wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் செய்யுளின் கருத்து யாது?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லர் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பிறரிடம் கூறக் கூடாது

b)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.

c)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது.

d)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளை அப்படியே விட்டுவிடக் கூடாது.

2.

பிழையான விளக்கம் கொண்டுள்ள புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

எண்ணுவது உயர்வு – உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

b)

ஏறுபோல் நட – அஞ்சா மனத்துடன் செயல்பட வேண்டும்.

c)

ஓய்தல் ஒழி – எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இரு.

d)

கற்றது ஒழுகு – கற்றவற்றிற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்

3.

கீழ்க்காணும் கருத்துக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

a)

அச்சம் தவிர்

b)

ஆண்மை தவறேல்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

உடலினை உறுதிசெய்

4.

பட்டமளிப்பு விழாவில் தம் மகன் முனைவர் பட்டத்தைப் பெறும் காட்சியைப் பார்த்த அந்தத் தாய், இதுநாள் வரை தாம் பட்ட துன்பங்களை மறந்து _________________ .

a)

தலை எடுத்தார்.

b)

தோள் கொடுத்தார்.

c)

உச்சிக் குளிர்ந்தார்.

d)

மனப்பால் குடித்தார்.

5.

சரியான இணைமொழியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மகாகவி பாரதியாரின் ‘தமிழ் சுதந்திர தாகம்’, ‘அறிவே தெய்வம்’ போன்ற கவிதைகள் அன்றும் இன்றும் போற்றப்படுகின்றன.

b)

அரசர் குறைநிறை கொண்ட அப்பாதையில் பவனி வந்து நாட்டு நடப்பை அறிந்தார்.

c)

அடர்ந்த கிளைகளுடன் உருண்டு திரண்டிருந்த அந்த மரங்கள் சூறாவளியின் சீற்றத்தால் வேரோடு சாய்ந்தன.

d)

மாணவர்கள், கணினி மூலமாக ஆசிரியர் போதித்த அறிவியல் பாடத்தைக் கல்வி கேள்விகளோடு கற்றனர்.

6.
தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும்குளிர்ச்சியான தடாகம் போல... என்னும் விளக்கத்தைக் கொண்ட செய்யுள் அடி யாது?
a)
மாசில் வீணையும் மாலை மதியமும்
b)
வீசு தென்றலும் வீங்(கு) இளவேனிலும்
c)
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
d)
ஈசன் எந்தை இணையடி நிழலே
7.

இரங்கல் கூட்டத்தில் மறைந்த கவிஞரின் ____________ பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

a)

இன்ப துன்பங்களைப்

b)

ஆடை அணிகலன்களைப்

c)

அருமை பெருமைகளைப்

d)

கல்வி கேள்விகளைப்

8.

அறநெறி வழிநின்று வாழ்பவரைச் சிறப்பாகக் கூறும் குறட்பா யாது?

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

c)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

d)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

9.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


குணசேகரன் மிகவும் சுறுசுறுப்பானவர். தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று அவர் வெறுமனே இருப்பதில்லை. தம் வீட்டுக்கு அருகிலுள்ள நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு வருமானத்தைத் தேடிக் கொள்கிறார்.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

காலம் அழியேல்

c)

ஏறுபோல் நட

d)

ஓய்தல் ஒழி

10.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.


சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்குச் சாகாத்தன்மையைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்