wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தீர்வு காண்க

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1 kg கோதுமையின் விலை RM 2.00 ஆகும். திருமதி.கலா 37 kg கோதுமை வாங்கினார். திருமதி. அரசி 13 kg கோதுமை வாங்கினார். அவர்கள் இருவரும் கடைக்காரரிடம் கொடுத்த பணம் எவ்வளவு ?

a)

RM 50.00

b)

RM 26.00

c)

RM 74.00

d)

RM 100.00

2.

திரு.கமால் 100 நாளில் மொத்தம் RM 3000.00ஐ சேமித்தார். அப்படியென்றால் ஒரு நாளில் அவர் எவ்வளவு சேமித்திருப்பார் ?

a)

RM 30.00

b)

RM 300 000.00

c)

RM 300.00

d)

RM 3 000.00

3.

ஒரு கணிதப் புதிர்ப் போட்டி 10 நிமிடம் 45 வினாடி நடத்தப்பட வேண்டும். அந்தப் புதிர்ப் போட்டி 5 சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தினால் ஒரு பகுதி எவ்வளவு நேரம் எடுக்கும் ?

a)

50 நிமிடம்

b)

225 வினாடி

c)

50 நிமிடம் 225 வினாடி

d)

2 நிமிடம் 9 வினாடி

4.

பள்ளியில் ஒரு கால்பந்தாட்டம் 1 மணி 30 நிமிடம் நடைபெறும். 4 ஆட்டம் நடைபெற எத்தனை மணி நேரம் எடுக்கும் ?

a)

4 மணி

b)

120 நிமிடம்

c)

6 மணி

d)

4 மணி 120 நிமிடம்

5.

திரு. ஜஸ்வான் சிங் ஒரு வாரத்தில் 42 மணி நேரம் மிதிவண்டி ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டார். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் அவர் பயிற்சி செய்திருப்பார் ?

a)

6 மணி

b)

42 மணி

c)

294 மணி

d)

49 மணி

6.

கமலா வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று மீண்டும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வர 12km தூரமாகும். அவள் ஒரு வாரத்தில் செல்லும் வழிப் பயணத்தை m இல் கணக்கிடுக ?

a)

84 m

b)

84 000 m

c)

8 400 m

d)

84 km

7.

ஒரு புட்டியில் 250 g கார முறுக்கு நிரப்பப்பட்டது. அதே போன்று 9 புட்டியில் எத்தனை kg கார முறுக்கு இருக்கும் ?

a)

2250 g

b)

2.25 kg

c)

259 g

d)

22.5 kg

8.

ஒரு பழத் தோட்டத்தில் 12 800 kg மாம்பழம் பறிக்கப்பட்டது. அந்தப் பழங்களைச் சம அளவில் 8 பெட்டியில் நிரப்பினால், ஒரு பெட்டியில் உள்ள மாம்பழத்தின் பொருண்மை kg இல் எவ்வளவு ?

a)

160 g

b)

12 808 kg

c)

102 400 g

d)

1 600 kg

9.

அத்தை 2 l 556 ml வாங்கிய பாலை 6 கிண்ணத்தில் சம அளவில் ஊற்றினால், ஒரு கிண்ணத்தில் உள்ள பாலின் கொள்ளளவு எத்தனை ml ?

a)

8 556 ml

b)

426 ml

c)

8 556 ml

d)

4.26 ml

10.

மாமா வீடு கட்ட 6 m 20 cm நீளமுள்ள 9 சட்டங்களை வாங்கினார். மாமா வாங்கிய சட்டங்களை நீள்வரிசையில் அடுக்கினால், மொத்த நீளத்தை m , cm இல் கூறுக ?

a)

55 m 80 cm

b)

15 m 20 cm

c)

54 m 180 cm

d)

6 m 29 cm