wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தீர்வு காண்க

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு பொம்மையின் விலை RM 120.00 ஆகும். அம்மா அதே போன்ற 20 பொம்மைகளை வாங்கினார். அவர் எவ்வளவு பணம் செலுத்தியிருப்பார் ?

a)

RM 140.00

b)

RM 100.00

c)

RM 240.00

d)

RM 2 400.00

2.

திரு.விஜயன் மாணவர்களுக்கு RM 4 800க்கு 40 புத்தகங்கள் வாங்கினார். அவர் ஒரு புத்தகத்தை என்ன விலைக்கு வாங்கியிருப்பார் ?

a)

RM 4 840.00

b)

RM 120.00

c)

RM 800.00

d)

RM 1 200.00

3.

ஒரு சாரணர் இயக்கத்தில் 8 000 சாரணர்கள் 40 குழுவில் கலந்து கொண்டனர். அப்படியென்றால் ஒரு குழுவில் எத்தனை சாரணர்கள் இருப்பர் ?

a)

8 040

b)

20

c)

200

d)

4 000

4.

திரு. சரவணன் 15 000 கோழிகள் வளர்த்தார். அவர் கோழிகளை 50 கூண்டுகளில் சமமாக அடைத்தார். ஒவ்வொரு கூண்டிலும் எத்தனை கோழிகள் இருந்தன ?

a)

300

b)

15 500

c)

65 000

d)

3 000

5.

கடைக்காரர் ஒரு பெட்டியில் 98 அணிச்சல்களை அடுக்கினார். அவர் 100 பெட்டிகளில் எத்தனை அணிச்சல்களை அடுக்கி இருப்பார் ?

a)

198

b)

9 800

c)

980

d)

1 080

6.

ஆர்த்தி 3 400 தபால் தலைகளை வைத்திருந்தாள். விஜித்திரா அவள் வைத்திருந்த தபால் தலைகளின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாக வைத்திருந்தாள். ஆக, விஜித்திரா வைத்திருந்த தபால் தலைகளின் எண்ணிக்கை என்ன ?

a)

3 400

b)

1 360

c)

3 404

d)

13 600

7.

ஒரு மாம்பழச் சுவைபானம் தயாரிக்க 150 ml மாம்பழச்சாறும் 250 ml தண்ணீரும் தேவைப்படுகின்றது. திருமதி. மலர்விழி அதே போல் 5 மாம்பழச் சுவைபானம் தயாரிக்க எத்தனை ml மாம்பழச்சாறும் தண்ணீரும் பயன்படுத்தி இருப்பார் ?

a)

2 000 ml

b)

200 ml

c)

255 ml

d)

400 ml

8.

ஒரு தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு 80 070 பேனாக்களைத் தயாரித்தது. ஒரு பெட்டியில் 80 பேனாக்கள் வீதம் அடுக்கப்பட்டால், மீதம் எத்தனை பேனாக்கள் இருக்கும் ?

a)

80 150

b)

1 070

c)

1 000

d)

70

9.

ஒரு மகிழுந்தின் விலை RM 150 500 ஆகும். அப்பா அந்த மகிழுந்தை வாங்கி 5 தவணையில் செலுத்த முடிவெடுத்தார். அப்படியென்றால், அவர் ஒரு தவணையில் எவ்வளவு செலுத்த வேண்டும் ?

a)

RM 150 505

b)

RM 752 500

c)

RM 3 010

d)

RM 30 100

10.

முத்து தலா 80 808 kg கொண்ட எட்டு பாரந்தூக்கிகளை இறக்குமதி செய்தார். அந்தப் பாரந்தூக்கிகளின் மொத்த எடையை 8 ஆகப் பிரித்தால், ஒரு பாகம் எத்தனை kg ஆகும் ?

a)

80 816

b)

10 101

c)

646 464

d)

10 100