத்தல் இகழ்ச்சி

19.

தம்பி : நான் எத்தனை முறை போராடியும் என்னால் ஓட்டப்பந்தையத்தில் முதலிடம் பிடிக்கவே முடியவில்லை.

அண்ணன் : கவலைப்படாதே, தம்பி, நீ _______________ என்பதற்கேற்ப மேலும் முயற்சி செய். நிச்சயம் வெற்றி வெறுவாய்.

a)

ஊக்கமது கைவிடேல்

b)

எண்ணெழுத் திகழேல்

c)

ஓதுவ தொழியேல்

d)

உடையது விளம்பேல்

20.

கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?

அறஞ்செய விரும்பு

a)

A. தருமம்

b)

B. கோபம்

c)

C. தீமை

d)

D. பரிவு

21.

எண்களும் மொழியும் நம் இரு கண்களைப் போன்றது என்ற கூற்றை விளக்கும் ஆத்திசூடி எது?

a)

A. ஏற்ப திகழ்ச்சி

b)

B. எண்ணெழுத் திகழேல்

c)

C. ஈவது விலக்கேல்

d)

D. ஆறுவது சினம்

22.

முயற்சியை விட்டு விடக்கூடாது எனும் கூற்றை உணர்த்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

A. ஐய மிட்டுண்

b)

B. ஓப்புர வொழுகு

c)

C. ஊக்கமது கைவிடேல்

d)

D. ஆறுவது சினம்

23.

கீழ்க்காணும் கூற்று உணர்த்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

நாம் யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.

a)

A. ஆறுவது சினம்

b)

B. இயல்வது கரவேல்

c)

C. உடையது விளம்பேல்

d)

D. ஒப்புர வொழுகு

24.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

மேற்காணும் உலகநீதியின் பொருளை உணர்த்தும் ஆத்திசூடி எது?

a)

A. ஔவியம் பேசேல்

b)

B. ஏற்ப திகழ்ச்சி

c)

C. ஓதுவ தொழியேல்

d)

D. ஊக்கமது கைவிடேல்

25.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

மேற்கண்ட பொருளுக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

A. ஊக்கமது கைவிடேல்

b)

B. இயல்வது கரவேல்

c)

C. அறஞ்செய விரும்பு

d)

D. ஈவது விலக்கேல்

26.

பின்வருவனவற்றுள் எஃது ஆத்திசூடி அல்ல?

a)

A. உடையது விளம்பேல்

b)

B. ஈவது விலக்கேல்

c)

C. ஔடதம் குறை

d)

D. ஒப்புர வொழுகு

27.

அப்பா :

கந்தா, இன்றைய நவீன உலகில் நீயும் கணினியை இயக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவின் கூற்றுக்குப் பொருந்தும் ஆத்திசூடி எது?

a)

A. ஔவியம் பேசேல்

b)

B. ஓதுவ தொழியேல்

c)

C. ஓப்புர வொழுகு

d)

D. ஊக்கமது கைவிடேல்

28.

பிச்சையெடுப்பது இழிவான செயலாகும். எனவே, உழைத்து வாழ்.

மேற்காணும் அறிவுரைக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

A. ஐய மிட்டுண்

b)

B. ஆறுவது சினம்

c)

C. ஊக்கமது கைவிடேல்

d)

D. ஏற்ப திகழ்ச்சி

29.

ஆத்திசூடியை அருளியவர் யார்?

a)

A. பாரதியார்

b)

B. உலகநாத பண்டிதர்

c)

C. ஔவையார்

d)

D. அதிவீர ராம பாண்டியர்

30.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

31.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ளமாட்டாயா?

கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன்.

பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு.

a)

ஈவது விலக்கேல்

b)

உடையது விளம்பேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஊக்கமது கைவிடேல்

32.

33.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

தனலெட்சுமி : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?

சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே!

a)

ஒப்புர ஒழுகு

b)

ஔவியம் பேசேல்

c)

ஓதுவதொழியேல்

d)

ஊக்கமது கைவிடேல்

34.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.

மேற்காணும் காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

35.

36.

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா

மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஐயமிட்டு உண்

b)

அறம் செய விரும்பு

c)

ஒப்புர ஒழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

37.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.

மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

38.

குமரன் : அம்மா, இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து வீட்டு அகிலன் மிதிவண்டி இரவல் கேட்க வருவான், அவனிடம் மிதிவண்டி பழுதாகிவிட்டது என்று கூறிவிடுங்கள்.

அம்மா : குமரா, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டுமே தவிர இல்லையென்று சொல்லக் கூடாது.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

இயல்வது கரவேல்

39.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

ஔவியம் பேசேல் - பிறரைப் புகழ்ந்து பேசக்கூடாது

b)

ஐயமிட்டு உண் - பசியென்று வந்தவர்க்கு உணவிட்டப் பின்னரே உண்ண வேண்டும்.

c)

உடையது விளம்பேல் - நம்மிடம் உள்ள செல்வம் மற்றும் கல்வியைப் பற்றி பெருமைப்பட பேச வேண்டும்.

d)

ஒதுவதொழியேல் - நல்ல நூல்களை எப்பொழுதாவது படிக்க வேண்டும்

40.

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

இயல்வது கரவேல்

a)

பேசக்கூடாது

b)

நினைக்கக்கூடாது

c)

பாடக்கூடாது

d)

மறைக்கக்கூடாது

41.

தவறான இணையைத் தெரிவு செய்க

a)

எண்ணெழுத்திகழேல் - எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல்

கற்க வேண்டும்.

b)

ஆறுவது சினம் - கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

ஊக்கமது கைவிடேல் - முயற்சியை விட்டு விடக்கூடாது.

d)

ஏற்பது இகழ்ச்சி - பசியென்று வந்தவர்க்கு உணவிட்டப் பின்னரே

உண்ண வேண்டும்.

42.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)
b)
c)
d)
43.

ஔவையார் எழுதிய முதல் ஆத்திசூடி எது?

a)

ஆறுவது சினம்

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

உடையது விளம்பேல்

d)

அறம் செய்ய விரும்பு

44.

கீழ்காணும் செய்யுள்களில் எது ஆத்திசூடி?

a)

ஒப்புர வொழுகு

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

ஓய்தல் ஒழி

d)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

45.

கொடுக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவில் எந்த ஆத்திசூடியைத் தெரிவிக்கின்றது?

a)

ஒப்புர வொழுகு

b)

ஆறுவது சினம்

c)

உடையது விளம்பேல்

d)

ஈவது விலக்கேல்

46.

கீலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஓதுவ தொழியேலைக் குறிக்கின்றது?

a)
b)
c)
d)
47.

மேல்காணும் ஒலிப்பதிவில் எந்த ஆத்திசூடியின் பொருளைக் குறிக்கின்றது?

a)

அறஞ்செய விரும்பு

b)

உடையது விளம்பேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஔவியம் பேசேல்

48.

'ஐயா! இந்தப் பணத்தை வைத்து கொண்டு அந்த வேளையை எனக்கு கொடுக்க முடியுமா ஐயா?'. இந்தச் சூழல் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?.

a)

ஈவது விலக்கேல்

b)

ஆறுவது சினம்

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

ஔவியம் பேசேல்

Similar Resources on Wayground