Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி படிவம் 6 பருவம் 2/2020

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அந்திம காலம் வினா 1 முதல் 20 வரை


அந்திம காலம் ஒரு................................

a)

நாவல்

b)

கட்டுரை தொகுப்பு

c)

செய்யுள்

d)

விமர்ச்சனம்

2.

அந்திம காலத்தின் ஆசிரியர்

a)

மு.வரதராசன்

b)

காரைக்கிழார்

c)

ரே.கார்த்திகேசு

d)

கார்த்திக்

3.

யாருடைய வாழ்க்கையை மையமிட்டு இப்படைப்பு விவரிக்கின்றது

a)

ரகிம்

b)

ஜானகி

c)

சுந்தரம்

d)

டாக்டர் லிம்

4.

சுந்தரம் பணி ஓய்வு பெற்ற ஒரு .......................

a)

இராணுவ வீரர்

b)

தலைமை ஆசிரியர்

c)

மருத்துவர்

d)

ஆசிரியர்

5.

சுந்தரம் ------------------புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளார்

a)

இருதய

b)

மூளைப்

c)

இரத்த

d)

குடல்

6.

தனது நோயை அறிந்து மரணவேதனையில் வீடு திரும்பிய சுந்தரம் எதிர்நோக்கிய சம்பவம் எது?

a)

பேரனின் நோய்

b)

மனைவி ஜானகியின் மன உளைச்சல்

c)

மகள் ராதா சிவமணியுடன் சண்டையிட்டு வீட்டிற்கு வந்தது

d)

சிவமணி சுந்தரத்துடன் சண்டையிட காத்திருந்தது.

7.

ராதா சிவமணி குடும்பச் சண்டை

இவற்றில் எது தவறு?

a)

பேரன் பிரேம் சுந்தரத்தின் பராமரிப்பில் விடப்படுகிறான்

b)

வெளி நாட்டுக் காதலனோடு சென்று விடுகிறாள்

c)

சிவமணிக்கு விவாகரத்துக் கொடுக்கிறாள்

d)

பிரேமின் நோய் தொடக்கத்திலேயே கவனிக்கப்படாததால் நோய் முற்றிற்று

8.

சுந்தரத்தை ................. .தினமும் சலிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

a)

ராமச்சந்திரன்

b)

மகேந்திரன்

c)

மணிவண்ணன்

d)

சிவமணி

9.

சுந்தரம் ஏன் மருத்துவர் ரம்லியின் மீது நம்பிக்கையின்றி இருந்தார்?

a)

படிக்கும் காலத்தில் ரம்லி கல்வியில் பின் தங்கியிருந்ததால்

b)

படிக்கும் காலத்தில் ரம்லி கட்டொழுங்கின்றி இருந்ததால்

c)

படிக்கும் காலத்தில் சுந்தரத்தால் ரம்லி பல இன்னல்களுக்கு ஆளானதால்

d)

கட்டொழுங்கு ஆசிரியர் சுந்தரம் மேற்கொண்ட நடவடிக்கையால் பழிவாங்கப் படலாம் என்ற எண்ணத்தால்

10.

இவற்றுள் எது சுந்தரம் மகள் மீது கொண்ட பண்பினைக் குறிக்கவில்லை?

a)

மகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்

b)

மகளின் விருப்பத்தை ஏற்றுக் கொள்பவர்

c)

மகளின் குடும்ப வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவர்

d)

மகளின் நாகரீக வாழ்க்கையை வரவேற்பவர்

11.

சிவமணி இராதாவின் வாழ்க்கை கசந்ததற்கான காரணங்களில் இது அல்ல,

a)

புரிந்துணர்வு குறைவு

b)

வாழ்க்கை வழிகாட்டிகளைப் புறக்கணித்தல்

c)

வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் அவசரம்

d)

தேவையான போது யாரும் பணம் கொடுத்து உதவவில்லை

12.

இந்த இணைகளுள் எது தவறு?

a)

தமிழ்ப்பற்று மிக்கவர் /பேரனுக்குக் குறள் சொல்லிக்கொடுக்கிறார்

b)

கடமை தவறாதவர். / கட்டொழுங்கு ஆசிரியராக பணிமேற்கொள்கிறார்

c)

காதலைப்போற்றுபவர் / இலண்டன் காதலனை ஆதரிக்கிறார்

d)

மரியாதையும் கொண்டவர் / சினம் கொண்ட மருமகன் சிவமணியிடம் நிதானமாக பேசுகிறார். ப

13.

இவற்றுள் எது இந்நாவலின் கருவல்ல?

a)

தமிழ் மரபைப் போற்ற வேண்டும்

b)

தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும்

c)

இல்லற வாழ்க்கையை மதிக்க வேண்டும்

d)

நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகொள்ளவேண்டும்

14.

அந்திம கால நாவலின் சமுதாயக் கருத்துகள் .

தவறான இணை எது?

a)

கற்றோரைப் போற்ற வேண்டும்/ பெற்றோர்

b)

மேலை நாட்டு மோகம் கூடாது /இராதா

c)

தமிழ் மரபைப் போற்றவேண்டும் / ஜானகி

d)

நல்ல வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் / ரம்லி

15.

குடும்ப வாழ்க்கையில் எழும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளில் இந்நாவலில் இது பிழையானது.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்

b)

ஒத்து வராவிட்டால் ஒதுங்கி விடவேண்டும்

c)

பிறர் இல்லற வாழ்வில் தலையிடக்கூடாது

d)

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

16.

"தனியா உன் கால்ல நிக்க பழகிக்க", "அழுது அழுது வாழ்க்கையை நரகமாக்கிக்க முடியாது" இவ்வரிக்குரிய விளக்கத்தில் இடம்பெறாதது எது?

a)

இந்தச்சுந்தரம் இல்லாவிட்டாலும் சுய காலில் நிற்க பழகிக் கொள்ள வேண்டும்.

b)

வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்

c)

வாழ்க்கையை வேதனைக்குரியதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது

d)

வாழ்க்கை ஒரு முறைதான். வாழ்ந்து பார்க்க வேண்டும்.

17.

இராதா சிவமணி குடும்பச்சிக்கல்களுக்கு சிவமனியின் நடவடிக்கையே காரணம், இதில் அவன் மேற்கொள்ளாத செயல் எது?

a)

முரட்டுத்தனம்

b)

பேராசை குணம்

c)

பெண்ணாசை

d)

குடும்ப வன்முறை

18.

நீண்ட கட்டுரைக்குரிய சட்டகத்தில் முன்னுரைக்கு அடுத்து கதைச்சுருக்கம் எழுத வேண்டும். கீழ்க் காண்பவனவற்றுள் எது முதல் வாக்கியம்?

a)

சுந்தரம் நோயோடு போராடியவாறு பல்வேறு குடும்ப சிக்கல்களையும் எதிர்நோக்குகிறார்.

b)

பணி ஓய்வுபெற்ற சுந்தரம் மூளைப் புற்றுநோயால் அவதியுறுகிறார்.

c)

இறுதி காலத்தைத் தன் அக்காள் அன்னபூரணியுடன் அந்திம காலத்தைக் கடத்துகிறார்.

d)

தன்னுடைய மரணத்துக்கு முன் பேரனையும் மனைவியையும் இழக்கின்றார்.

19.

அந்திம காலம் நாவலின் கதைப்பின்னலைச் சான்றுகளுடன் விளக்குக. கதைப்பின்னலில் எது தவறு?

a)

தொடக்கம் - சுந்தரத்தின் புற்று நோய் அறிகுறி

b)

வளர்ச்சி - இரம்லியின் மருத்துவம்

c)

சிக்கல் - இராதாவின் பொறுப்பின்மை

d)

உச்சம் - பரமா / ஜானகியின் இறப்பு

20.

"பழியும் பகட்டும் குடும்பத்தில் நுழைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கை சீரழியும்" , எனுங் கூற்றை ராதாவின் பாத்திரத்தின் வழி ஆராய்க. இவற்றுள் தொடர்பில்லாதது எது?

a)

காலத்தோடு ஒட்டி வாழும் வழி தெரிந்தவள்

b)

பிறர் உணர்வுக்கு மதிப்பளிக்காதவள்

c)

விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை இல்லாதவள்

d)

தன் தவற்றை உணராது கணவன் மீது பழி சுமத்துபவள்