NEW
Font size
Worksheetsஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள செயப்படுபொருள் யாது?
அம்மாவும் அத்தையும் சுவாமிக்கு மாலைக் கட்டுகிறார்கள்.
அத்தை
சுவாமி
மாலை
கட்டுகிறார்கள்
சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி பட்டம் செய்தான்.
தம்பி செய்த பட்டம்.
பட்டத்தைத் தம்பி செய்தான்.
பட்டம் தம்பியால் செய்யப்படும்.
பட்டம் தம்பியால் செய்யப்பட்டது
வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க.
மழையில் நனைந்து கொண்டே சிவா வீடு வந்து சேர்ந்தான்.
மழையில்
சிவா
வீடு
வந்து சேர்ந்தான்.
தவறான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அமுதன் ஓவியம் வரைந்தான்.
கவிதை அமுதாவால் பாடப்பட்டது.
வீடு அம்மாவால் துடைக்கப்பட்டது.
கடிதம் அண்ணனால் எழுதப்பட்டது.
செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தை எழுதுக.
திருவள்ளுவர் உலகம் போற்றும் திருக்குறளை இயற்றினார்.
உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.
உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படுகிறது
உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படும்.
உலகம் போற்றும் திருவள்ளுவரால்
திருக்குறள் இயற்றப்பட்டது.
செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து வந்தார்.
அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்தார்.
அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து வந்தார்.
தோட்டத்தில் காய்கறிகளை அப்பா பறித்து வந்தார்.
தோட்டத்தில் காய்கறிகள் அப்பாவால் பறித்து வரப்பட்டது.
கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பாலகுமாரன் காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
பாலகுமாரன்
காவல் துறை
அதிகாரியாக
பொறுப்பேற்றார்
வாக்கியத்தில் எழுவாய் சொல்லைத் தெரிவு செய்க.
பாலைவனத்தில் மக்கள் நீருக்காகப் பாலைவனப்பூங்காவை நாடிச் செல்வர்.
மக்கள்
நீருக்காக
பாலைவனத்தில்
பாலைவனப்பூங்காவை
செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மீன்கள் நீரில் நீந்தப்பட்டன.
மீன்கள் நீரில் நீந்தின.
ஆசிரியர் சொற்பொழிவால் ஆற்றப்பட்டாள்.
ஆசிரியர் சொற்பொழிவு ஆற்றினார்.
நீதி நூல்கள் ஒளவையாரால் இயற்றப்பட்டது.
ஒளவையார் நீதி நூல்கள் இயற்றினார்.
தேவாரம் கற்பகம் பாடப்பட்டது.
கற்பகம் தேவாரம் பாடினாள்.
செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சீலன் ஓவியம் தீட்டினான்.
ஓவியம் சீலனுக்குத் தீட்டப்பட்டது.
தமிழரசி படம் பார்த்தாள்.
படம் தமிழலரசிக்குப் பார்க்கப்பட்டது.
ஆசிரியர் அழகியைப் பாராட்டினார்.
அழகி ஆசிரியரால் பாராட்டப்பட்டார்.
அப்பா கூடை முடைந்தார்.
கூடை அப்பாவின் முடையப்பட்டது.
