NEW
Font size
WorksheetsUPSR தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
பால் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
அந்த நாயின் வால் நீண்டு இருந்தது.
வால் என்ற சொல், பெயர்ச்சொல்லின் எந்த வகையைச் சார்ந்தது?
பொருட்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
___________ காலம், திணை, எண், இடம், பால் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.
வினையெச்சம்
வினைமுற்று
பெயரெச்சம்
பெயர்ச்சொல்
பின்வருபனவற்றுள் எஃது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்?
வாசித்த நூல்
கேட்ட பாடல்
அழியாப் புகழ்
ஆடிப் பாடினான்
பின்வருபனவற்றுள் எஃது ஓர் இடைச்சொல் அன்று?
இன்னும்
ஓ
உம்
ஆம்
பின்வரும் கூற்றுகளுள் எது பிழையானது?
எல்லா வாக்கியங்களிலும் செயப்படுபொருள் இருக்கும்.
எல்லா வாக்கியங்களிலும் பயனிலை இருக்கும்.
எழுவாய்க்கு முதன்மை தருவது செய்வினை வாக்கியம்.
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
கோடிட்ட இடத்திற்கேற்ற மிகச் சிறந்த வினையடையைத் தெரிவு செய்க.
செல்வா, பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் ________ ஓடி முதல் பரிசினை வென்றான்.
கடுமையாக
அழகாக
வேகமாக
விவேகமாக
சரியான இடைச்சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
வாசிப்பதைக் காட்டிலும் சுவாரசியமான பொழுதுபோக்கு வேறெதுவும் இல்லை. ____________ , நம்மிடையே வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
மேலும்
எனவே
அதற்காக
ஆனாலும்
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்து வாக்கியத்தை நிறைவு செய்க.
உலகில் அழிந்துபோன பறவையினங்களுள் __________ ஒன்றாகும்.
அண்னமும்
அன்னமும்
அன்ணமும்
அண்ணமும்
வாக்கியத்தில் எழுவாயை அறிய எந்த வினாச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
யார்
ஏன்
எதை
எவ்வளவு
