wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் 5.1 - திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தூய எண்ணங்களுடன் செயல்படுவதே சிறந்த அறமாகும் எனும் கருத்தை விளக்கும் திருக்குறள் யாது?

a)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து

அறன் ஆகுல நீர பிற.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

d)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

2.

சூழலுக்கு ஏற்ற திருக்குறள் யாது?

முகிலன்: அமுதா நீ ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறாயே! ஏன் அமுதா? அமுதா: முகிலன், நாம் நிறைய வாசிக்கும் போதுதான் நமக்கு அதிக விஷயங்கள் கிடைக்கும். அதோடு பொது அறிவும் பெருகும்.

முகிலன்: அப்படியா ! நானும் வாசிக்கப் போகிறேன்

a)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்கே உலகு

d)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

3.

குறளடியை நிறைவு செய்க.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

..................................................................

a)

உள்ளத்து ளெல்லாம் உளன்.

b)

இகழ்வாரைப் பொறுத்தல் தலை

c)

உள்ளத் தனையது உயர்வு

d)

இடுக்கண் களைவதாம் நட்பு.

4.

உள்ளத்தால் ................... தொழுகின் உலகத்தார் ..............................ளெல்லாம் உளன்

மேற்காணும் குறளில் விடுபட்ட சொற்கள் யாவை?

a)

கோவில் - லோகின்

b)

பொய்யா - உள்ளத்து

c)

உள்ளத்து - வனத்துக்

d)

ஊரில் - பொய்யா

5.

நன்றி ............ நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது ...........

a)

மறப்பது- நன்று

b)

நன்று - றன்றி

c)

அன்றே - மறப்பது

d)

மறப்பது- நன்றி

6.

கீழ்க்காணும் குறள் அடியின் பொருள் யாது?

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

a)

அன்பான சொற்களைக கொண்டு உண்மையாகப் பேசும்பொழுது இனிய நட்பபை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம்.

b)

கடுமையான சொற்களைப் பேசுவதால் வாழ்க்கையை நடத்த முடியும்

c)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடும் சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

d)

இனிய சொற்களைப் பயன்படுத்துவது அவனை கனி போன்ற வாழ்க்கை

இட்டுச்செல்லும்.

7.

கொடுக்கப்பட்டுள்ளதிருக்குறளில் எது கல்வியைப் பற்றியது அல்ல.

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

b)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

c)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

d)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

8.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்குப் பொருத்தமான திருக்குறள் எது?

ஒருவர் அடையத் தகுந்த செல்வங்களில் சிறந்த செல்வம் செவி வழி பெறும் அறிவுச் செல்வமாகும். அவ்வறிவுச் செல்வம் மற்ற செல்வங்களை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

a)

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

b)

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

d)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

9.

கீழ்காணும் பொருளை விளக்கும் திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி

c)

தெய்வத்துள் வைக்கப் படும்.

d)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

10.

பிழையின்றி எழுதப்பட்டுள்ள திருக்குறளை தெரிவு செய்க.

a)

வையத்துள் வாழ்வாங்கு வானுறையும் வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப் படும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

c)

வையத்துள் வாழும் தெய்வத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வைக்கப் படும்

d)

வைக்கப்படும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் வாழ்பவன் படும்