Worksheetsதமிழ்மொழி இலக்கியம் மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடி யாது?
சந்தியா தன் பெற்றோரின் துணையோடு நடமாட்டுக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டத்தில் தன்னால் இயன்றதைப் பிறருக்குச் செய்தாள்.
ஒப்புர வொழுகு
உடையது விளம்பேல்
இயல்வது கரவேல்
படத்திற்குப் பொருந்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
கவிதைக்குப் பொருந்தும் கொன்றை வேந்தன் எது?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.
கீழ்க்காணும் செய்யுளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
எல்லார்க்கும் பெய்யும் மழை
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவர்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
நாக்கு நீளுதல்
உறுதி பூணுதல்
அவமானப்படுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
மகள் : அப்பா, நாம் குளிக்கும் இடத்தை நெருங்கி விட்டோமா?
அப்பா : ....... என்ற ஓசை கேட்கின்றதா? ஆம் நெருங்கி விட்டோம்.
சர சர
சல சல
கிலு கிலு
