wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள நான்காம் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குமரனுக்கு மருத்துவர் மருந்து கொடுத்து, சிகிச்சை அளித்தார்.

a)

காய்ச்சலால்

b)

குமரனுக்கு

c)

மருத்துவர்

d)

அளித்தார்

2.

சரியான நிகழ்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிங்கத்தைக் கண்ட மான்கள் மிரண்டு ஓடின.

b)

பள்ளி விடுமுறை காலங்களில் மாலா தன் வீட்டைச் சுத்தம் செய்வாள்.

c)

இளங்கலைப் படிப்பை முடித்துவிட்ட அரவிந்த் தனக்குப் பொருத்தமான வேலையைத் தேடுகிறான்.

d)

கடைக்குச் சென்ற மாறன் கால் இடறிக் கீழே விழுந்தான்.

3.

சரியான எதிர்காலச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

வரைந்தான்

b)

வரைவான்

c)

வரைகின்றான்

d)

வரைகிறான்

4.

பின்வருபனவற்றுள் எது மெய்யெழுத்து அன்று?

a)

த்

b)

ம்

c)

ழ்

d)

5.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.


தம் சிஷ்யர்கள் ஐவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்ததால் அந்த மஹாகுரு அன்று வகுப்பு நடத்தவில்லை.

a)

சிஷ்யர்கள், ஐவருக்கு, ஜலதோஷம்

b)

சிஷ்யர்கள், ஐவருக்கு, மஹாகுரு

c)

சிஷ்யர்கள், மஹாகுரு, ஜலதோஷம்

d)

மஹாகுரு, ஐவருக்கு, ஜலதோஷம்

6.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காலப்பெயரைத் தெரிவு செய்க.


நேற்று பெய்த கனத்த மழையால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.

a)

நேற்று

b)

மரங்கள்

c)

வேரோடு

d)

சாய்ந்தன

7.
பல ஆண்டுகள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டதும் _______பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
a)
தன்னுடைய
b)
தம்முடைய
c)
தங்களின்
d)
தாங்களின்
8.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

தெற்கு + நாடு = தென்னாடு

b)

பசுமை + தளிர் = பசுத்தளிர்

c)

இளம் + செடி = இளஞ்செடி

d)

பொன் + குடம் = பொற்குடம்

9.

கீழ்க்காண்பனவற்றுள் எது உயிர்மெய்க் குறில் எனப்படும்?

a)

கூ

b)

து

c)

ரூ

d)

மூ

10.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஏகாரத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மேளம்

b)

சோறு

c)

வௌவால்

d)

மைதானம்